Sleep Does Not Come; the Night Lengthens!
தூக்கமே வரவில்லை; இரவு நீள்கிறதே!
1693 முரியும்வெண்திரைமுதுகயம்தீப்பட முழங்கழலெரியம்பின் *
வரிகொள்வெஞ்சிலைவளைவித்தமைந்தனும் வந்திலன்என்செய்கேன்? *
எரியும்வெங்கதிர்துயின்றது பாவியேன்இணைநெடுங்கண்துயிலா *
கரியநாழிகைஊழியில்பெரியன கழியுமாறுஅறியேனே.