Chapter 9

Proverb Songs - (புள் உரு)

பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு
Proverb Songs - (புள் உரு)
These verses are composed as if the mother of Parakala Nayaki, who deeply loves the Lord, addresses Krishna using proverbs. She is aware of her daughter's immense love for the Lord and is distressed by the Lord's apparent indifference and failure to unite with her daughter. The mother questions the Lord in each verse, using proverbs to convey her concerns + Read more
நற்றாய் கண்ணனை வேண்டல் பழமொழியால் பணிந்துரைத்த பாட்டு. தன் மகள்(பரகால நாயகி) பகவான்மீது கொண்டுள்ள அளவற்ற காதலையும், அதற்கேற்பப் பகவான் வந்து தன் மகளோடு கலக்காமல் வாளா இருப்பதையும் தாய் அறிந்தாள். எம்பெருமானே! இம்மகளை இவ்வாறு (துன்புறுமாறு) விடலாமா? இவ்வாறு இருப்பது உன் பெருமைக்குத் தகுமா? என்பதை ஒவ்வொரு பழமொழியைக் கொண்ட ஒவ்வொரு பாசுரத்தினால் பகவானிடம் அந்தத் தாய் கூறுதல்போல் அமைந்துள்ளது இப்பகுதி.
Verses: 1932 to 1941
Grammar: Eṉsīr Āsiriya Viruththam / என்சீர் ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will increase devotion and wealth
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 10.9.1

1932 புள்ளுருவாகிநள்ளிருள்வந்த
பூதனைமாள * இலங்கை
ஒள்ளெரிமண்டியுண்ணப்பணித்த
ஊக்கமதனைநினைந்தோ? *
கள்ளவிழ்கோதைகாதலும்
எங்கள்காரிகைமாதர்கருத்தும் *
பிள்ளைதன்கையில்கிண்ணமேயொக்கப்
பேசுவதுஎந்தைபிரானே! (2)
1932 ## புள் உரு ஆகி நள் இருள் வந்த *
பூதனை மாள * இலங்கை
ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த *
ஊக்கம் அதனை நினைந்தோ? **
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் *
காரிகை மாதர் கருத்தும் *
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்கப் *
பேசுவது? எந்தை பிரானே 1
1932 ## pul̤ uru āki nal̤ irul̤ vanta *
pūtaṉai māl̤a * ilaṅkai
ŏl̤ ĕri maṇṭi uṇṇap paṇitta *
ūkkam-ataṉai niṉainto? **
kal̤ avizh kotai kātalum ĕṅkal̤ *
kārikai mātar karuttum *
pil̤l̤ai-taṉ kaiyil kiṇṇame ŏkkap *
pecuvatu? ĕntai pirāṉe-1

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1932. Her mother says, “You, the heroic lord, burnt Lankā and you drank the milk of the devil Putanā when she came in the middle of the night and killed her. Our young girls decorated with flowers dripping with honey love you, but you ignore their love and don’t care about them— you’re just like the mothers who take away a cup of milk from their children’s hands whenever they want and don’t worry about it. What can I say about you?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தை பிரானே! எம் பிரானே!; எங்கள் எங்கள் பெண்; கள் அவிழ் தேன் துளிர்க்கும் பூச்சூடிய; கோதை கூந்தலையுடைய; காதலும் என்மகளின் ஆசையையும்; காரிகை அக்காதலைப் பழிக்கும்; மாதர் கருத்தும் பெண்களின் கருத்தையும்; பிள்ளை தன் சிறுபிள்ளையின்; கையில் கையிலுள்ள; கிண்ணமே கிண்ணத்தை; ஒக்க வாங்கி தூர எறிவது; பேசுவது? போன்று எண்ணலாமோ? இதை; புள் பறவை பறந்தால் பயப்படும்; உரு ஆகி உருவத்தையுடையவளாக; நள் இருள் வந்த நள் இருளில் வந்த; பூதனை பூதனை; மாள மாளும்படியாகவும்; இலங்கை இலங்கையை; ஒள் எரி ஒளியுள்ள அக்னி; மண்டி சூழ்ந்து; உண்ண உண்ணும்படியும்; பணித்த செய்தருளின; ஊக்கம் மிடுக்கை உடைய; அதனை நீ என் பெண்ணைப் பற்றி என்ன; நினைந்தோ நினைக்கின்றாயோ?

