Chapter 3

Thiruvellarai - (வென்றி மா)

திருவெள்ளறை
Thiruvellarai - (வென்றி மா)
In Sanskrit, this place is called "Shvetagiri," meaning "White Hill," as it is composed of white rocks. The temple, resembling a fort, is situated atop the hill. The temple features Dakshinayana and Uttarayana entrances. The Uttarayana entrance is open from the month of Thai to the end of Ani, while the Dakshinayana entrance is open from Adi to Margazhi. The deity of this temple is known by the name Pundarikakshan. The temple is surrounded by the Kaveri River on all sides.
இவ்வூருக்கு வட மொழியில் ச்வேதகிரி என்று பெயர். இது வெண்மையான பாறைகளால் இயன்ற மலை. சன்னதி, மலையின்மீது ஒரு கோட்டைபோல் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் முடி உத்தராயண வாசலும், ஆடி முதல் மார்கழி தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும் + Read more
Verses: 1368 to 1377
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule the world of Gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.3.1

1368 வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை மூவெழுகால்
கொன்றதேவ! * நின்குரைகழல்தொழுவது ஓர்வகை எனக்கருள்புரியே *
மன்றில்மாம்பொழில்நுழைதந்துமல்லிகைமௌவலின் போதுஅலர்த்தி *
தென்றல்மாமணம்கமழ்தரவரு திருவெள்ளறை நின்றானே! (2)
1368 ## வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை
மன்னரை * மூவெழுகால்
கொன்ற தேவ! நின் குரை கழல் தொழுவது ஓர்
வகை * எனக்கு அருள்புரியே **
மன்றில் மாம் பொழில் நுழைதந்து * மல்லிகை
மௌவலின் போது அலர்த்தி *
தென்றல் மா மணம் கமழ்தர வரு * திரு
வெள்ளறை நின்றானே 1
1368 ## vĕṉṟi mā mazhu enti muṉ maṇmicai
maṉṉarai * mūvĕzhukāl
kŏṉṟa teva!-niṉ kurai kazhal tŏzhuvatu or
vakai * ĕṉakku arul̤puriye ** -
maṉṟil mām pŏzhil nuzhaitantu * mallikai
mauvaliṉ potu alartti *
tĕṉṟal mā maṇam kamazhtara varu * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-1

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1368. O divine lord who came as ParasuRāman carrying a mazhu and conquered many kings for twenty-seven generations, you stay in Thiruvellarai where fragrant breezes enter the mango groves and the mandrams and make the jasmine and mullai bloom. Give me your grace and show me a way to reach and worship your ankleted feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென்றல் தென்றல் காற்று; மாம் பொழில் மாந்தோப்புகளின்; மன்றில் இடைவெளியில்; நுழைதந்து நுழைந்தும்; மெளவலின் முல்லைப் பூக்களையும்; போது அலர்த்தி மலரச்செய்தும்; மா மணம் மிக்க மணம்; கமழ்தர வரு வீச வந்து உலாவும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; முன் முன்பு ஒரு சமயம்; வென்றி மா வெற்றியருளும்; மழு ஏந்தி கோடாலியை ஏந்தி; மண்மிசை பூமியிலுள்ள; மன்னரை அரசர்களை; மூவெழுகால் இருபத்தொரு தலைமுறை; கொன்ற தேவ! கொலைசெய்த தேவனே!; நின் குரை உன்னுடைய சப்திக்கும்; கழல் ஆபரணத்துடன் கூடிய பாதங்களை; தொழுவது வணங்கும்; ஓர் வகை ஓரு உபாயத்தை; எனக்கு அருள்புரியே எனக்கு அருளவேணும்

