These Songs Will Put an End to the Sorrow of Birth.
இப்பாடல்கள் பிறவித் துன்பத்தை முடிக்கும்
3606 தேனைநன்பாலைக்கன்னலையமுதைத்
திருந்துலகுண்டவம்மானை *
வானநான்முகனைமலர்ந்தண்கொப்பூழ்
மலர்மிசைப்படைத்தமாயோனை *
கோனைவண்குருகூர்வண்சடகோபன்
சொன்னஆயிரத்துள்இப்பத்தும் *
வானின்மீதேற்றியருள்செய்துமுடிக்கும்
பிறவிமாமாயக்கூத்தினையே. (2)