PT 10.9.2

1933 மன்றில்மலிந்துகூத்துவந்தாடி
மால்விடையேழுமடர்த்து * ஆயர்
அன்றுநடுங்க ஆனிரைகாத்த
ஆண்மைகொலோ? அறியேன்நான் *
நின்றபிரானே! நீள்கடல்வண்ணா!
நீயிவள்தன்னைநின்கோயில் *
முன்றிலெழுந்தமுருங்கையில்தேனா
முன்கைவளைகவர்ந்தாயே.
1933 மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி *
மால் விடை ஏழும் அடர்த்து * ஆயர்
அன்று நடுங்க ஆ நிரை காத்த *
ஆண்மை கொலோ? அறியேன் நான் **
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா *
நீ இவள் தன்னை நின் கோயில் *
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா *
முன் கை வளை கவர்ந்தாயே 2
1933 maṉṟil malintu kūttu uvantu āṭi *
māl viṭai ezhum aṭarttu * āyar
aṉṟu naṭuṅka ā-nirai kātta *
āṇmai kŏlo? aṟiyeṉ nāṉ **
niṉṟa pirāṉe nīl̤ kaṭal vaṇṇā *
nī ival̤-taṉṉai niṉ koyil *
muṉṟil ĕzhunta muruṅkaiyil teṉā *
muṉ kai val̤ai kavarntāye-2

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1933. Her mother says, “You, the ocean-colored lord of Thirumālai, danced the kuthu dance in the middle of the village, you subdued the seven bulls to marry Nappinnai, and you protected the terrified cowherds and the cows from the storm with Govardhanā mountain. When you made my daughter’s bangles grow loose and fall, you did it as if you were taking honey from the murungai tree that is in the front of your temple. Is this because you have so much strength from your heroic deeds?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்ற திருமலையில நிற்கும்; பிரானே! பிரானே!; நீள் கடல் விசாலமான கடல்போன்ற; வண்ணா! வடிவையுடையவனே!; நீ நின் கோயில் கோயில்; முன்றில் முற்றத்திலுள்ள; முருங்கையில் முருங்கை மரத்தில் எழுந்த; தேனா தேனை எளிதாக எடுத்தது போல்; இவள் தன்னை இப்பெண்மகளின்; முன் கை முன் கை; வளை வளையல்கள் உன் பிரிவால்; கவர்ந்தாயே எளிதாகக் கவர்ந்தாயோ?; மன்றில் மலிந்து நாறசந்தியில் நின்று; உவந்து மனமுவந்து; கூத்து ஆடி குடக்கூத்தாடியது; மால் விடை கறுத்த காளைகள்; ஏழும் ஏழையும்; அடர்த்து அடக்கியது; அன்று இந்திரன் கல்மாரி பொழிந்த அன்று; ஆயர் நடுங்க இடையர்கள் நடுங்கி நிற்க; ஆ நிரை பசுக்கூட்டங்களை; காத்த காத்தது ஆகிய; ஆண்மை அனைத்தும்; கொலோ? ஆண்மைதானோ?; அறியேன் நான் நான் உன்னை அறியேன்

