PTM 7.30

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2742 பின்னும்கருநெடுங்கண் செவ்வாய்பிணைநோக்கின் *
மின்னனையநுண்மருங்குல் வேகவதியென்றுரைக்கும்
கன்னி * தன் இன்னுயிராம் காதலனைக்காணது *
தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று * அங்கு
அன்னவனை நோக்காது அழித்துரப்பி * -
2742 piṉṉum karu nĕṭuṅ kaṇ cĕv vāy piṇai nokkiṉ *
miṉ aṉaiya nuṇ maruṅkul vekavati ĕṉṟu uraikkum
kaṉṉi * taṉ iṉ uyirām kātalaṉaik kāṇātu *
taṉṉuṭaiya muṉ toṉṟal kŏṇṭu ekat tāṉ cĕṉṟu * aṅku
aṉṉavaṉai nokkātu azhittu urappi * 31

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2742. When Vegavathi, a young girl with a waist as thin as lightning lost her husband as dear as her life, she went with her elder brother to find him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின்னும் மேலும்; கரு கருத்த; நெடுங்கண் நீண்ட கண்களையும்; செவ் வாய் சிவந்த வாயையும்; பிணை மான் போன்ற; நோக்கின் பார்வையையும்; மின் அனைய மின்னல் போன்ற; நுண் மருங்குல் நுண் இடையும்; வேகவதி வேகவதி; என்று உரைக்கும் கன்னி என்ற பெண்; தன் தனது; இன் உயிராம் இனிய உயிர் போன்ற; காதலனை காதலனை; காணாது காணவொட்டாது; தன்னுடைய முன் தோன்றல் தன் சகோதரன்; கொண்டு ஏக தன்னைக் கொண்டுபோன போது; அங்கு அன்னவனை சகோதரனை; நோக்காது மதிக்காமல்; அழித்து இழிவான சொற்களை; உரப்பி சொல்லி அதட்டி; தான் தானே பலாத்காரமாக; சென்று அங்கு புறப்பட்டுச் சென்று
pinnum apart from that; karu nedu kaṇ sem vāy piṇai nŏkkin min aṇaiya nuṇ marungul having dark, long hands, reddish mouth, looks of a deer and a slender waist similar to lightning; vĕgavadhi enṛu uraikkum being spoken of as vĕgavadhi (name of a lady); kanni a girl; than innuyir kādhalanai kāṇādhu not allowing (her) to see her husband who is like her lifeline; thannudaiya mun thŏnṛal koṇdu ĕga her elder brother carrying her (preventing her from being with her husband); angu in that state; annavanai that elder brother; nŏkkādhu not minding him; azhiththu urappi abusing him by using ignominious words