The Abode of Him Who Dispelled Gajendra's Sorrow
கஜேந்திரன் துயர் தீர்த்தவன் தங்கும் இடம்
1076 மீனமர்பொய்கைநாண்மலர்கொய்வான்
வேட்கையினோடுசென்றிழிந்த *
கானமர்வேழம் கையெடுத்தலறக்
கராஅதன்காலினைக்கதுவ *
ஆனையின்துயரம்தீரப்புள்ளூர்ந்து
சென்றுநின்றுஆழிதொட்டானை *
தேனமர்சோலைமாடமாமயிலைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)