PT 10.9.3

1934 ஆர்மலியாழிசங்கொடுபற்றி
ஆற்றலை ஆற்றல்மிகுத்து *
கார்முகில்வண்ணா! கன்சனைமுன்னம்
கடந்தநின்கடுந்திறல்தானோ *
நேரிழைமாதைநித்திலத்தொத்தை
நெடுங்கடலமுதனையாளை *
ஆரெழில்வண்ணா! அங்கையில்வட்டாம்
இவளெனக்கருதுகின்றாயே.
1934 ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி *
ஆற்றலை ஆற்றல் மிகுத்து *
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் *
கடந்த நின் கடுந் திறல் தானோ **
நேர் இழை மாதை நித்திலத் தொத்தை *
நெடுங் கடல் அமுது அனையாளை *
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் *
இவள் எனக் கருதுகின்றாயே? 3
1934 ār mali āzhi caṅkŏṭu paṟṟi *
āṟṟalai āṟṟal mikuttu *
kār mukil vaṇṇā kañcaṉai muṉṉam *
kaṭanta niṉ kaṭun tiṟal tāṉo **
ner izhai mātai nittilat tŏttai *
nĕṭuṅ kaṭal amutu aṉaiyāl̤ai *
ār ĕzhil vaṇṇā am kaiyil vaṭṭu ām *
ival̤ ĕṉak karutukiṉṟāye?-3

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1934. Her mother says, “ O lovely god, you have the color of a dark cloud, and the mighty discus and conch you carry in your hands make you even more heroic. My dear daughter who is precious as a garland of pearls is adorned with beautiful ornaments. She is as sweet as the nectar from the large ocean. You think that she is like a sweet ball of jaggery in your hands. Is this because you are heroic and conquered Kamsan?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் முகில் காளமேகம் போன்ற; வண்ணா! நிறமுடையவனே!; ஆர் எழில் மிக்க; வண்ணா! அழகிய வடிவுடையவனே!; முன்னம் முன்பு ஒரு சமயம்; ஆர் மலி கூர்மையான; ஆழி சக்கரத்தையும்; சங்கொடு சங்கையும்; பற்றி கையில் பற்றி; ஆற்றலை மிடுக்கை; ஆற்றல் மிகுத்து மிகைப்படுத்தி; கஞ்சனை கம்சனை; கடந்த நின் கடும் அழித்த உன் வலிய; திறல் தானோ பராக்ரமத்தை நினைத்தோ; அனையாளை என் மகளான இவளை எளிதாக நினைத்திருக்கிறாய்; நேர் நேர்மையான அழகிய; இழை ஆபரணங்களையுடையவளும்; நெடும் கடலில் தோன்றிய; கடல் அம்ருதம் போன்றவளும்; நித்தில முத்து மாலை; தொத்தை போன்றவளுமான; மாதை பெண்ணைக் குறித்து; அம் கையில் வட்டு ஆம் உள்ளங்கை; அமுது இவள் கருப்பஙகட்டிபோன்றவள் இவள்; என அனுபவிக்கவும் உபேக்ஷிக்கவும் தகுந்தவள்; கருதுகின்றாயே என்று கருதுகின்றாய் போலும்

PT 10.9.4

1935 மல்கியதோளும்மானுரியதளும்
உடையவர்தமக்கும்ஓர்பாகம் *
நல்கியநலமோ? நரகனைத்தொலைத்த
கரதலத்தமைதியின்கருத்தோ? *
அல்லியங்கோதையணிநிறங்கொண்டுவந்து
முன்னேநின்றுபோகாய் *
சொல்லியென்? நம்பீ! இவளைநீ
உங்கள்தொண்டர்கைத்தண்டென்றவாறே.
1935 மல்கிய தோளும் மான் உரி அதளும் *
உடையவர் தமக்கும் ஓர் பாகம் *
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த *
கரதலத்து அமைதியின் கருத்தோ? **
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு
வந்து * முன்னே நின்று போகாய் *
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் *
தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே? 4
1935 malkiya tol̤um māṉ uri atal̤um *
uṭaiyavar-tamakkum or pākam *
nalkiya nalamo? narakaṉait tŏlaitta *
karatalattu amaitiyiṉ karutto? **
alli am kotai aṇi niṟam kŏṇṭu
vantu * muṉṉe niṉṟu pokāy *
cŏlli ĕṉ-nampi ival̤ai nī uṅkal̤ *
tŏṇṭar kait taṇṭu ĕṉṟa āṟe?-4

