Your browser does not support the audio element.
audio
1368 வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை மூவெழுகால்
கொன்றதேவ! * நின்குரைகழல்தொழுவது ஓர்வகை எனக்கருள்புரியே *
மன்றில்மாம்பொழில்நுழைதந்துமல்லிகைமௌவலின் போதுஅலர்த்தி *
தென்றல்மாமணம்கமழ்தரவரு திருவெள்ளறை நின்றானே! (2)
1369 வசையில்நான்மறைகெடுத்த அம்மலரயற்குஅருளி, முன்பரிமுகமாய் *
இசைகொள்வேதநூலென்றிவைபயந்தவனே! எனக்குஅருள்புரியே *
உயர்கொள்மாதவிப்போதொடுலாவிய மாருதம்வீதியின் வாய் *
திசையெல்லாம்கமழும்பொழில்சூழ் திருவெள்ளறை நின்றானே!
1370 வெய்யனாய்உலகேழுடன்நலிந்தவன் உடலகம்இருபிளவா *
கையில்நீளுகிர்ப்படையதுவாய்த்தவனே! எனக்குஅருள்புரியே *
மையினார்தருவராலினம்பாய வண்தடத்திடைக் கமலங்கள் *
தெய்வநாறுஒண்பொய்கைகள்சூழ் திருவெள்ளறை நின்றானே!
1371 வாம்பரியுகமன்னர்தம்உயிர்செக ஐவர்க்கட்குஅரசளித்த *
காம்பினார்த்திருவேங்கடப்பொருப்ப! நின்காதலைஅருள் எனக்கு *
மாம்பொழில்தளிர்கோதியமடக்குயில் வாயது துவர்ப்பெய்த *
தீம்பலங்கனித்தேனது நுகர் திருவெள்ளறை நின்றானே!
1372 மானவேலொண்கண்மடவரல் மண்மகள் அழுங்கமுந்நீர்ப் பரப்பில் *
ஏனமாகிஅன்றுஇருநிலம்இடந்தவனே! எனக்குஅருள்புரியே *
கானமாமுல்லைகழைக்கரும்பேறி வெண் முறுவல்செய்து அலர்கின்ற *
தேனின்வாய்மலர்முருகுகுக்கும் திருவெள்ளறை நின்றானே!
1373 பொங்குநீள்முடிஅமரர்கள்தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான் *
அங்குஓராமையதாகிய ஆதி! நின்னடிமையை அருள் எனக்கு *
தங்குபேடையோடூடியமதுகரம் தையலார்குழலணைவான் *
திங்கள்தோய்சென்னிமாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே!
1374 ஆறினோடொருநான்குடைநெடுமுடி அரக்கன்தன் சிரமெல்லாம் *
வேறுவேறுகவில்லதுவளைத்தவனே! எனக்குஅருள்புரியே *
மாறில்சோதியமரதகப்பாசடைத் தாமரைமலர்வார்ந்த *
தேறல்மாந்திவண்டுஇன்னிசைமுரல திருவெள்ளறை நின்றானே!
1375 முன்னிவ்வேழுலகுஉணர்வின்றிஇருள்மிக உம்பர்கள் தொழுதேத்த *
அன்னமாகிஅன்றருமறைபயந்தவனே! எனக்குஅருள்புரியே *
மன்னுகேதகைசூதகம்என்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள் *
தென்னவென்னவண்டுஇன்னிசைமுரல் திருவெள்ளறை நின்றானே!
1376 ஆங்குமாவலிவேள்வியில்இரந்துசென்று அகலிடம் முழுதினையும் *
பாங்கினால்கொண்டபரம! நிற்பணிந்தெழுவேன்எனக்கு அருள்புரியே *
ஓங்குபிண்டியின்செம்மலரேறி வண்டுழிதர * மாவேறித்
தீங்குயில்மிழற்றும்படப்பைத் திருவெள்ளறை நின்றானே!
1377 மஞ்சுலாமணிமாடங்கள்சூழ் திருவெள்ளறை யதன்மேய *
அஞ்சனம்புரையும் திருவுருவனை ஆதியை அமுதத்தை *
நஞ்சுலாவியவேல்வலவன் கலிகன்றிசொல்ஐயிரண்டும் *
எஞ்சலின்றிநின்றுஏத்தவல்லார் இமையோர்க்கரசு ஆவார்களே (2)