Your browser does not support the audio element.
audio
1378 உந்திமேல்நான்முகனைப்படைத்தான் உலகுண்டவன்
எந்தைபெம்மான் * இமையோர்கள்தாதைக்கு இடமென்பரால் *
சந்தினோடுமணியும்கொழிக்கும் புனல்காவிரி *
அந்திபோலும்நிறத்தார்வயல்சூழ் தென்னரங்கமே. (2)
1379 வையமுண்டுஆலிலைமேவுமாயன், மணிநீண்முடி *
பைகொள்நாகத்தணையான் பயிலும்இடமென்பரால் *
தையல்நல்லார்குழல்மாலையும் மற்றவர்தடமுலை *
செய்யசாந்தும்கலந்திழிபுனல்சூழ் தென்னரங்கமே.
1380 பண்டுஇவ்வையமளப்பான் சென்று மாவலிகையில்நீர்
கொண்ட * ஆழித்தடக்கைக் குறளனிடமென்பரால் *
வண்டுபாடும்மதுவார்புனல் வந்திழிகாவிரி *
அண்டநாறும்பொழில்சூழ்ந்து அழகார்தென்னரங்கமே.
1381 விளைத்தவெம்போர் விறல்வாளரக்கன்நகர்பாழ்பட *
வளைத்தவல்வில்தடக்கையவனுக்கு இடமென்பரால் *
துளைக்கையானைமருப்பும் அகிலும்கொணர்ந்துந்தி * முன்
திளைக்கும்செல்வப்புனல்காவிரிசூழ் தென்னரங்கமே.
1382 வம்புலாம்கூந்தல்மண்டோதரிகாதலன் வான்புக *
அம்புதன்னால்முனிந்த அழகனிடமென்பரால் *
உம்பர்கோனும்உலகேழும் வந்தீண்டிவணங்கும் * நல்
செம்பொனாரும்மதிள்சூழ்ந்து அழகார்தென்னரங்கமே.
1383 கலையுடுத்தஅகலல்குல் வன்பேய்மகள்தாயென *
முலைகொடுத்தாளுயிருண்டவன் வாழுமிடமென்பரால் *
குலையெடுத்தகதலிப் பொழிலூடும்வந்துஉந்தி * முன்
அலையெடுக்கும்புனல்காவிரிசூழ் தென்னரங்கமே.
1384 கஞ்சன்நெஞ்சும்கடுமல்லரும் சகடமுங்காலினால் *
துஞ்சவென்றசுடராழியான் வாழிடமென்பரால் *
மஞ்சுசேர்மாளிகை நீடகில்புகையும் * மறையோர்
செஞ்சொல்வேள்விப்புகையும்கமழும் தென்னரங்கமே.
1385 ஏனமீனாமையோடு அரியும்சிறுகுறளுமாய் *
தானுமாய தரணித்தலைவனிடமென்பரால் *
வானும்மண்ணும்நிறையப் புகுந்துஈண்டிவணங்கும் * நல்
தேனும்பாலும்கலந்தன்னவர்சேர் தென்னரங்கமே.
1386 சேயன்என்றும்மிகப்பெரியன் நுண்நேர்மையினாய * இம்
மாயையையாரும்அறியாவகையான் இடமென்பரால் *
வேயின்முத்தும்மணியும்கொணர்ந்து ஆர்ப்புனல்காவிரி *
ஆயபொன்மாமதிள்சூழ்ந்த அழகார்தென்னரங்கமே.
1387 அல்லிமாதரமரும் திருமார்வனரங்கத்தை *
கல்லின்மன்னுமதிள் மங்கையர்கோன்கலிகன்றிசொல் *
நல்லிசைமாலைகள் நாலிரண்டுமிரண்டும் * உடன்
வல்லவர்தாம்உலகாண்டு பின்வானுலகாள்வரே. (2)