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1935. Her mother says, “You gave part of your body to Shivā who has round arms and wears a deer skin. Your strong hands killed Narakāsuran. You have stolen the beautiful color of my daughter whose hair is decorated with alli garlands. You stand in front of her always and don’t go away. What can I say? O Nambi, you seem to think she is like a stick in the hands of your servants. What can I say?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்கிய பணைத்த; தோளும் தோள்களையும்; மான் உரி அதளும் மான் தோலையும்; உடையவர் தமக்கும் உடைய சிவனுக்கு; ஓர் பாகம் உன் சரீரத்தில் ஒரு பகுதியை; நல்கிய கொடுத்திருக்கிறோம் என்கிற; நலமோ? பெருமையை நினைத்தோ?; நரகனை நரகாசுரனை; தொலைத்த அழித்த; கரதலத்து கையில் உண்டான; அமைதியின் மிடுக்கை; கருத்தோ? நினைத்தோ?; அல்லி அழகிய; அம் கோதை மாலை அணிந்த; அணி நிறம் இவளின் அழகிய நிறத்தை; கொண்டு அபகரித்ததும் அன்றி; வந்து முன்னே இவள் முன்னே; நின்று வந்து நின்று உன் அழகைக் காட்டி; போகாய் போகிறாய் இல்லையே; நீ இவளை உங்கள் நீ இவளை; தொண்டர் கை அடியார் கையிலுள்ள; தண்டு தடியைப்போலே எளிதாக; என்ற ஆறே? நினைத்திருக்கிறாயோ?; நம்பீ! ஸ்வாமி!; சொல்லி என் இதைப் பேசி என்ன பயன்?

PT 10.9.5

1936 செருவழியாதமன்னர்கள்மாளத்
தேர்வலங்கொண்டுஅவர்செல்லும் *
அருவழிவானம்அதர்படக்கண்ட
ஆண்மைகொலோ? அறியேன்நான் *
திருமொழிஎங்கள்தேமலர்க்கோதை
சீர்மையைநினைந்திலை அந்தோ! *
பெருவழிநாவற்கனியினும்எளியள்
இவளெனப்பேசுகின்றாயே.
1936 செரு அழியாத மன்னர்கள் மாளத் *
தேர் வலம் கொண்டு அவர் செல்லும் *
அரு வழி வானம் அதர்படக் கண்ட *
ஆண்மை கொலோ? அறியேன் நான் **
திருமொழி எங்கள் தே மலர்க் கோதை *
சீர்மையை நினைந்திலை அந்தோ *
பெரு வழி நாவல் கனியினும் எளியள் *
இவள் எனப் பேசுகின்றாயே 5
1936 cĕru azhiyāta maṉṉarkal̤ māl̤at *
ter valam kŏṇṭu avar cĕllum *
aru vazhi vāṉam atarpaṭak kaṇṭa *
āṇmai kŏlo? aṟiyeṉ nāṉ **
tirumŏzhi ĕṅkal̤ te malark kotai *
cīrmaiyai niṉaintilai anto *
pĕru vazhi nāval kaṉiyiṉum ĕl̤iyal̤ *
ival̤ ĕṉap pecukiṉṟāye-5

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1936. Her mother says, “Alas, you don’t think of the beauty of my daughter who speaks sweetly and whose hair is decorated with garlands that drip honey. You say she is not even as good as a berry fruit lying on a path. I don’t understand. Is it because you are heroic and rode on a chariot and destroyed the pride of the kings in Bhārathā war, sending them on the path to the sky?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செரு போர்க்களத்தில்; அழியாத தோற்றறியாத; மன்னர்கள் மாள மன்னர்கள் மாள; தேர் தேரின் மிடுக்கை; வலங்கொண்டு வலிமையை கொண்டு; அவர் அவ்வரசர்கள்; செல்லும் போகக்கூடிய; அரு அருமையான வீர; வழி வழியை உடைய; வானம் ஸ்வர்க்கத்தை; அதர்படக் கண்ட வழியாக்கிய; ஆண்மை ஆண்மையை; கொலோ? நினைத்தோ?; அறியேன் நான் நான் அறியேன்; எங்கள் எங்களுடைய; திருமொழி இனிய பேச்சையுடைய; தே மலர் தேனுள்ள மலர்களணிந்த; கோதை இப்பெண்ணின்; சீர்மையை சிறப்பை; நினைந்திலை அறியவில்லை; அந்தோ! அந்தோ!; பெரு வழி வழியில் விழுந்து கிடக்கும்; நாவல் நாவல் பழத்தை; கனியினும் காட்டிலும்; எளியள் இவள் எளியள் இவள்; என என்று; பேசுகின்றாயே! நினைத்திருக்கிறாயோ?