PT 5.3.2

1369 வசையில்நான்மறைகெடுத்த அம்மலரயற்குஅருளி, முன்பரிமுகமாய் *
இசைகொள்வேதநூலென்றிவைபயந்தவனே! எனக்குஅருள்புரியே *
உயர்கொள்மாதவிப்போதொடுலாவிய மாருதம்வீதியின் வாய் *
திசையெல்லாம்கமழும்பொழில்சூழ் திருவெள்ளறை நின்றானே!
1369 ## வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
அருளி * முன் பரி முகமாய் *
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே! *
எனக்கு அருள்புரியே **
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய *
மாருதம் வீதியின் வாய் *
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் * திரு
வெள்ளறை நின்றானே 2
1369 ## vacai il nāṉmaṟai kĕṭutta am malar ayaṟku
arul̤i * muṉ pari mukamāy *
icai kŏl̤ veta-nūl ĕṉṟu ivai payantavaṉe! *
ĕṉakku arul̤puriye ** -
uyar kŏl̤ mātavip potŏṭu ulāviya *
mārutam vītiyiṉ vāy *
ticai ĕllām kamazhum pŏzhil cūzh * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-2

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1369. You who, taking the form of a horse, brought the Vedās and taught them to the sages when Nānmuhan, seated on a lotus had lost them stay in Thiruvellarai where a breeze blows though the tall Madhavi trees and spreads fragrance through all the streets and in the groves and in all directions. Give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உயர் கொள் ஓங்கிவளரும்; மாதவி குருக்கத்தி மரங்களிலுள்ள; போதொடு மலர்களினிடையில்; உலாவிய உலாவிய; மாருதம் காற்று; வீதியின்வாய் வீதிதோரும் வீசும்போது; திசை எல்லாம் திசை எல்லாம்; கமழும் மணம் பரப்பும்; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; முன் முன்பு ஒரு சமயம்; வசை இல் குற்றமற்றதான; நான்மறை நான்கு வேதங்களையும்; கெடுத்த துலைத்த; அம் மலர் மலரில் தோன்றின; அயற்கு அருளி பிரமனுக்கு அருளியவன்; பரிமுகமாய் குதிரை வடிவாக அவதரித்து; இசை கொள் ஸ்வரப்ரதானமான; வேத நூல் வேத சாஸ்த்ரங்கள்; என்று இவை இவை என்று சொல்லி; எனக்கு அருள்புரியே எனக்கு அருளவேணும்

PT 5.3.3

1370 வெய்யனாய்உலகேழுடன்நலிந்தவன் உடலகம்இருபிளவா *
கையில்நீளுகிர்ப்படையதுவாய்த்தவனே! எனக்குஅருள்புரியே *
மையினார்தருவராலினம்பாய வண்தடத்திடைக் கமலங்கள் *
தெய்வநாறுஒண்பொய்கைகள்சூழ் திருவெள்ளறை நின்றானே!
1370 வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் *
உடலகம் இரு பிளவா *
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே! *
எனக்கு அருள்புரியே **
மையின் ஆர்தரு வரால் இனம் பாய * வண்
தடத்திடைக் கமலங்கள் *
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் * திரு
வெள்ளறை நின்றானே 3
1370 vĕyyaṉ āy ulaku ezh uṭaṉ nalintavaṉ *
uṭalakam iru pil̤avā *
kaiyil nīl̤ ukirp paṭai-atu vāyttavaṉe! *
ĕṉakku arul̤puriye ** -
maiyiṉ ārtaru varāl iṉam pāya * vaṇ
taṭattiṭaik kamalaṅkal̤ *
tĕyvam nāṟum ŏṇ pŏykaikal̤ cūzh * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-3

