2742 பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின் *
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி * தன் இன் உயிராம் காதலனைக் காணாது *
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏகத் தான் சென்று * அங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி * 31
2742 piṉṉum karu nĕṭuṅ kaṇ cĕv vāy piṇai nokkiṉ *
miṉ aṉaiya nuṇ maruṅkul vekavati ĕṉṟu uraikkum
kaṉṉi * taṉ iṉ uyirām kātalaṉaik kāṇātu *
taṉṉuṭaiya muṉ toṉṟal kŏṇṭu ekat tāṉ cĕṉṟu * aṅku
aṉṉavaṉai nokkātu azhittu urappi * 31