This is the Joyful Abode of Him Who Married Maithilī (Sītā)
மைதிலியை மணம் புரிந்தவன் மகிழ்விடம் இதுதான்
1255 வாராருமிளங்கொங்கை மைதிலியைமணம்புணர்வான் *
காரார்திண்சிலையிறுத்த தனிக்காளைகருதுமிடம்
ஏராரும்பெருஞ்செல்வத்து எழில்மறையோர்நாங்கை தன்னுள் *
சீராரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தேவனார்தொகையே.