Your browser does not support the audio element.
audio
3629 இருத்தும்வியந்தென்னைத் தன்பொன்னடிக்கீழென்று *
அருத்தித்து எனைத்தோர்பலநாளழைத்தேற்கு *
பொருத்தமுடை வாமனன்தான்புகுந்து * என்தன்
கருத்தையுற வீற்றிருந்தான்கண்டுகொண்டே. (2)
3630 இருந்தான்கண்டுகொண்டு எனதேழைநெஞ்சாளும் *
திருந்தாதவோரைவரைத் தேய்ந்தறமன்னி *
பெருந்தாள்களிற்றுக்கு அருள்செய்தபெருமான் *
தருந்தானருள்தான் இனியானறியேனே.
3631 அருள்தானினியான்அறியேன் அவன்என்னுள் *
இருள்தானற வீற்றிருந்தான், இதுவல்லால் *
பொருள்தானெனின் மூவுலகும்பொருளல்ல *
மருள்தானீதோ மாயமயக்குமயக்கே.
3632 மாயமயக்குமயக்கான் என்னைவஞ்சித்து *
ஆயனமரர்க்கரியேறு எனதம்மான் *
தூயசுடர்ச்சோதி தனதென்னுள்வைத்தான் *
தேசந்திகழும் தன்திருவருள்செய்தே.
3633 திகழுந்தன்திருவருள்செய்து உலகத்தார்
புகழும்புகழ் * தானதுகாட்டித்தந்து * என்னுள்
திகழும்மணிக்குன்றமொன்றே ஓத்துநின்றான் *
புகழும்புகழ் மற்றெனக்குமோர்பொருளே.
3634 பொருள்மற்றெனக்கும் ஓர்பொருள்தன்னில்சீர்க்கத்
தருமேல் * பின்னையார்க்கு அவன்தன்னைக்கொடுக்கும்? *
கருமாணிக்கக்குன்றத்துத் தாமரைபோல் *
திருமார்புகால்கண்கை செவ்வாயுந்தியானே.
3635 செவ்வாயுந்தி வெண்பல்சுடர்க்குழைதம்மோடு *
எவ்வாய்ச்சுடரும் தம்மில்முன்வளாய்க்கொள்ள *
செவ்வாய்முறுவலோடு எனதுள்ளத்திருந்த *
அவ்வாயன்றி யானறியேன்மற்றருளே.
3636 அறியேன்மற்றருள் என்னையாளும்பிரானார் *
வெறிதேயருள்செய்வர் செய்வார்கட்குஉகந்து *
சிறியேனுடைச் சிந்தையுள்மூவுலகும் * தம்
நெறியாவயிற்றிற்கொண்டு நின்றொழிந்தாரே.
3637 வயிற்றிற்கொண்டு நின்றொழிந்தாரும்யவரும் *
வயிற்றிற்கொண்டுநின்று ஒருமூவுலகும் * தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண்ணம்நின்றமாலை *
வயிற்றிற்கொண்டு மன்னவைத்தேன்மதியாலே.
3638 வைத்தேன்மதியால்எனதுள்ளத்தகத்தே *
எய்த்தேயொழிவேனல்லேன் என்றும்எப்போதும் *
மொய்த்தேய்திரைமோது தண்பாற்கடலுளால் *
பைத்தேய்சுடர்ப்பாம்பணை நம்பரனையே.
3639 சுடர்ப்பாம்பணைநம்பரனைத் திருமாலை *
அடிச்சேர்வகை வண்குருகூர்ச்சடகோபன் *
முடிப்பான்சொன்னவாயிரத்து இப்பத்தும்சன்மம்
விட * தேய்ந்தறநோக்கும் தன்கண்கள்சிவந்தே. (2)