My Soul Desires None Other Than Kaṇṇaṉ.
என் ஆவி கண்ணனையல்லது விரும்பாது
3600 அல்லதோரரணும் அவனில்வேறில்லை
அதுபொருளாகிலும் * அவனை
யல்லதென்னாவியமர்ந்தணைகில்லாது
ஆதலால்அவனுறைகின்ற *
நல்லநான்மறையோர்வேள்வியுள்மடுத்த
நறும்புகைவிசும்பொளிமறைக்கும் *
நல்லநீள்மாடத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறுஎனக்குநல்லரணே.