The Abode of Him Who Stopped the Rain with Mt. Govardhana
கோவர்த்தன மலையால் மழை தடுத்தவன் தங்கும் இடம்
1071 இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த
எழில்விழவில்பழநடைசெய் *
மந்திரவிதியில்பூசனைபெறாது
மழைபொழிந்திடத்தளர்ந்து * ஆயர்
எந்தமோடு இனவாநிரைதளராமல்
எம்பெருமான்! அருளென்ன *
அந்தமில்வரையால்மழைதடுத் தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.