The Abode of Him Who Graced Prahlāda
பிரகலாதனுக்கு அருளியவன் தங்கும் இடம்
1075 பள்ளியிலோதிவந்ததன்சிறுவன்
வாயில்ஓராயிரநாமம் *
ஒள்ளியவாகிப்போத ஆங்குஅதனுக்கு
ஒன்றுமோர்பொறுப்பிலனாகி *
பிள்ளையைச் சீறிவெகுண்டு தூண்புடைப்பப்
பிறையெயிற்றனல்விழிபேழ்வாய் *
தெள்ளியசிங்கமாகியதேவைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)