PT 10.9.6

1937 அரக்கியராகம்புல்லெனவில்லால்
அணிமதிளிலங்கையார்கோனை *
செருக்கழித்துஅமரர்பணியமுன்னின்றசேவகமோ?
செய்ததின்று *
முருக்கிதழ்வாய்ச்சிமுன்கைவெண்சங்கம்கொண்டு
முன்னேநின்றுபோகாய் *
எருக்கிலைக்காகஎறிமழுவோச்சல்
என்செய்வது? எந்தைபிரானே!
1937 அரக்கியர் ஆகம் புல் என வில்லால் *
அணி மதிள் இலங்கையார் கோனை *
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற *
சேவகமோ செய்தது இன்று? **
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் *
கொண்டு முன்னே நின்று போகாய் *
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் *
என் செய்வது? எந்தை பிரானே 6
1937 arakkiyar ākam pul ĕṉa villāl *
aṇi matil̤ ilaṅkaiyār-koṉai *
cĕrukku azhittu amarar paṇiya muṉ niṉṟa *
cevakamo cĕytatu iṉṟu? **
murukku itazh vāycci muṉ kai vĕṇ caṅkam *
kŏṇṭu muṉṉe niṉṟu pokāy *
ĕrukku ilaikku āka ĕṟi mazhu occal *
ĕṉ cĕyvatu? ĕntai pirāṉe-6

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1937. Her mother says, “What is this you are doing now? You made the white conch bangles of my daughter grow loose whose mouth is as red as the petals of a murukkam flower, and you stand in front of her and don’t leave. Is that because with your bow you destroyed the pride of the king of Lankā surrounded with beautiful forts and made the gods serve you? O father! Why should anyone need to throw an axe just to make an erukkam leaf fall?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் அரக்கியர் முன்பு அரக்கியர்; ஆகம் மார்பில்; புல் மாங்கல்யம் இல்லாது; என சூன்யமாகும்படி; அணி அழகிய; மதிள் மதிள்களையுடைய; இலங்கையர் இலங்கை அரசன்; கோனை ராவணனை; வில்லால் வில்லால்; செருக்கு அவன் கர்வத்தை; அழித்து அழித்த; சேவகமோ பராக்கிரமத்தை நினைத்தோ; அமரர் பணிய தேவர்கள் பணிந்து; நின்ற வணங்கிய; செய்தது இன்று உன் வீரமோ; முருக்கு இதழ் முருங்க பூப்போன்ற; வாய்ச்சி அதரத்தையுடைய இப் பெண்ணின்; முன் கை முன்கையிலுள்ள; வெண் சங்கம் வெளுத்த வளையல்களை; கொண்டு முன்னே பறித்துக்கொண்டதும் அன்றி; நின்று கண்ணெதிரே தோன்றி; போகாய் அழகைக்காட்டி போவதில்லை; எந்தை பிரானே! எம்பெருமானே!; எருக்கு எருக்கு இலையை; இலைக்கு ஆக உதிர்ப்பதற்காக; எறி எறியப்படும்; மழு கோடாலியை எடுத்து; என் செய்வது? ஓங்கியடிப்பது எதற்கு?

