PT 2.3.6

The Abode of Him Who Graced Pāñcālī (Draupadī)

பாஞ்சாலிக்கு அருள் செய்தவன் தங்கும் இடம்

1073 அந்தகன்சிறுவன் அரசர்தமரசற்கிளையவன்

அணியிழையைச்சென்று *

எந்தமக்குஉரிமைசெய்யெனத்தரியாது

எம்பெருமான்! அருளென்ன *

சந்தமல்குழலாளலக்கண் நூற்றுவர்தம்

பெண்டிரும்எய்திநூலிழப்ப *

இந்திரன்சிறுவன் தேர்முன்நின்றானைத்

திருவல்லிக்கேணிக்கண்டேனே.

Text size