PT 2.3.3

The Abode of the Giver of Nectar is Tiruvallikkēṇi

அமுதமளித்தவன் வாழும் இடம் திருவல்லிக்கேணி

1070 வஞ்சனைசெய்யத் தாயுருவாகி

வந்தபேய்அலறிமண்சேர *

நஞ்சமர்முலையூடு உயிர்செகவுண்ட

நாதனைத் தானவர்கூற்றை *

விஞ்சைவானவர் சாரணர்சித்தர்

வியந்துதுதிசெய்யப்பெண்ணுருவாகி *

அஞ்சுவையமுதம்அன்று அளித்தானைத்

திருவல்லிக்கேணிக்கண்டேனே.

Text size