PT 10.9.7

1938 ஆழியந்திண்தேரரசர்வந்திறைஞ்ச
அலைகடலுலகம்முன்னாண்ட *
பாழியந்தோளோராயிரம்வீழப்
படைமழுப்பற்றியவலியோ? *
மாழைமென்னோக்கிமணிநிறங்கொண்டுவந்து
முன்னேநின்றுபோகாய் *
கோழிவெண்முட்டைக்குஎன்செய்வது? எந்தாய்!
குறுந்தடிநெடுங்கடல்வண்ணா!
1938 ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச *
அலை கடல் உலகம் முன் ஆண்ட *
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழப் *
படை மழுப் பற்றிய வலியோ **
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு
வந்து * முன்னே நின்று போகாய்? *
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய்! *
குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா 7
1938 āzhi am tiṇ ter aracar vantu iṟaiñca *
alai kaṭal ulakam muṉ āṇṭa *
pāzhi am tol̤ or āyiram vīzhap *
paṭai mazhup paṟṟiya valiyo **
māzhai mĕṉ nokki maṇi niṟam kŏṇṭu
vantu * muṉṉe niṉṟu pokāy? *
kozhi vĕṇ muṭṭaikku ĕṉ cĕyvatu-ĕntāy! *
kuṟuntaṭi? nĕṭuṅ kaṭal vaṇṇā-7

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1938. Her mother says, “O lord, you are our father with the color of the large ocean. You stole the shining color of my daughter whose glance is as soft as a doe’s, and you keep standing in front of her always, not going away. Why should anyone need to use even a small stick to make an egg break for the chick to emerge? Do you do these things because you are heroic and used your axe to cut off the thousand strong arms of Bānāsuran who ruled the world surrounded by oceans, making many kings riding strong chariots with lovely wheels come and obey him?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடுங் கடல் பரந்த கடல்; வண்ணா! போன்றவனே!; எந்தாய்! எம்பெருமானே!; ஆழி அம் சக்கரத்தோடு கூடின; திண் வலிமையான; தேர் தேரை நடத்தவல்ல; அரசர் வந்து தோற்ற அரசர்கள் வந்து; இறைஞ்ச காலில் விழுந்து வணங்க; அலை கடல் அலைகடல் சூழ்ந்த; உலகம் உலகங்களை; முன் முன்பு அரசாண்ட; ஆண்ட கார்த்தவீரியார்ஜுனனுடைய; ஓர் ஆயிரம் ஓர் ஆயிரம்; பாழி அம் அழகிய வலிய; தோள் வீழ தோள்கள் இற்று விழும்படியாக; படை மழுப் பற்றிய கோடாலியை ஏந்திய; வலியோ? மிடுக்கை நினைத்தோ?; மாழை மென் மென்மையான மான் விழியுடைய; நோக்கி பெண்ணின்; மணி நிறம் நிறத்தை; கொண்டு கவர்ந்து போய்; வந்து முன்னே கண்ணெதிரே வந்து; நின்று போகாய் நின்று போவதில்லை; கோழி வெண் கோழி வெண்; முட்டைக்கு முட்டை உடைக்க; குறுந்தடி சிறியதடி; என்செய்வது தேவைதானா?

PT 10.9.8

1939 பொருந்தலன்ஆகம்புள்ளுவந்தேற
வள்ளுகிரால்பிளந்து * அன்று
பெருந்தகைக்கிரங்கிவாலியைமுனிந்த
பெருமைகொலோ? செய்ததின்று *
பெருந்தடங்கண்ணிசுரும்புறுகோதை
பெருமையை நினைந்திலைபேசில் *
கருங்கடல்வண்ணா! கவுள்கொண்டநீராம்
இவளெனக்கருதுகின்றாயே.
1939 பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற *
வள் உகிரால் பிளந்து * அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த *
பெருமைகொலோ செய்தது இன்று? **
பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை *
பெருமையை நினைந்திலை பேசில் *
கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் *
இவள் எனக் கருதுகின்றாயே 8
1939 pŏruntalaṉ ākam pul̤ uvantu eṟa *
val̤ ukirāl pil̤antu * aṉṟu
pĕruntakaikku iraṅki vāliyai muṉinta *
pĕrumaikŏlo cĕytatu iṉṟu? **
pĕrun taṭaṅ kaṇṇi curumpu uṟu kotai *
pĕrumaiyai niṉaintilai pecil *
karuṅ kaṭal vaṇṇā kavul̤ kŏṇṭa nīr ām *
ival̤ ĕṉak karutukiṉṟāye-8

