PT 3.8.5

கண்ணபிரானுக்கு இடம் திருநாங்கூர்

1222 இழையாடுகொங்கைத்தலைநஞ்சம்உண்டிட்டு
இளங்கன்றுகொண்டுவிளங்காய்எறிந்து *
தழைவாடவந்தாள்குருந்தம்ஓசித்துத்
தடந்தாமரைப்பொய்கைபுக்கான்இடந்தான் *
குழையாடவல்லிக்குலமாட மாடே
குயில்கூவநீடுகொடிமாடம்மல்கு *
மழையாடுசோலைமயிலாலு நாங்கூர் *
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
PT.3.8.5
1222 izhai āṭu kŏṅkait talai nañcam uṇṭiṭṭu *
il̤aṅ kaṉṟu kŏṇṭu vil̤aṅkāy ĕṟintu *
tazhai vāṭa vaṉ tāl̤ kuruntam ŏcittut *
taṭan tāmaraip pŏykai pukkāṉ iṭam-tāṉ **
kuzhai āṭa vallik kulam āṭa māṭe *
kuyil kūva nīṭu kŏṭi māṭam malku *
mazhai āṭu colai mayil ālu nāṅkūr *
maṇimāṭakkoyil-vaṇaṅku ĕṉ maṉaṉe-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1222. Our lord drank poisonous milk from the breasts of Putanā and killed her, threw Vatsāsuran when he came as a calf onto Kapithasuran who had the form of a Vilām fruit tree, killing them both, broke the Kurundam tree and made its tender leaves wither, and entered the lotus pond and danced on the head of Kālingan. He stays in Manimadakkoyil in Nāngur where the tender shoots of the trees and the blooming creepers embrace each other, cuckoo birds coo and peacocks dance as the clouds float over the groves. O heart, let us go to Nāngur and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இழை ஆடு ஆபரணங்கள் அணிந்த; கொங்கைத் தலை பேய்ச்சியின்; நஞ்சம் உண்டிட்டு விஷப் பாலை உண்டவரையும்; இளங்கன்று இளங்கன்று ரூபமான; கொண்டு அஸுரனை கொண்டு; விளங்காய் விளங்காய் ரூபமாக வந்த அஸுரனையும்; எறிந்து எறிந்து இருவரையும் முடித்தவனாயும்; குருந்தம் வன் தாள் வலிதான குருந்தமரத்தை; தழை வாட தழைகள் வாடி உலரும்படி; ஒசித்து முறித்தவனாயும்; தடந் தாமரைப் பொய்கை தாமரைக் தடாகத்தில்; புக்கான் கோபிகைகளுடன்; இடம் தான் ஜலக்கிரீடை செய்த இடம் தான்; குழை ஆட மரங்களின் தளிர்கள் அசைந்தாட; மாடே வல்லி அவற்றின் அருகேயுள்ள; குலம் ஆட பூங்கொடிகளும் ஆட; குயில் கூவ குயில்கள் கூவ; மழை ஆடு மேகங்கள் உலாவ; சோலை மயில் ஆலும் சோலைகளிலே மயில்கள் ஆட; நீடு கொடி நீண்ட கொடிகளையுடைய; மாடம் மல்கு மாடமாளிகைகளினால் நிறைந்த; நாங்கூர் திருநாங்கூரிலே உள்ள; மணிமாடக்கோயில் மணிமாடக்கோயிலில் சென்று; வணங்கு என் மனனே! வணங்கு என் மனமே!
izhai ornaments; ādu swaying; kongaith thalai in the pūthanā-s bosom tips; nanjam poison; uṇdittu consumed; vil̤angāy on the demon who stood as the wood apple; il̤am kanṛu koṇdu lifted up the demon who came as the young calf; eṛindhu threw to kill both of them; van thāl̤ having strong roots; kurundham kurundha tree; thazhai vāda to make its branches wither; osiththu broke; thadam vast; thāmaraip poygai in lotus pond; pukkān krishṇa who went and stole the clothes of the gŏpikā girls, his; idam being the abode; kuzhai sprouts of trees; āda as they sway (due to the soft breeśe); vallik kulam the collection of creepers (which spread on those branches); āda to sway; mādu in the surroundings; kuyil cuckoos; kūva to sing; mazhai ādu where the clouds are roaming; sŏlai in the garden; mayil ālum peacocks dance; nīdu tall; kodi flags planted; mādam mansions; malgum are present closely to each other; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil thirumaṇimādak kŏyil; en mananĕ ŏh my heart!; vaṇangu surrender