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1370. You who split open the chest of the cruel Hiranyan with your long claws when he afflicted the people of all the seven worlds and killed him stay in Thiruvellarai where in the beautiful ponds dark varāl fish frolic and play and lotus plants spread divine fragrance. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மையினார் தரு கருத்த நிறமுடைய; வரால் இனம் வரால் மீன்கள்; வண் தடத்திடை அழகிய தடாகங்களிலே; பாய துள்ளி விளையாடும்; கமலங்கள் தெய்வ தாமரைப் பூக்கள்; நாறும் ஒண் மிக்க மணம் வீசும்; பொய்கைகள் அழகிய பொய்கைகளினால்; சூழ் சூழ்ந்த; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; வெய்யன் மிகவும் பொல்லாதவனாய்; ஆய் இருந்து கொண்டு; உலகு ஏழுடன் ஏழு உலகத்திலுள்ளவர்களையும்; நலிந்தவன் துன்புறுத்திக் கொண்டிருந்த; உடலகம் இரணியனின் உடல்; இரு பிளவா இரண்டு பிளவாகும்படி; கையில் கைகளில்; நீள் உகிர்ப் நீண்ட நகங்களையே; படை அது ஆயுதமாக; வாய்த்தவனே! பெற்றவனே!; எனக்கு அருள்புரியே எனக்கு அருளவேணும்

PT 5.3.4

1371 வாம்பரியுகமன்னர்தம்உயிர்செக ஐவர்க்கட்குஅரசளித்த *
காம்பினார்த்திருவேங்கடப்பொருப்ப! நின்காதலைஅருள் எனக்கு *
மாம்பொழில்தளிர்கோதியமடக்குயில் வாயது துவர்ப்பெய்த *
தீம்பலங்கனித்தேனது நுகர் திருவெள்ளறை நின்றானே!
1371 வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக *
ஐவர்கட்கு அரசு அளித்த *
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப! * நின்
காதலை அருள் எனக்கு **
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் *
வாய் அது துவர்ப்பு எய்த *
தீம் பலங்கனித் தேன் அது நுகர் * திரு
வெள்ளறை நின்றானே 4
1371 vām pari uka maṉṉar-tam uyir cĕka *
aivarkaṭku aracu al̤itta *
kāmpiṉ ār tiru veṅkaṭap pŏruppa! * -niṉ
kātalai arul̤ ĕṉakku ** -
mām pŏzhil tal̤ir kotiya maṭak kuyil *
vāy-atu tuvarppu ĕyta *
tīm palaṅkaṉit teṉ-atu nukar * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-4

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1371. You, the god of the Thiruvenkatam hills filled with bamboo, who drove the chariot for Arjunā in the Bhārathā war and helped him conquer the Kauravās with galloping horses, and gave their kingdom to the five Pāndavās stay in Thiruvellarai where the beautiful cuckoo plucks pollen from the flowers of the mango trees and then, to take away the sour taste, drinks the honey-like juice of sweet jackfruit. Give us your loving grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாம் பொழில் மாந்தோப்புகளில்; தளிர் இருக்கும் தளிர்களை; கோதிய கொத்தி உண்ட அழகிய; மட குயில் பெண் குயில்கள்; வாய் அது தங்கள் வாய்; துவர்ப்பு எய்த துவர்த்துப்போக; தீம் இனிமையான; பலங்கனி பலாப் பழங்களிலுள்ள; தேன் அது நுகர் தேனைச் சுவைக்கும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; வாம் பாரதப்போரில்; பரி உக குதிரைகள் மாள; மன்னர் தம் உயிர் செக அரசர்கள் அழிய; ஐவர்கட்கு பஞ்சபாண்டவர்களுக்கு; அரசளித்த ராஜ்யம் அளித்தவனும்; காம்பின் ஆர் மூங்கில்களாலே நிறைந்த; திருவேங்கட திருமலையில்; பொருப்ப! இருப்பவனே!; நின் காதலை உன்னிடத்தில் பரம பக்தியை; அருள் எனக்கு எனக்கு தந்தருளவேணும்

