TVM 5.1.11

இவற்றைப் பாடுக: கண்ணன் கழலிணை கிட்டும்

3243 கார்வண்ணன்கண்ணபிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை *
ஏர்வளவொண்கழனிக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
சீர்வண்ணவொண்தமிழ்கள் இவையாயிரத்துள் இப்பத்தும் *
ஆர்வண்ணத்தாலுரைப்பார் அடிக்கீழ்புகுவார் பொலிந்தே. (2)
3243 ## கார் வண்ணன் கண்ண பிரான் * கமலத்தடங்கண்ணன் தன்னை *
ஏர் வள ஒண் கழனிக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
ஆர்வண்ணத்தால் உரைப்பார் * அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)
3243 ## kār vaṇṇaṉ kaṇṇa pirāṉ * kamalattaṭaṅkaṇṇaṉ taṉṉai *
er val̤a ŏṇ kazhaṉik * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
cīr vaṇṇam ŏṇ tamizhkal̤ * ivai āyirattul̤ ip pattum *
ārvaṇṇattāl uraippār * aṭikkīzhp pukuvār pŏlinte (11)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Those who lovingly recite these ten songs out of the perfect thousand Tamil songs composed by Caṭakōpaṉ of Kurukūr, with fertile fields where many a plough plies, adoring Kaṇṇaṉ, the cloud-hued Lord with lotus eyes, will remain pious unto Him and attain His feet.

Explanatory Notes

Those that recite these ten songs with intense love, as if they are drinking nectar, will remain pious Śrī Vaiṣṇavas during their stay here, and attain the Lord’s feet, like unto children reposing on the mother’s lap.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கார் வண்ணன் மேகவண்ணனும்; கண்ணபிரான் கண்ணபிரானும்; கமலத் தடம் தாமரை போன்ற பெரிய; கண்ணன் கண்களையுடைய கண்ணனை; தன்னை குறித்து; ஏர் வள ஏர் வளம் சூழ்ந்த; ஒண் கழனி கழனிகளையுடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; சீர் வண்ணம் சீரும் சந்தமும் உடைய; ஒண் தமிழ்கள் அழகிய தமிழில் உள்ள; இவை ஆயிரத்துள் இந்த ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் பத்துப் பாசுரங்களும்; ஆர்வண்ணத்தால் அமுதம் பருகுபவர்போல்; உரைப்பார் அநுபவித்து ஓதுபவர்கள்; பொலிந்தே பொலிந்து நின்ற பெருமானின்; அடிக்கீழ் திருவடிகளுக்கு; புகுவார் கைங்கர்யம் செய்யப் பெறுவர்கள்
kār invigorating like a dark cloud; vaṇṇan having form; kamalam like a lotus flower; thadam wide; kaṇṇan thannai one who is having eyes; ĕr ploughs; val̤am having abundance; oṇ best; kazhani having fields; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; sīr poetic measurement; vaṇṇam having chandhas (meter); oṇ good, due to revealing the meanings clearly; thamizhgal̤ in dhrāvida (thamizh) language; ivai these; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; ār vaṇṇaththāl like those who drink nectar; uraippār who can recite; polindhu having flourishing nature, form and qualities; adik kīzh the divine feet of krishṇa; puguvār will attain.; kadal like an attractive ocean, which is containing precious gems inside it; vaṇṇan by sarvĕṣvaran who has greatness due to having distinguished qualities and form

Detailed WBW explanation

  • Kār vaṇṇan - He who possesses a form akin to a revitalizing dark cloud.

  • Kaṇṇa Pirāṇ - Manifesting as Kṛṣṇa, He allowed me the joy of beholding that divine form.

  • Kamalat tadaṁ Kaṇṇan tannai - Endowed with divine eyes cool and fresh as a pond adorned with fully blossomed lotus flowers. It seems as though the eyes of Emperumān encompass His entire form.

+ Read more