Your browser does not support the audio element.
audio
1688 தந்தைகாலில்விலங்கற வந்துதோன்றியதோன்றல்பின் * தமியேன்தன்
சிந்தைபோயிற்றுத் திருவருளவனிடைப்பெறுமளவிருந்தேனை *
அந்திகாவலன்அமுதுறுபசுங்கதிரவைசுட, அதனோடும் *
மந்தமாருதம்வனமுலைதடவந்துவலிசெய்வதொழியாதே. (2)
1689 மாரிமாக்கடல்வளைவணற்கிளையவன் வரைபுரைதிருமார்பில் *
தாரினாசையில்போயினநெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணைகாணேன் *
ஊரும்துஞ்சிற்றுஉலகமும் துயின்றது ஒளியவன்விசும்பியங்கும் *
தேரும்போயிற்றுத்திசைகளும்மறைந்தன செய்வதொன்றறியேனே.
1690 ஆயன்மாயமேயன்றி, மற்றென்கையில் வளைகளும்இறைநில்லா *
பேயின்னாருயிருண்டிடும்பிள்ளை நம்பெண்ணுயிர்க்குஇரங்குமோ? *
தூயமாமதிக்கதிர்சுடத்துணையில்லை இணைமுலைவேகின்றதால் *
ஆயன்வேயினுக்கழிகின்றதுஉள்ளமும் அஞ்சேலென்பாரிலையே.
1691 கயங்கொள்புண்தலைக்களிறுந்துவெந்திறல் கழல்மன்னர்பெரும்போரில் *
மயங்கவெண்சங்கம்வாய்வைத்தமைந்தனும் வந்திலன், மறிகடல்நீர் *
தயங்குவெண்திரைத்திவலைநுண்பனியென்னும் தழல்முகந்துஇளமுலைமேல் *
இயங்குமாருதம்விலங்கில்என்னாவியை எனக்கெனப்பெறலாமே.
1692 ஏழுமாமரம்துளைபடச்சிலைவளைத்து இலங்கையைமலங்குவித்த
ஆழியான் * நமக்கருளியஅருளொடும் பகலெல்லைகழிகின்றதால் *
தோழி! நாம்இதற்கென்செய்தும்? துணையில்லை, சுடர்படுமுதுநீரில் *
ஆழஆழ்கின்றஆவியை அடுவதோர்அந்திவந்தடைகின்றதே.
1693 முரியும்வெண்திரைமுதுகயம்தீப்பட முழங்கழலெரியம்பின் *
வரிகொள்வெஞ்சிலைவளைவித்தமைந்தனும் வந்திலன்என்செய்கேன்? *
எரியும்வெங்கதிர்துயின்றது பாவியேன்இணைநெடுங்கண்துயிலா *
கரியநாழிகைஊழியில்பெரியன கழியுமாறுஅறியேனே.
1694 கலங்கமாக்கடல்கடைந்தடைத்து இலங்கையர்கோனது வரையாகம்
மலங்க * வெஞ்சமத்துஅடுசரம்துரந்த எம்மடிகளும்வாரானால் *
இலங்குவெங்கதிரிளமதியதனொடும் விடைமணியடும் * ஆயன்
விலங்கல்வேயினதோசையுமாய் இனிவிளைவதொன்றறியேனே.
1695 முழுதிவ்வையகம்முறைகெடமறைதலும் முனிவனும்முனிவெய்தி *
மழுவினால்மன்னராருயிர்வவ்விய மைந்தனும்வாரானால் *
ஒழுகுநுண்பனிக்கொடுங்கியபேடையை அடங்கஅஞ்சிறைகோலி *
தழுவுநள்ளிருள்தனிமையின்கடியது ஓர்கொடுவினையறியேனே.
1696 கனஞ்செய்மாமதிள்கணபுரத்தவனொடும் கனவினில்அவன்தந்த *
மனஞ்செயின்பம்வந்துஉள்புகவெள்கி என்வளைநெகஇருந்தேனை *
சினஞ்செய்மால்விடைச்சிறுமணியோசை என்சிந்தையைச்சிந்துவிக்கும் *
அனந்தலன்றிலின்னரிகுரல் பாவியேனாவியைஅடுகின்றதே.
1697 வார்கொள்மென்முலைமடந்தையர் தடங்கடல்வண்ணனைத்தாள்நயந்து *
ஆர்வத்தால்அவர்புலம்பியபுலம்பலை அறிந்துமுன்உரைசெய்த *
கார்கொள்பைம்பொழில்மங்கையர்காவலன் கலிகன்றியொலிவல்லார் *
ஏர்கொள்வைகுந்தமாநகர்புக்கு இமையவரோடும்கூடுவரே. (2)