PT 5.3.5

1372 மானவேலொண்கண்மடவரல் மண்மகள் அழுங்கமுந்நீர்ப் பரப்பில் *
ஏனமாகிஅன்றுஇருநிலம்இடந்தவனே! எனக்குஅருள்புரியே *
கானமாமுல்லைகழைக்கரும்பேறி வெண் முறுவல்செய்து அலர்கின்ற *
தேனின்வாய்மலர்முருகுகுக்கும் திருவெள்ளறை நின்றானே!
1372 மான வேல் ஒண் கண் மடவரல் * மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் *
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே! * எனக்கு அருள்புரியே **
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி * வெண் முறுவல் செய்து அலர்கின்ற *
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் * திருவெள்ளறை நின்றானே 5
1372 māṉa vel ŏṇ kaṇ maṭavaral * maṇ-makal̤ azhuṅka munnīrp parappil *
eṉam āki aṉṟu iru nilam iṭantavaṉe! * ĕṉakku arul̤puriye **
kāṉa mā mullai kazhaik karumpu eṟi * vĕṇ muṟuval cĕytu alarkiṉṟa *
teṉiṉ vāy malar muruku ukukkum * tiruvĕl̤l̤aṟai niṉṟāṉe-5

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1372. You who as a boar split open the earth, went beneath the ocean and brought up the earth goddess with beautiful spear-like eyes when she was hidden by an Asuran stay in Thiruvellarai where mullai plants in the forest climb on the sugarcane, seeming to smile with their white buds and blossoms as bees drink their honey. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரும்பு கரும்பு; கழை ஏறி நுனிவரை சென்று படர்ந்து; வெண் வெண்மையாக; முறுவல் செய்து சிரிப்பது போல்; அலர்கின்ற மா கான மலரும் பெரிய காட்டு; முல்லை மலர் முல்லைப் பூக்கள்; தேனின் வாய் வண்டுகளின் வாய்களிலே; முருகு உகுக்கும் தேனைப் பெருக்கும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; மான ஒண் பரந்த அழகிய; வேல் வேல் போன்ற; கண் கண்களோடு கூடின; மடவரல் நற்குணங்களையுடைய; மண் மகள் பூமாதேவி; முந்நீர் பிரளயக்கடலின் பரப்பில்; அழுங்க மூழ்கிக்கிடந்த; அன்று அன்று; ஏனம் ஆகி ஏனமாக அவதரித்து; இரு நிலம் பூமியை; இடந்தவனே! குத்தியெடுத்து வந்தவனே!; எனக்கு அருள்புரியே எனக்கு அருளபுரியவேணும்

PT 5.3.6

1373 பொங்குநீள்முடிஅமரர்கள்தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான் *
அங்குஓராமையதாகிய ஆதி! நின்னடிமையை அருள் எனக்கு *
தங்குபேடையோடூடியமதுகரம் தையலார்குழலணைவான் *
திங்கள்தோய்சென்னிமாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே!
1373 பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ *
அமுதினைக் கொடுத்தளிப்பான் *
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி! * நின்
அடிமையை அருள் எனக்கு **
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் *
தையலார் குழல் அணைவான் *
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை * திரு
வெள்ளறை நின்றானே 6
1373 pŏṅku nīl̤ muṭi amararkal̤ tŏzhutu ĕzha *
amutiṉaik kŏṭuttal̤ippāṉ *
aṅku or āmai-atu ākiya āti! * -niṉ
aṭimaiyai arul̤ ĕṉakku ** -
taṅku peṭaiyoṭu ūṭiya matukaram *
taiyalār kuzhal aṇaivāṉ *
tiṅkal̤ toy cĕṉṉi māṭam cĕṉṟu aṇai * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-6

