TVT 24

பிரிவாற்றாத தலைவியின் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல்

2501 இயல்வாயின வஞ்சநோய்கொண்டுலாவும் * ஓரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர்க்கண்கள்தம்மொடும் * குன்றமொன்றால்
புயல்வாயின நிரைகாத்தபுள்ளூர்திகள்ளூரும்துழாய்க்
கொயல்வாய்மலர்மேல் * மனத்தொடுஎன்னாங்கொல் எங்கோல்வளைக்கே?
2501 இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் * ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன * பெரு நீர்க் கண்கள் தம்மொடும் ** குன்றம் ஒன்றால்
புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க் *
கொயல்வாய் மலர்மேல் * மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே?24
2501 iyalvāyiṉa vañca noy kŏṇṭu ulāvum * ŏro kuṭaṅkaik
kayal pāyvaṉa * pĕru nīrk kaṇkal̤ tammŏṭum ** kuṉṟam ŏṉṟāl
puyalvāy iṉa nirai kātta pul̤ ūrti kal̤ ūrum tuzhāyk *
kŏyalvāy malarmel * maṉattŏṭu ĕṉṉāmkŏl ĕm kol val̤aikke?24

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2501. Her mother says, “Her beautiful fish-eyes shed tears like a river. Does she suffer with love sickness? She wants the garland of him who rides on Garudā adorned with a thulasi garland dripping with honey and carried Govardhanā mountain as an umbrella, to protect the cows and the cowherds from the big storm. What will become of the heart of my daughter ornamented with lovely bangles?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இயல்வாயின இயற்கையான; வஞ்ச பிறர் அறியமுடியாத; நோய் கொண்டு காதல் நோயை உடைய; உலாவும் பெரு நீர் ஸஞ்சரிக்கும் பெரும் ஜலத்தில்; பாய்வன கயல் பாயும் கயல் மீன் போன்ற; கண்கள் கண்களையுடைய; தம்மொடும் என் பெண்ணின்; ஓரோ கண்களிலிருந்து ஒரு சிறு; குடங்கை கங்கையளவு நீர் பெருகுகின்றன; குன்றம் ஒரு கோவர்த்தன; ஒன்றால் மலை ஒன்றால்; புயல்வாய் மழையில்; இன நிரை காத்த பசுக்களைக் காத்தவனும்; புள் கருடனை; ஊர்தி வாகனமாக உடையவனுமான; கள் ஊரும் பெருமானின் தேன் பெருகும்; கொயல்வாய் வட்டமாயுள்ள; துழாய் துளசியால் கட்டப்பட்ட; மலர் மேல் மாலைகளின் மேல்; மனத்தொடு தன் மனதையுடையவளான; எம் வளைக்கே வளையல் அணிந்த என் பெண்ணுக்கு; என்னாம் இன்னும் என்ன; கொல் கோல்? நிலைமை நேருமோ?
iyalvāyina being of one’s nature; vanjam caused by (emperumān’s) deception; nŏy disease; koṇdu having; ulāvum moving about; perunīr in huge water body; pāyvana those which dart; kayal being like fish; ŏrŏ kudangai siśe of one’s palm; kaṇgal̤ thammodum being with such eyes; oru kunṛāl with a (gŏvardhana) hill; puyalvāy in rains; inanirai clan of herds; kāththa one who protected; pul̤ garuda; ūrdhi the rider, that is, ṣrīya:pathi, consort of ṣrī mahālakshmi; kal̤ honey; ūrum generating abundantly; koyalvāy round in shape; thuzhāy malar mĕl on the garland strung with thul̤asi; manaththodu with (desirous) mind; em as our daughter; kŏl one who is beautiful; val̤aikku for her who is having bangles; ennāngol what will happen?