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1939. Her mother says, “You, colored like the dark ocean, have not thought of the pride of my daughter whose eyes are beautiful and whose garlanded hair swarms with bees. Why did you do this? It is because you are proud that you split open the chest of Hiranyan, your enemy, and because you became angry at Vāli and killed him when you felt compassion for Sugreeva? Do you think my daughter is only like the moisture that comes inside your mouth in your cheek?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு பகைவனான; பொருந்தலன் இரணியனின்; ஆகம் சரீரத்திலே; புள் கழுகு போன்ற பறவைகள்; உவந்து உவந்து; ஏற ஏறி உண்ணும்படியாக; வள் கூர்மையான; உகிரால் நகங்களாலே; பிளந்து பிளந்தவனும்; பெரும் பெருந்தன்மை வாய்ந்த; தகைக்கு ஸுக்ரீவனுக்கு; இரங்கி அருள் கூர்ந்து; வாலியை வாலியை; முனிந்த முடித்தோமென்கிற; பெருமை பெருமையை மிடுக்கை; கொலோ? நினைத்தோ?; இன்று இவளை எளியவளாக; செய்தது நினைப்பது; பெரும் தடம் பரந்த பெரும்; கண்ணி கண்களையுடைய; சுரும்பு வண்டு; உறு படியும் கூந்தலையுடைய; கோதை இப்பெண்ணின்; பெருமையை பெருமையை; நினைந்திலை பேசில் உணராமல் பேச; கவுள் கொண்ட வாயில் கொண்ட; நீர் ஆம் நீரை கொப்பளிப்பதும் பருகுவதும் போல; இவள் என இவள் என்று; கருங் கடல் வண்ணா கருமையான கடல் போன்ற வண்ணத்தை உடையவனே; கருதுகின்றாயே கருதுகின்றாயோ?

PT 10.9.9

1940 நீரழல்வானாய்நெடுநிலம்காலாய்
நின்றநின்நீர்மையை நினைந்தோ? *
சீர்க்கெழுகோதைஎன்னதிலளென்று
அன்னதோர்தேற்றன்மைதானோ? *
பார்கெழுபவ்வத்தாரமுதனைய
பாவையைப்பாவம்செய்தேனுக்கு *
ஆரழலோம்பும்அந்தணன்தோட்டமாக
நின்மனத்துவைத்தாயே.
1940 நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய் *
நின்ற நின் நீர்மையை நினைந்தோ? *
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று *
அன்னது ஓர் தேற்றன்மை தானோ **
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய *
பாவையைப் பாவம் செய்தேனுக்கு *
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்
ஆக * நின் மனத்து வைத்தாயே? 9
1940 nīr azhal vāṉ āy nĕṭu nilam kāl āy *
niṉṟa niṉ nīrmaiyai niṉainto? *
cīr kĕzhu kotai ĕṉ alatu ilal̤ ĕṉṟu *
aṉṉatu or teṟṟaṉmai tāṉo **
pār kĕzhu pavvattu ār amutu aṉaiya *
pāvaiyaip pāvam cĕyteṉukku *
ār azhal ompum antaṇaṉ toṭṭam
āka * niṉ maṉattu vaittāye?-9