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1373. You, the ancient lord took the form of a turtle and helped the gods and the Asurans churn the milky ocean to get the nectar that you gave only to the gods who, adorned with beautiful crowns, worshiped you. You stay in Thiruvellarai where bees that have lovers’ quarrels with their mates fly to the hair of beautiful women and the tops of the palaces touch the moon. I am your slave. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தங்கு பூவிலே தங்கியிருந்த; பேடையோடு பெண் வண்டோடு; ஊடிய மதுகரம் ஆண் வண்டு சேர்ந்து; தையலார் பெண்களின்; குழல் கூந்தல்களில்; அணைவான் மறைந்திருக்க நினைத்து; திங்கள் தோய் சந்திரமண்டலத்தளவு; சென்னி உயர்ந்த சிகரமுடைய; மாடம் மாளிகைகளை; சென்று அணை அடைந்து நின்ற; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; பொங்கு நீள் முடி நீண்ட கிரீடத்தை யுடைய; அமரர்கள் தேவர்கள்; தொழுது எழ தன்னை வணங்கி எழ அவர்களுக்கு; அமுதினை அமிருதத்தைத்; கொடுத்தளிப்பான் தந்தருள்வதற்காக; அங்கு ஓர் அங்கு ஓர்; ஆமை அது ஆமையாக அவதரித்த; ஆகிய ஆதி! எம்பெருமானே!; நின் அடிமையை உனக்கு நான் அடியனாயிருக்க; எனக்கு அருள் எனக்கு அருளபுரியவேணும்

PT 5.3.7

1374 ஆறினோடொருநான்குடைநெடுமுடி அரக்கன்தன் சிரமெல்லாம் *
வேறுவேறுகவில்லதுவளைத்தவனே! எனக்குஅருள்புரியே *
மாறில்சோதியமரதகப்பாசடைத் தாமரைமலர்வார்ந்த *
தேறல்மாந்திவண்டுஇன்னிசைமுரல திருவெள்ளறை நின்றானே!
1374 ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி *
அரக்கன் தன் சிரம் எல்லாம் *
வேறு வேறு உக வில் அது வளைத்தவ
னே! * எனக்கு அருள்புரியே **
மாறு இல் சோதிய மரதகப் பாசடைத் *
தாமரை மலர் வார்ந்த *
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் * திரு
வெள்ளறை நின்றானே 7
1374 āṟiṉoṭu ŏru nāṉku uṭai nĕṭu muṭi *
arakkaṉ-taṉ ciram ĕllām *
veṟu veṟu uka vil-atu val̤aittava
ṉe! * -ĕṉakku arul̤puriye ** -
māṟu il cotiya maratakap pācaṭait *
tāmarai malar vārnta *
teṟal mānti vaṇṭu iṉ icai mural * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-7

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1374. You who bent your bow and cut down the ten heads of the Rākshasa Rāvana adorned with long crowns stay in Thiruvellarai where bees sing sweetly drinking honey from flourishing lotus flowers with green emerald-like leaves. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறு இல் சோதிய ஒப்பற்ற ஒளியையும்; மரதகப் மரதகம் போன்ற; பாசடை பச்சிலைகளையுமுடைய; தாமரை மலர் தாமரை மலர்களிலுள்ள; வார்ந்த தேறல் பெருகும் தேனை; மாந்தி வண்டு சுவைத்த வண்டுகளின்; இன்னிசை இனிய இசையை; முரல் ரீங்காரம் பண்ணும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; அரக்கன் தன் இராவணனின்; நெடு முடி உடை நீண்ட கிரீடங்களையுடைய; ஆறினோடு பத்துத்; ஒரு நான்கு தலைகளையும்; வேறு வேறு தனித்தனியே; உக அற்று விழும்படி; வில் அது வில்லை; வளைத்தவனே! வளைத்தவனே!; எனக்கு அருள்புரியே எனக்கு அருளபுரியவேணும்

