Your browser does not support the audio element.
audio
1932 புள்ளுருவாகிநள்ளிருள்வந்த
பூதனைமாள * இலங்கை
ஒள்ளெரிமண்டியுண்ணப்பணித்த
ஊக்கமதனைநினைந்தோ? *
கள்ளவிழ்கோதைகாதலும்
எங்கள்காரிகைமாதர்கருத்தும் *
பிள்ளைதன்கையில்கிண்ணமேயொக்கப்
பேசுவதுஎந்தைபிரானே! (2)
1933 மன்றில்மலிந்துகூத்துவந்தாடி
மால்விடையேழுமடர்த்து * ஆயர்
அன்றுநடுங்க ஆனிரைகாத்த
ஆண்மைகொலோ? அறியேன்நான் *
நின்றபிரானே! நீள்கடல்வண்ணா!
நீயிவள்தன்னைநின்கோயில் *
முன்றிலெழுந்தமுருங்கையில்தேனா
முன்கைவளைகவர்ந்தாயே.
1934 ஆர்மலியாழிசங்கொடுபற்றி
ஆற்றலை ஆற்றல்மிகுத்து *
கார்முகில்வண்ணா! கன்சனைமுன்னம்
கடந்தநின்கடுந்திறல்தானோ *
நேரிழைமாதைநித்திலத்தொத்தை
நெடுங்கடலமுதனையாளை *
ஆரெழில்வண்ணா! அங்கையில்வட்டாம்
இவளெனக்கருதுகின்றாயே.
1935 மல்கியதோளும்மானுரியதளும்
உடையவர்தமக்கும்ஓர்பாகம் *
நல்கியநலமோ? நரகனைத்தொலைத்த
கரதலத்தமைதியின்கருத்தோ? *
அல்லியங்கோதையணிநிறங்கொண்டுவந்து
முன்னேநின்றுபோகாய் *
சொல்லியென்? நம்பீ! இவளைநீ
உங்கள்தொண்டர்கைத்தண்டென்றவாறே.
1936 செருவழியாதமன்னர்கள்மாளத்
தேர்வலங்கொண்டுஅவர்செல்லும் *
அருவழிவானம்அதர்படக்கண்ட
திருமொழிஎங்கள்தேமலர்க்கோதை
சீர்மையைநினைந்திலை அந்தோ! *
பெருவழிநாவற்கனியினும்எளியள்
இவளெனப்பேசுகின்றாயே.
1937 அரக்கியராகம்புல்லெனவில்லால்
அணிமதிளிலங்கையார்கோனை *
செருக்கழித்துஅமரர்பணியமுன்னின்றசேவகமோ?
செய்ததின்று *
முருக்கிதழ்வாய்ச்சிமுன்கைவெண்சங்கம்கொண்டு
எருக்கிலைக்காகஎறிமழுவோச்சல்
என்செய்வது? எந்தைபிரானே!
1938 ஆழியந்திண்தேரரசர்வந்திறைஞ்ச
அலைகடலுலகம்முன்னாண்ட *
பாழியந்தோளோராயிரம்வீழப்
படைமழுப்பற்றியவலியோ? *
மாழைமென்னோக்கிமணிநிறங்கொண்டுவந்து
கோழிவெண்முட்டைக்குஎன்செய்வது? எந்தாய்!
குறுந்தடிநெடுங்கடல்வண்ணா!
1939 பொருந்தலன்ஆகம்புள்ளுவந்தேற
வள்ளுகிரால்பிளந்து * அன்று
பெருந்தகைக்கிரங்கிவாலியைமுனிந்த
பெருமைகொலோ? செய்ததின்று *
பெருந்தடங்கண்ணிசுரும்புறுகோதை
பெருமையை நினைந்திலைபேசில் *
கருங்கடல்வண்ணா! கவுள்கொண்டநீராம்
1940 நீரழல்வானாய்நெடுநிலம்காலாய்
நின்றநின்நீர்மையை நினைந்தோ? *
சீர்க்கெழுகோதைஎன்னதிலளென்று
அன்னதோர்தேற்றன்மைதானோ? *
பார்கெழுபவ்வத்தாரமுதனைய
பாவையைப்பாவம்செய்தேனுக்கு *
ஆரழலோம்பும்அந்தணன்தோட்டமாக
நின்மனத்துவைத்தாயே.
1941 வேட்டத்தைக்கருதாதடியிணைவணங்கி
மெய்ம்மைநின்றுஎம்பெருமானை *
வாட்டிறல்தானைமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
தோட்டலர்பைந்தார்ச்சுடர்முடியானைப்
பழமொழியால்பணிந்துரைத்த *
பாட்டிவைபாடப்பத்திமைபெருகிச்
சித்தமும்திருவோடுமிகுமே. (2)