Thiru Nāngur

1278 மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
மற்றவர்தம்காதலிமார்குழையும் * தந்தை
கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்
கதநாகம்காத்தளித்தகண்ணர்கண்டீர் *
நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து
இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின் *
சேற்றளையில்வெண்முத்தம்சிந்து நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே. (2)
1279 பொற்றொடித்தோள்மடமகள்தன்வடிவுகொண்ட
பொல்லாதவன்பேய்ச்சிகொங்கைவாங்கி *
பெற்றெடுத்ததாய்போலமடுப்பஆரும்
பேணாநஞ்சுண்டுகந்தபிள்ளைகண்டீர் *
நெல்தொடுத்தமலர்நீலம்நிறைந்தசூழல்
இருஞ்சிறையவண்டொலியும்நெடுங்கணார்தம் *
சிற்றடிமேல்சிலம்பொலியும்மிழற்றுநாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1280 படலடைந்தசிறுகுரம்பைநுழைந்துபுக்குப்
பசுவெண்ணெய்பதமாரப்பண்ணைமுற்றும் *
அடலடர்த்தவேற்கண்ணார்தோக்கை பற்றி
அலந்தலைமைசெய்துழலும்ஐயன்கண்டீர் *
மடலெடுத்தநெடுந்தெங்கின்பழங்கள்வீழ
மாங்கனிகள்திரட்டுருட்டாவருநீர்ப்பொன்னி *
திடலெடுத்துமலர்சுமந்துஅங்குஇழியும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1281 வாராரும்முலைமடவாள்பின்னைக்காகி
வளைமருப்பிற்கடுஞ்சினத்துவன்தாளார்ந்த *
காரார்திண்விடையடர்த்துவதுவையாண்ட
கருமுகில்போல்திருநிறத்துஎன்கண்ணர்கண்டீர் *
ஏராரும்மலர்ப்பொழில்கள்தழுவிஎங்கும்
எழில்மதியைக்கால்தொடரவிளங்குசோதி *
சீராருமணிமாடம்திகழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1282 கலையிலங்கும்அகலல்குல்கமலப்பாவை
கதிர்முத்தவெண்ணகையாள்கருங்கணாய்ச்சி *
முலையிலங்கும்ஒளிமணிப்பூண்வடமும்தேய்ப்ப
மூவாதவரைநெடுந்தோள்மூர்த்திகண்டீர் *
மலையிலங்குநிரைச்சந்திமாடவீதி
ஆடவரைமடமொழியார்முகத்து * இரண்டு
சிலைவிலங்கிமனஞ்சிறைகொண்டிருக்கும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1283 தான்போலும்ஏன்றெழுந்தான்தரணியாளன்
அதுகண்டுதரித்திருப்பான் அரக்கர்தங்கள் *
கோன்போலும்ஏன்றெழுந்தான், குன்றமன்ன
இருபதுதோளுடன்துணித்தஒருவன்கண்டீர் *
மான்போலுமென்னோக்கின்செய்யவாயார்
மரகதம்போல்மடக்கிளியைக்கைமேற்கொண்டு *
தேன்போலுமென்மழலைபயிற்றும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1284 பொங்கிலங்குபுரிநூலும்தோலும்தாழப்
பொல்லாதகுறளுருவாய்ப்பொருந்தாவாணன் *
மங்கலம்சேர்மறைவேள்வியதனுள்புக்கு
மண்ணகலம்குறையிரந்தமைந்தன்கண்டீர் *
கொங்கலர்ந்தமலர்க்குழலார்கொங்கைதோய்ந்த
குங்குமத்தின்குழம்பளைந்தகோலந்தன்னால் *
செங்கலங்கல்வெண்மணல்மேல்தவழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.
1285 சிலம்பினிடைச்சிறுபரல்போல்பெரியமேரு
திருக்குளம்பில்கணகணப்பத் திருவாகாரம்
குலுங்க * நிலமடந்தைதனைஇடந்துபுல்கிக்
கோட்டிடைவைத்தருளியஎங்கோமான்கண்டீர் *
இலங்கிய நான்மறையனைத்தும்அங்கமாறும்
ஏழிசையும்கேள்விகளும்எண்திக்கெங்கும் *
சிலம்பியநற்பெருஞ்செல்வம்திகழும்நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே. 8