PT 5.3.8

1375 முன்னிவ்வேழுலகுஉணர்வின்றிஇருள்மிக உம்பர்கள் தொழுதேத்த *
அன்னமாகிஅன்றருமறைபயந்தவனே! எனக்குஅருள்புரியே *
மன்னுகேதகைசூதகம்என்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள் *
தென்னவென்னவண்டுஇன்னிசைமுரல் திருவெள்ளறை நின்றானே!
1375 முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி * இருள் மிக
உம்பர்கள் தொழுது ஏத்த *
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ
னே! * எனக்கு அருள்புரியே **
மன்னு கேதகை சூதகம் என்று இவை *
வனத்திடைச் சுரும்பு இனங்கள் *
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் * திரு
வெள்ளறை நின்றானே 8
1375 muṉ iv ezh ulaku uṇarvu iṉṟi * irul̤ mika
umparkal̤ tŏzhutu etta *
aṉṉam āki aṉṟu aru maṟai payantava
ṉe! * -ĕṉakku arul̤puriye ** -
maṉṉu ketakai cūtakam ĕṉṟu ivai *
vaṉattiṭaic curumpu iṉaṅkal̤ *
tĕṉṉa ĕṉṉa vaṇṭu iṉ icai mural * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-8

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1375. When the world grew dark and everyone became dull-witted, and the gods in the sky worshiped you asking you to give them knowledge, you took the form of a swan and taught them the Vedās. You stay in Thiruvellarai where surumbu bees and many kinds of other bees swarm around the blooming screw pine plants and mango trees singing beautifully with the sound “tena tena. ” Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு இடைவிடாமல்; கேதகை பூக்கும் தாழை மாமரம்; சூதகம் என்று இவை ஆகிய மரங்களையுடைய; வனத்திடை சோலைகளின் நடுவே; சுரும்பு சுரும்பு; இனங்கள் இன வண்டுகளின் கூட்டம்; தென்ன என்ன தென்ன தென்ன என்றுபாட; வண்டு இன்னிசை வண்டுகள் இன்னிசை; முரல் ரீங்காரம் பண்ணும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; முன் இவ் ஏழ் முன்பொரு சமயம் ஏழ்; உலகு உலகனைத்தும்; உணர்வு இன்றி உணர்வு இன்றி; இருள் மிக இருளில் ஆழ்ந்து கிடந்த போது; உம்பர்கள் தேவர்கள்; தொழுது ஏத்த வணங்கித் துதிக்க; அன்று அன்று; அன்னம் ஆகி அன்னம் ஆகி; அருமறை காணாமல்போன அருமையான வேதங்களை; பயந்தவனே! உண்டாக்கி தந்தவனே!; எனக்கு அருள்புரியே எனக்கு அருளபுரியவேணும்

PT 5.3.9

1376 ஆங்குமாவலிவேள்வியில்இரந்துசென்று அகலிடம் முழுதினையும் *
பாங்கினால்கொண்டபரம! நிற்பணிந்தெழுவேன்எனக்கு அருள்புரியே *
ஓங்குபிண்டியின்செம்மலரேறி வண்டுழிதர * மாவேறித்
தீங்குயில்மிழற்றும்படப்பைத் திருவெள்ளறை நின்றானே!
1376 ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று *
அகல் இடம் முழுதினையும் *
பாங்கினால் கொண்ட பரம! நின் பணிந்து எழு
வேன் * எனக்கு அருள்புரியே **
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி * வண்டு
உழிதர * மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் * திரு
வெள்ளறை நின்றானே 9
1376 āṅku māvali vel̤viyil irantu cĕṉṟu *
akal-iṭam muzhutiṉaiyum *
pāṅkiṉāl kŏṇṭa parama!-niṉ paṇintu ĕzhu
veṉ * ĕṉakku arul̤puriye ** -
oṅku piṇṭiyiṉ cĕm malar eṟi * vaṇṭu
uzhitara * mā eṟit
tīm kuyil mizhaṟṟum paṭappait * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-9

