I Desired the Lord of Tirucceṅkuṉṟūr.
திருச்செங்குன்றூர்ப் பெருமானையே விரும்பினேன்
3605 அமர்ந்தநாதனை அவரவராகி
அவர்க்கருளருளுமம்மானை
அமர்ந்ததண்பழனத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரையானை *
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்
தம்பதிஅவனிதேவர்வாழ்வு *
அமர்ந்தமாயோனைமுக்கணம்மானை
நான்முகனையமர்ந்தேனே.