TVT 23

தலைவன் குறையுற உரைத்தல்

2500 புனமோ? புனத்தயலே வழிபோகுமருவினையேன் *
மனமோ? மகளிர்! நுங்காவல்சொல்லீர் * புண்டரீகத்தங்கேழ்
வனமோரனையகண்ணான் கண்ணன்வானாடமரும் தெய்வத்
தினமோரனையீர்களாய் * இவையோநும்மியல்புகளே?
2500 puṉamo? puṉattu ayale vazhipokum aru viṉaiyeṉ *
maṉamo? makal̤ir num kāval cŏllīr ** puṇṭarīkattu am kezh
vaṉam or aṉaiya kaṇṇāṉ kaṇṇaṉ vāṉ nāṭu amarum * tĕyvattu
iṉam or aṉaiyīrkal̤āy * ivaiyo num iyalvukal̤e?23

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2500. He says, “I have done bad karmā. My mind thinks of the millet field where she is and the path to go there. O girls watching the millet field, are you like goddesses in the sky where the lotus-eyed Kannan stays? Tell me, what are your divine qualities?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மகளிர் பெண்களே!; நும் காவல் உங்கள் காவலுக்கு உரிய பொருள்; புனமோ? இந்த கொல்லையோ?; புனத்து அயலே கொல்லையின் பக்கத்தில்; வழிபோகும் செல்லும்; அரு வினையேன் பாவியான என்னுடைய; மனமோ? நெஞ்சமோ?; சொல்லீர் சொல்லுங்கள்; புண்டரீகத்து செந்தாமரை மலரின்; அம் கேழ் அழகிய ஒளியையுடைய; வனம் ஓர் அனைய காட்டோடு ஒத்திருக்கும்; கண்ணான் கண்களையுடைய; கண்ணன் கண்ணனின்; வான் நாடு பரமபதத்தில்; தெய்வத்து நித்யஸூரிகளின்; இனம் இனம் போல்; ஓர் ஒருவிதத்தில்; அனையீர்களாய் ஒத்தவர்களாய்; நும் இயல்வுகளே உள்ள உங்கள் இயல்பு; அமரும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும்; இவையோ செயலாகுமோ?
am beautiful; kĕzh having complexion; puṇadarīkam lotus flower’s; ŏr being distinguished; vanam with forest; anaiya being similar; kaṇṇān having eyes; kaṇṇan krishṇa’s; vān being enjoyable; nādu in paramapadham; amarum dwelling; dheyvaththu nithyasūris’; inam with their clan; ŏr anayīrgal̤āy being similar in a way; magal̤ir ŏh girls!; num kāval to be kept under your protection; punamŏ are they, the fields?; punaththu fields’; ayal near; vazhi in the path; pŏgum one who is going; aruvinaiyĕn one who has cruel sins, my; manamŏ is it the mind?; solleer please tell me; num iyalvu your nature; ivaiyŏ is it this?