Thiruvalla, Srivallabha Kshetram
Your browser does not support the audio element.
audio
1808 தந்தைதாய்மக்களே சுற்றமென்றுற்றவர்பற்றிநின்ற *
பந்தமார்வாழ்க்கையை நொந்துநீபழியெனக்கருதினாயேல் *
அந்தமாய்ஆதியாய் ஆதிக்குமாதியாய்ஆயனாய *
மைந்தனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே. (2)
1809 மின்னுமாவல்லியும்வஞ்சியும்வென்ற நுண்ணிடைநுடங்கும் *
அன்னமென்னடையினார்கலவியை அருவருத்தஞ்சினாயேல் *
துன்னுமாமணிமுடிப்பஞ்சவர்க்காகி முன்தூதுசென்ற *
மன்னனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1810 பூணுலாமென்முலைப்பாவைமார் பொய்யினைமெய்யிதென்று *
பேணுவார்பேசும்அப்பேச்சை நீபிழையெனக்கருதினாயேல் *
நீணிலாவெண்குடைவாணனார் வேள்வியில்மண்ணிரந்த *
மாணியார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1811 பண்ணுலாம்மென்மொழிப்பாவைமார் பணைமுலையணைதும்நாமென்று *
எண்ணுவாரெண்ணமதொழித்து நீபிழைத்துயக்கருதினாயேல் *
விண்ணுளார்விண்ணின்மீதியன்றவேங்கடத்துளார்வளங்கொள்முந்நீர் *
வண்ணனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1812 மஞ்சுதோய்வெண்குடைமன்னராய் வாரணம்சூழ வாழ்ந்தார் *
துஞ்சினாரென்பதோர்சொல்லைநீ துயரெனக்கருதினாயேல் *
நஞ்சுதோய்கொங்கைமேல்அங்கைவாய்வைத்து அவள் நாளையுண்ட *
மைந்தனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1813 உருவினார்பிறவிசேர் ஊன்பொதிநரம்புதோற்குரம்பையுள்புக்கு *
அருவிநோய்செய்துநின்று ஐவர்தாம் வாழ்வதற்குஅஞ்சினாயேல் *
திருவினார்வேதநான்கு ஐந்துதீவேள்வியோடுஅங்கமாறும் *
மருவினார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1814 நோயெலாம்பெய்ததோராக்கையை மெய்யெனக் கொண்டு * வாளா
பேயர்தாம்பேசும்அப்பேச்சை நீபிழையெனக்கருதினாயேல் *
தீயுலாவெங்கதிர்த்திங்களாய் மங்குல்வானாகிநின்ற *
மாயனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1815 மஞ்சுசேர்வானெரி நீர்நிலம்காலிவைமயங்கிநின்ற *
அஞ்சுசேராக்கையை அரணமன்றென்றுயக்கருதினாயேல் *
சந்துசேர்மென்முலைப் பொன்மலர்ப்பாவையும்தாமும் * நாளும்
வந்துசேர்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1816 வெள்ளியார்பிண்டியார் போதியாரென்றிவர்ஓதுகின்ற *
கள்ளநூல்தன்னையும் கருமமன்றென்றுயக்கருதினாயேல் *
தெள்ளியார்கைதொழும்தேவனார் மாமுநீர்அமுதுதந்த *
வள்ளலார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1817 மறைவலார்குறைவிலாருறையுமூர் வல்லவாழடிகள்தம்மை *
சிறைகுலாவண்டறைசோலைசூழ் கோலநீளாலிநாடன் *
கறையுலாவேல்வல்ல கலியன்வாய்ஒலியிவைகற்றுவல்லார் *
இறைவராய்இருநிலம்காவல்பூண்டு இன்பம்நன்கெய்துவாரே. (2)
2774 வல்லவாழ்ப்
பின்னைமணாளனைப் பேரில்பிறப்பிலியை * (2)
தொன்னீர்க்கடல்கிடந்த தோளாமணிச்சுடரை *
என்மனத்துமாலை இடவெந்தையீசனை *
மன்னுங்கடல்மல்லை மாயவனை * -
3321 மானேய்நோக்குநல்லீர்! வைகலும்வினையேன்மெலிய *
வானார்வண்கமுகும் மதுமல்லிகைகமழும் *
தேனார்சோலைகள்சூழ் திருவல்லவாழுறையும்
கோனாரை * அடியேன் அடிகூடுவதுஎன்றுகொலோ? (2)
3322 என்றுகொல்? தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? *
பொன்திகழ்புன்னைமகிழ் புதுமாதவிமீதணவி *
தென்றல்மணங்கமழும் திருவல்லவாழ்நகருள்
நின்றபிரான் * அடிநீறு அடியோங்கொண்டுசூடுவதே.
