Your browser does not support the audio element.
audio
1068 விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும்
வேழமும்பாகனும்வீழ *
செற்றவன்தன்னை * புரமெரிசெய்த
சிவனுறுதுயர்களைதேவை *
பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு
பார்த்தன்றன்தேர்முன்நின்றானை *
சிற்றவைபணியால்முடிதுறந் தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
1069 வேதத்தைவேதத்தின் சுவைப்பயனை
விழுமியமுனிவர்விழுங்கும் *
கோதிலின்கனியை நந்தனார்களிற்றைக்
குவலயத்தோர்தொழுதேத்தும் *
ஆதியைஅமுதைஎன்னையாளுடை
யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள்வாழும் * மாடமாமயிலைத்
1070 வஞ்சனைசெய்யத் தாயுருவாகி
வந்தபேய்அலறிமண்சேர *
நஞ்சமர்முலையூடு உயிர்செகவுண்ட
நாதனைத் தானவர்கூற்றை *
விஞ்சைவானவர் சாரணர்சித்தர்
வியந்துதுதிசெய்யப்பெண்ணுருவாகி *
அஞ்சுவையமுதம்அன்று அளித்தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
1071 இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த
எழில்விழவில்பழநடைசெய் *
மந்திரவிதியில்பூசனைபெறாது
மழைபொழிந்திடத்தளர்ந்து * ஆயர்
எந்தமோடு இனவாநிரைதளராமல்
எம்பெருமான்! அருளென்ன *
அந்தமில்வரையால்மழைதடுத் தானைத்
1072 இன்துணைப்பதுமத்து அலர்மகள்தனக்கும்
இன்பன் நற்புவிதனக்குஇறைவன் *
தந்துணைஆயர்பாவை நப்பின்னை
தனக்குஇறை மற்றையோர்க்கெல்லாம்
வன்துணை * பஞ்சபாண்டவர்க்காகி
வாயுரைதூதுசென்றியங்கும்
என்துணை * எந்தைதந்தைதம்மானைத்
1073 அந்தகன்சிறுவன் அரசர்தமரசற்கிளையவன்
அணியிழையைச்சென்று *
எந்தமக்குஉரிமைசெய்யெனத்தரியாது
சந்தமல்குழலாளலக்கண் நூற்றுவர்தம்
பெண்டிரும்எய்திநூலிழப்ப *
இந்திரன்சிறுவன் தேர்முன்நின்றானைத்
1074 பரதனும்தம்பிசத்துருக்கனனும்
இலக்குமனோடுமைதிலியும் *
இரவுநன்பகலும்துதிசெய்யநின்ற
இராவணாந்தகனைஎம்மானை *
குரவமேகமழும் குளிர்ப்பொழிலூடு
குயிலொடுமயில்கள்நின்றால *
இரவியின்கதிர்கள் நுழைதல்செய்தறியாத்
1075 பள்ளியிலோதிவந்ததன்சிறுவன்
வாயில்ஓராயிரநாமம் *
ஒள்ளியவாகிப்போத ஆங்குஅதனுக்கு
ஒன்றுமோர்பொறுப்பிலனாகி *
பிள்ளையைச் சீறிவெகுண்டு தூண்புடைப்பப்
பிறையெயிற்றனல்விழிபேழ்வாய் *
தெள்ளியசிங்கமாகியதேவைத்
1076 மீனமர்பொய்கைநாண்மலர்கொய்வான்
வேட்கையினோடுசென்றிழிந்த *
கானமர்வேழம் கையெடுத்தலறக்
கராஅதன்காலினைக்கதுவ *
ஆனையின்துயரம்தீரப்புள்ளூர்ந்து
சென்றுநின்றுஆழிதொட்டானை *
தேனமர்சோலைமாடமாமயிலைத்
1077 மன்னுதண்பொழிலும்வாவியும்மதிளும்
மாடமாளிகையும்மண்டபமும் *
தென்னன்தொண்டையர்கோன்செய்தநல்மயிலைத்
திருவல்லிக்கேணிநின்றானை *
கன்னிநன்மாட மங்கையர்தலைவன்
காமருசீர்க்கலிகன்றி *
சொன்னசொன்மாலைபத்துடன்வல்லார்
சுகமினிதாள்வர்வானுலகே. (2)