The Abode of the Husband of Nappiṉṉai
நப்பின்னையின் மணாளன் தங்கும் இடம்
1072 இன்துணைப்பதுமத்து அலர்மகள்தனக்கும்
இன்பன் நற்புவிதனக்குஇறைவன் *
தந்துணைஆயர்பாவை நப்பின்னை
தனக்குஇறை மற்றையோர்க்கெல்லாம்
வன்துணை * பஞ்சபாண்டவர்க்காகி
வாயுரைதூதுசென்றியங்கும்
என்துணை * எந்தைதந்தைதம்மானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.