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1376. You, the highest one, who went to the sacrifice of king Mahabali, begged him for three feet of land and then cleverly measured the earth and the sky with your two feet stay in Thiruvellarai filled with groves where bees fly to the asoka trees and swarm around their red flowers and the cuckoo birds coo loudly when they see those red flowers because they think that the bees have caught fire. I worship you. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓங்கு ஓங்கி வளரும்; பிண்டியின் அசோக மரத்தின்; செம் மலர் சிவந்த மலர்கள் மீது; வண்டு ஏறி வண்டுகள் ஏறி; உழிதர ஸஞ்சரிக்க; தீம் இனிய இசயையுடைய; குயில் குயில்கள்; மா மாமரங்களின் மேலேறி; ஏறி மிழற்றும் நின்று கூவும்; படப்பை கொடித் தோட்டங்களையுடையதான; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; மாவலி மஹாபலியின்; வேள்வியில் யாகபூமியில்; இரந்து ஆங்கு சென்று சென்று யாசித்து; அகல் இடம் அனைத்து; முழுதினையும் உலகங்களையும்; பாங்கினால் முறைபடி; கொண்ட தனதாக்கிக் கொண்ட; பரம! எம்பெருமானே!; நின் பணிந்து உன்னை வணங்கி; எழுவேன் துதிக்கின்றேன்; எனக்கு அருள்புரியே எனக்கு அருளபுரியவேணும்

PT 5.3.10

1377 மஞ்சுலாமணிமாடங்கள்சூழ் திருவெள்ளறை யதன்மேய *
அஞ்சனம்புரையும் திருவுருவனை ஆதியை அமுதத்தை *
நஞ்சுலாவியவேல்வலவன் கலிகன்றிசொல்ஐயிரண்டும் *
எஞ்சலின்றிநின்றுஏத்தவல்லார் இமையோர்க்கரசு ஆவார்களே (2)
1377 ## மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் * திரு
வெள்ளறை அதன் மேய *
அஞ்சனம் புரையும் திரு உருவனை *
ஆதியை அமுதத்தை **
நஞ்சு உலாவிய வேல் வலவன் * கலி
கன்றி சொல் ஐஇரண்டும் *
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் * இமை
யோர்க்கு அரசு ஆவர்களே 10
1377 ## mañcu ulām maṇi māṭaṅkal̤ cūzh * tiru
vĕl̤l̤aṟai-ataṉ meya *
añcaṉam puraiyum tiru uruvaṉai *
ātiyai amutattai **
nañcu ulāviya vel valavaṉ * kali
kaṉṟi cŏl aiiraṇṭum *
ĕñcal iṉṟi niṉṟu etta vallār * imai
yorkku aracu āvarkal̤e-10

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1377. Kaliyan, the poet skilled at throwing poisoned spears in battle, composed ten pāsurams on the ancient god, the nectar, the divine, whose color is dark as kohl who stays in Thiruvellarai filled with shining palaces over which clouds float. If devotees sing these ten pāsurams without pausing they will become the kings of the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மஞ்சு உலாம் மேகங்கள் உலாவும்; மணி நவரத்தினங்கள் பதித்த; மாடங்கள் சூழ் மாளிகைகளினால் சூழந்த; திருவெள்ளறை திருவெள்ளறையில்; அதன் மேய இருப்பவனும்; அஞ்சனம் புரையும் மை போன்ற; திரு உருவனை உருவுடையவனும்; ஆதியை முழுமுதற் கடவுளானவனும்; அமுதத்தை அமுதம் போன்றவனைக் குறித்து; நஞ்சு விஷமுடைய; உலாவிய வேற்படையை; வேல் வலவன் செலுத்தவல்லவரான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த; ஐயிரண்டும் பத்துப் பாசுரங்களையும்; எஞ்சல் இன்றி குறைவின்றி; நின்று ஏத்த பக்தியோடு துதிக்க; வல்லார் வல்லவர்கள்; இமையோர்க்கு நித்யசூரிகளுக்கு இணையாக; அரசு ஆவார்களே அரசர்களாக ஆவார்களே