PT 4.1.10

வைகுந்தத்தில் தேவரோடு இருப்பர்

1257 காரார்ந்ததிருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம் *
சீரார்ந்தபொழில்நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல் *
கூரார்ந்தவேற்கலியன்கூறுதமிழ்பத்தும்வல்லார் *
ஏரார்ந்தவைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2)
PT.4.1.10
1257 ## kār ārnta tirumeṉik * kaṇṇaṉ amarntu uṟaiyum iṭam *
cīr ārnta pŏzhil nāṅkait * tiruttevaṉār tŏkaimel **
kūr ārnta vel kaliyaṉ * kūṟu tamizhp pattum vallār *
er ārnta vaikuntattu * imaiyavaroṭu iruppāre-10

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1257. Kaliyan, the poet with a sharp spear, composed ten Tamil pāsurams on the dark cloud-like divine Kannan, god of Thiruthevanārthohai in Nāngai surrounded with beautiful groves. If devotees learn and recite these ten pāsurams they will reach lovely Vaikundam and stay with the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர்ந்த மேகத்தை ஒத்த; திருமேனி திருமேனியுடைய; கண்ணனமர்ந்து கண்ணன் அமர்ந்து; உறையும் இடம் இருக்குமிடம்; சீர் ஆர்ந்த சிறந்த அழகிய; பொழில் சோலைகளையுடைய; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகைமேல் தொகையில்; கூர் ஆர்ந்த கூர்மையான; வேல் வேலையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; கூறு அருளிச்செய்த; தமிழ்ப் பத்தும் தமிழ்ப் பாசுரங்களை; வல்லார் கற்க வல்லார்; ஏர் ஆர்ந்த நன்மை மிக்க; வைகுந்தத்து வைகுண்டத்தில்; இமையவரோடு நித்யஸூரிகளோடு; இருப்பாரே கூடி இருப்பர்
kār with cloud; ār matching; thirumĕni having divine form; kaṇṇan krishṇan; amarndhu firmly; uṛaiyum residing; idam being the abode; sīr ārndha beautiful; pozhil having gardens; nāngai in thirunāngūr; thiruththĕvanār thogai on the dhivyadhĕṣam named thiruththĕvanār thogai; kūr ārndha very sharp; vĕl having the weapon, spear; kaliyan thirumangai āzhvār; kūṛu mercifully spoke; thamizh in the dhivya prabandham in dhrāvida (thamizh) language; paththum these ten pāsurams; vallār those who have learnt; ĕr ārndha very noble; vaigundhaththu in ṣrīvaikuṇtam; imaiyavarŏdu being united with nithyasūris; iruppār will eternally reside there.