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1940. Her mother says, “Are you proud because you are water, fire, sky, the large world and wind? Or do you think that my daughter with a beautiful garland in her hair has no one but you? I have done bad karmā. My daughter is as precious as the nectar that came from the milky ocean. Do you think she is like the garden of a Vediyan who gives his attention only to making his sacrificial fire and gives no care to anything else?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர் அழல் நீராய் அக்னியாய்; வான் ஆய் நெடு நிலம் வானமாய் பூமியாய்; கால் ஆய் வாயு ஆகியவை சரீரமாக உடைய; நின்ற நின் நீர்மையை உன் எளிமையை; நினைந்தோ? நினைந்தோ?; சீர் கலயாண குணங்களால்; கெழு குறைவற்ற; கோதை இப்பெண்ணுக்கு; என் அலது நம்மை விட்டால்; அன்னது ஓர் வேறு கதி; இலள் என்று இல்லை என்ற; தேற்றன்மை உன் மனதில் தெளிவை; தானோ நினைத்தோ?; பாவம் பாவியான; செய்தேனுக்கு என்னுடைய; பார் கெழு பூமியைச் சுற்றிச் சூழ்ந்த; பவ்வத்து கடலிலுண்டான; ஆர் அமுது அனைய அம்ருதம் போன்ற; பாவையை அழகியைப் பெற்றேன்; ஆர் அழல் வேள்வியையே; ஓம்பும் காலமெல்லாம் செய்யும்; அந்தணன் அந்தணன்; தோட்டமாக தோட்டத்தைப் பாழாக்குவது போல்; நின் மனத்து நீ இவளை; வைத்தாயே? நினைக்கலாமோ?

PT 10.9.10

1941 வேட்டத்தைக்கருதாதடியிணைவணங்கி
மெய்ம்மைநின்றுஎம்பெருமானை *
வாட்டிறல்தானைமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
தோட்டலர்பைந்தார்ச்சுடர்முடியானைப்
பழமொழியால்பணிந்துரைத்த *
பாட்டிவைபாடப்பத்திமைபெருகிச்
சித்தமும்திருவோடுமிகுமே. (2)
1941 ## வேட்டத்தைக் கருதாது அடி இணை வணங்கி *
மெய்ம்மையே நின்று எம் பெருமானை *
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் *
மான வேல் கலியன் வாய் ஒலிகள் **
தோட்டு அலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் *
பழமொழியால் பணிந்து உரைத்த *
பாட்டு இவை பாடப் பத்திமை பெருகிச் *
சித்தமும் திருவொடு மிகுமே 10
1941 ## veṭṭattaik karutātu aṭi-iṇai vaṇaṅki *
mĕymmaiye niṉṟu ĕm pĕrumāṉai *
vāl̤ tiṟal tāṉai maṅkaiyar talaivaṉ *
māṉa vel kaliyaṉ vāy ŏlikal̤ **
toṭṭu alar paintārc cuṭar muṭiyāṉaip *
pazhamŏzhiyāl paṇintu uraitta *
pāṭṭu ivai pāṭap pattimai pĕrukic *
cittamum tiruvŏṭu mikume-10

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1941. Kaliyan the chief of Thirumangai with a spear in his hand overcame his desires for the world and worshiped the feet of the god truly and the lord gave his grace to him. If devotees learn and recite these ten pāsurams that praise the lord who is adorned with fresh thulasi garlands with opening buds, their devotion and wealth will increase.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேட்டத்தை விரும்பியதை பக்தியை உடனே; கருதாது பெறவேண்டும் என்று கருதாமல்; அடி இணை திருவடிகளை; வணங்கி வணங்குபவர்களுக்கு; மெய்ம்மை உண்மையாகத் தன்னை; நின்று காட்டிக் கொடுக்குமவனும்; தோட்டு தொடுக்கப்பட்ட; அலர் மலர்களையுடைய; பைந்தார் துளசி மாலை அணிந்த; சுடர் முடியானை ஒளியுள்ள முடியுடையவனுமான; எம் பெருமானை எம் பெருமானைக் குறித்து; வாள் திறல் தானை வாள் படையும்; மான வேல் வேல் படையும் உடையவனான; மங்கையர் தலைவன் மங்கையர் தலைவன்; கலியன் திருமங்கை ஆழ்வார்; வாய் ஒலிகள் அருளிச்செய்த; பழமொழியால் பழமொழிகளைக் கொண்டு; பணிந்து உரைத்த பணிந்து உரைத்த; பாட்டு பாசுரங்களை; இவை பாட பாட வல்லார்கள்; பத்திமை பெருகி பக்தி பெருகி; சித்தமும் மனமும்; திருவோடு கைங்கரியப் பிராப்தி; மிகுமே அடைவார்கள்