3323 சூடுமலர்க்குழலீர்! துயராட்டியேனைமெலிய *
பாடுநல்வேதவொலி பரவைத்திரைபோல்முழங்க *
மாடுயர்ந்தோமப்புகைகமழும் தண்திருவல்லவாழ் *
நீடுறைகின்றபிரான் கழல்காண்டுங்கொல்நிச்சலுமே.
3324 நிச்சலும்தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? *
பச்சிலைநீள்கமுகும் பலவும்தெங்கும்வாழைகளும் *
மச்சணிமாடங்கள்மீதணவும் தண்திருவல்லவாழ் *
நச்சரவினணைமேல் நம்பிரானதுநன்னலமே.
3325 நன்னலத்தோழிமீர்காள்! நல்லஅந்தணர்வேள்விப்புகை *
மைந்நலங்கொண்டுயர்விண்மறைக்கும் தண்திருவல்லவாழ் *
கன்னலங்கட்டிதன்னைக் கனியைஇன்னமுதந்தன்னை *
என்னலங்கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?
3326 காண்பதெஞ்ஞான்றுகொலொ? வினையேன்கனிவாய் மடவீர்! *
பாண்குரல்வண்டினொடு பசுந்தென்றலுமாகியெங்கும் *
சேண்சினையோங்குமரச் செழுங்கானல்திருவல்லவாழ் *
மாண்குறள்கோலப்பிரான் மலர்த்தாமரைப்பாதங்களே.
3327 பாதங்கள்மேலணி பூத்தொழக்கூடுங்கொல்? பாவை நல்லீர்! *
ஓதநெடுந்தடத்துள் உயர்தாமரைசெங்கழுநீர் *
மாதர்கள்வாண்முகமும் கண்ணுமேந்தும்திருவல்லவாழ் *
நாதனிஞ்ஞாலமுண்டநம்பிரான்தன்னைநாள்தொறுமே.
3328 நாள்தொறும்வீடின்றியே தொழக்கூடுங்கொல்? நன்னுதலீர்! *
ஆடுறுதீங்கரும்பும் விளைசெந்நெலுமாகியெங்கும் *
மாடுறுபூந்தடஞ்சேர் வயல்சூழ்தண்திருவல்லவாழ் *
நீடுறைகின்றபிரான் நிலந்தாவியநீள்கழலே.
3329 கழல்வளைபூரிப்பயாம்கண்டு கைதொழக்கூடுங்கொலோ? *
குழலென்னயாழுமென்னக் குளிர்சோலையுள்தேனருந்தி *
மழலைவரிவண்டுகளிசைபாடும் திருவல்லவாழ் *
சுழலின்மலிசக்கரப்பெருமானது தொல்லருளே.
3330 தொல்லருள்நல்வினையால்சொல்லக்கூடுங்கொல்? தோழிமீர்காள்! *
தொல்லருள்மண்ணும்விண்ணும் தொழநின்றதிருநகரம் *
நல்லருளாயிரவர் நலனேந்துந்திருவல்லவாழ் *
நல்லருள்நம்பெருமான் நாராயணன்நாமங்களே.
3331 நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் *
சேமங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த *
நாமங்களாயிரத்துள் இவைபத்தும்திருவல்லவாழ் *
சேமங்கொள்தென்னகர்மேல் செப்புவார்சிறந்தார் பிறந்தே. (2)