3596 வார்கடாவருவியானைமாமலையின்
மருப்பிணைக்குவடிறுத்துருட்டி *
ஊர்கொள்திண்பாகன்உயிர்செகுத்து * அரங்கின்
மல்லரைக்கொன்று * சூழ்பரண்மேல்
போர்கடாவரசர்புறக்கிட * மாட
மீமிசைக்கஞ்சனைத்தகர்த்த *
சீர்கொள்சிற்றாயன்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறுஎங்கள்செல்சார்வே. (2)