PT 3.10.5

உலகளந்தவன் கோயில் அரிமேய விண்ணகரம்

1242 கண்டவர்தம்மனம்மகிழமாவலிதன்வேள்விக்
களவில்மிகுசிறுகுறளாய்மூவடியென்றுஇரந்திட்டு *
அண்டமும் இவ்வலைகடலும்அவனிகளுமெல்லாம்
அளந்தபிரான்அமரும்இடம், வளங்கொள் பொழிலயலே *
அண்டமுறுமுழவொலியும்வண்டினங்களொலியும்
அருமறையினொலியும்மடவார்சிலம்பினொலியும் *
அண்டமுறும்அலைகடலினொலிதிகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
PT.3.10.5
1242 kaṇṭavar-tam maṉam makizha māvali-taṉ vel̤vik *
kal̤avu il miku ciṟu kuṟal̤ āy mūvaṭi ĕṉṟu irantiṭṭu *
aṇṭamum iv alai kaṭalum avaṉikal̤um ĕllām *
al̤anta pirāṉ amarum iṭam-val̤aṅ kŏl̤ pŏzhil ayale *
aṇṭam uṟu muzhavu ŏliyum vaṇṭu iṉaṅkal̤ ŏliyum *
aru maṟaiyiṉ ŏliyum maṭavār cilampiṉ ŏliyum *
aṇṭam uṟum alai kaṭaliṉ ŏli tikazhum nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce -5

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1242. Our god who took the form of a dwarf-like thief, went to the sacrifice of Mahābali, took three feet of land as a boon from the king and measured all the earth and the ocean rolling with waves as all the people of the world saw him and rejoiced stays in Arimeyavinnagaram in Nāngur surrounded with flourishing groves, where the sound of the drums that reaches the sky, the humming of swarming bees, the chanting of the divine Vedās, the tinkling of the anklets of beautiful women and the roaring of the rolling waves of the ocean spread everywhere. O heart, let us go and worship him in that temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்டவர் தம் கண்டவர்கள் அனைவரும்; மனம் மகிழ மனம் மகிழ; மாவலி தன் மகாபலியின்; வேள்விகள் வேள்வியில்; களவு இல் மிகு கபடமில்லாது தோன்றுமவனாய்; சிறு குறள் ஆய் சிறிய வாமனனாய்; மூவடி என்று மூன்று அடி நிலம் தர வேண்டுமென்று; இரந்திட்டு யாசித்து; அண்டமும் ஆகாசமும்; இவ் அலை கடலும் அலை கடலும்; அவனிகளும் எல்லாம் ஏழுலகங்களும் அனைத்தையும்; அளந்த பிரான் அளந்த பிரான்; அமரும் இடம் இருக்குமிடம்; வளங் கொள் வளமுள்ள; பொழில் அயலே சோலைகள் அருகே; அண்டம் உறு ஆகாசத்தில் சென்று; முழவு ஒலியும் முழங்கும் வாத்ய கோஷங்களும்; வண்டு இனங்கள் ஒலியும் வண்டுகளின் ரீங்காரமும்; அரு மறையின் ஒலியும் வேத கோஷங்களும்; மடவார் சிலம்பின் நடனமாடும் பெண்களின்; ஒலியும் நூபுர த்வனியும்; அண்டம் உறும் அண்டப்பித்தில் வரும்; அலைகடலின் அலைகடலின்; ஒலி திகழும் ஓசையும் திகழும்; நாங்கூர் திருநாங்கூரின்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
kaṇdavar tham manam ṭhe hearts of everyone who has seen; maghizha to rejoice; māvali than vĕl̤vi in the sacrificial arena of mahābali; kal̤avu il appearing to be non-deceitful; migu siṛu kuṛal̤āy being very short vāmana; mūvadi enṛu saying -need three steps of land-; irandhittu begged; aṇdamum sky; i here; alai kadalum oceans which are throwing up waves; avanigal̤um the worlds which are in the form of seven islands; ellām all of these; al̤andha effortlessly scaled and accepted; pirān benefactor; amarum eternally residing; idam being the abode; val̤am kol̤ rich; pozhil ayalĕ near the garden; aṇdam uṛum reaching the sky; muzhavu oliyum sound of the musical instruments; vandu inangal̤ oliyum humming of the beetles which are joyful due to drinking honey; aru maṛaiyin oliyum chants of vĕdham which is difficult to grasp; madavār (dancing) women-s; silambin oliyum sound of the anklets; aṇdam uṛum reaching up to the wall of the oval shaped universe; alai throwing up the waves; kadalin oli like the sound of the ocean of deluge; thigazhum heard; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.