PT 3.8.4

கருடவாகனனின் மணிமாடக் கோயிலை வணங்கு

1221 சிறையார்உவணப்புள்ளொன்றுஏறி அன்று
திசைநான்கும்நான்கும்இரிய * செருவில்
கறையார்நெடுவேலரக்கர்மடியக்
கடல்சூழிலங்கை கடந்தான்இடந்தான் *
முறையால்வளர்க்கின்ற முத்தீயர்நால்வேதர்
ஐவேள்வியாறங்கர் ஏழினிசையோர் *
மறையோர்வணங்கப்புகழெய்து நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
PT.3.8.4
1221 ciṟai ār uvaṇap pul̤ ŏṉṟu eṟi * aṉṟu
ticai nāṉkum nāṉkum iriya * cĕruvil
kaṟai ār nĕṭu vel arakkar maṭiyak *
kaṭal cūzh ilaṅkai kaṭantāṉ iṭam-tāṉ **
muṟaiyāl val̤arkkiṉṟa mut tīyar nāl vetar *
ai vel̤vi āṟu aṅkar ezhiṉ icaiyor *
maṟaiyor vaṇaṅkap pukazh ĕytu nāṅkūr *
maṇimāṭakkoyil-vaṇaṅku ĕṉ maṉaṉe-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1221. Our lord who went to Lankā surrounded with oceans riding on large-winged Garudā and fought and destroyed the Rākshasas who carried long spears smeared with blood, making them run away on all sides stays in Manimādakkoyil where Vediyars worship him in his famous temple, perform the five sacrifices, make the three fires, recite the six Upanishads and know the seven kinds of music. O heart, let us go to Nangur and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு ஒரு சமயம்; சிறை ஆர் உவண சிறகுகள் உள்ள ஒப்பற்ற; புள் ஒன்று ஏறி கருடன் மீது ஏறிக்கொண்டு; செருவில் யுத்தத்தில் எதிர்த்த; கறை ஆர் கறை பட்ட வேற்படையை யுடைய; நெடுவேல் அரக்கர் அரக்கர்கள் அழிய; திசை நான்கும் நான்கும் இரிய நான்கு திசைகளிலும் ஓட; மடிய சிலர் மாண்டு போக; கடல் சூழ் இலங்கை கடலால் சூழப்பட்ட இலங்கையை; கடந்தான் அழித்த பெருமானுடைய; இடம் தான் இருப்பிடம்; முறையால் முறைப்படி; வளர்க்கின்ற ஹோமஞ்செய்கிற; முத்தீயர் மூன்று அக்நிகளையுடையவர்களாய்; நால் வேதர் நான்கு வேதங்களையும் ஓதுபவர்களாய்; ஐவேள்வி ஐந்து வேள்விகளைச் செய்பவர்களாய்; ஆறு அங்கர் வேதாங்கங்கள் ஆறையும் பயின்றவராய்; ஏழின் ஸப்தஸ்வரங்களையும்; இசையோர் அறிந்தவர்களுமான; மறையோர் வணங்க வைதிகர்கள் வணங்குவதனால்; புகழ் எய்தும் நாங்கூர் புகழ் பெற்றிருக்கும் திருநாங்கூரிலே; மணிமாடக்கோயில் மணிமாடக்கோயிலில் சென்று; வணங்கு என் மனனே! வணங்கு என் மனனே!
anṛu āt the time when cruelty was abundant; siṛai wings which help to fly; ār present without any shortcoming; onṛu matchless; uvaṇap pul̤ on garudāzhvār who is known as periya thiruvadi; ĕṛi climbed and mercifully arrived; seruvil opposed in the battle; kaṛaiyār complete with stains; nedu vĕl having long spear; arakkar rākshasas; thisai nāngum nāngum in eight directions; iriya to make (some) run; madiya to kill (some); kadal sūzh fortified by ocean; ilangai the town, lankā; kadandhān emperumān who won over, his; idam being the abode; muṛaiyāl by the methods explained in vĕdham; val̤arkkinṛa performing hŏmam (fire sacrifice; oblation); muththīyar those who have three fires; nāl vĕdhar those who are well versed in four vĕdhams; aivĕl̤vi āṛu angar those who are endowed with five great oblations and six ancillary subjects of vĕdham; ĕzhin isaiyŏr those who truly know the seven svaras (tunes); maṛaiyŏr distinguished brāhmaṇas; vaṇanga due to surrendering with offering obeisances; pugazh eydhum acquiring great fame; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil thirumaṇimādak kŏyil; en mananĕ ŏh my heart!; vaṇangu surrender