PT 3.10.6

தயரதன் மகன் தங்கும் இடம் அரிமேய விண்ணகரம்

1243 வாள்நெடுங்கண்மலர்க்கூந்தல்மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடியொருபதும்தோளிருபதும்போயுதிர *
தாள்நெடுந்திண்சிலைவளைத்ததயரதன்சேய் என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசுகருதுமிடம், தடமார் *
சேணிடங்கொள்மலர்க்கமலம்சேல்கயல்கள்வாளை
செந்நெலொடுமடுத்தரியஉதிர்ந்தசெழுமுத்தம் *
வாணெடுங்கண்கடைசியர்கள்வாருமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
PT.3.10.6
1243 vāl̤ nĕṭuṅ kaṇ malark kūntal maitilikkā * ilaṅkai
maṉṉaṉ muṭi ŏrupatum tol̤ irupatum poy utira *
tāl̤ nĕṭun tiṇ cilai val̤aitta tayarataṉ cey * ĕṉ-taṉ
taṉic caraṇ vāṉavarkku aracu karutum iṭam-taṭam ār **
ceṇ iṭam kŏl̤ malark kamalam cel kayalkal̤ vāl̤ai *
cĕnnĕlŏṭum aṭuttu ariya utirnta cĕzhu muttam *
vāl̤ nĕṭuṅ kaṇ kaṭaiciyarkal̤ vārum aṇi nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-6

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1243. As Rāma, the son of Dasaratha, the king of the gods in the sky, a refuge for his devotees, went to Lankā to bring back his wife, long-eyed Mythili with a sword-like gaze and hair adorned with flowers and he shot his arrows and cut off the ten heads and twenty arms of Rāvana the king of Lankā. He stays in the Arimeyavinnagaram temple in Nāngur where when farmer women with long bright eyes bend to reap paddy, they find precious pearls, lotuses, kayal and vālai fish and carry them in their hands. O heart, let us go and worship him in that temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் வாள் போன்ற; நெடுங் கண் நீண்ட கண்களையுடையவளும்; மலர்க்கூந்தல் கூந்தலில் மலரணிந்தவளுமான; மைதிலிக்கா மைதிலியை மீட்க; இலங்கை மன்னன் ராவணனின்; முடி ஒரு பதும் பத்துத் தலைகளையும்; தோள் இருபதும் இருபதுதோள்களும்; போய் உதிர உதிரும்படி; தாள் நெடுந் பூட்டப்பட்ட நாணையுடைய; திண் சிலை வளைத்த திடமான வில்லை வளைத்த; தயரதன் சேய் தசரதனுடைய குமாரனும்; என்தன் என்னை ரக்ஷிப்பவனும்; தனிச் சரண் ஈடு இணையற்ற; வானவர்க்கு அரசு தேவர்களின் ரக்ஷகனானவன்; கருதும் இடம் விரும்பி வாழுமிடம்; தடம் ஆர் பொய்கை நிறந்த; சேண் ஆகாசமுள்ள; இடம் கொள் இடமெங்கும் ஓங்கியிருக்கும்; மலர்க் கமலம் தாமரை மலர்களையுடையதும்; சேல் கயல்கள் சேல் கயல்கள்; வாளை வாளை மீன்களையும்; செந்நெலொடும் செந்நெலொடும்; அடுத்து அரிய அடுத்து பிடித்து அறுக்க; உதிர்ந்த செழு அவற்றின் முதிர்ந்த; முத்தம் அழகிய முத்துக்களும்; வாள் நெடுங் வாள் போன்ற நீண்ட; கண் கண்களையுடைய; கடைசியர்கள் ஆய்ச்சியர்; வாரும் அணி திரட்டி எடுக்கும்; நாங்கூர் திருநாங்கூரின்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
vāl̤ sharp like sword; nedu wide; kaṇ divine eyes; malar decorated with flower; kūndhal having hair; maidhilikkā for pirātti; ilangai mannan rāvaṇa, who is the king of lankā, his; oru padhu mudiyum ten heads; irubadhu thŏl̤um twenty shoulders; pŏy udhira to fall down; thāl̤ having string which is tied; nedu long; thiṇ firm; silai bow; val̤aiththa bent; dhayaradhan sĕy son of dhaṣaratha; enṛan for me; thanichcharaṇ being matchless protector; vānavarkku arasu being the lord of nithyasūris; karudhum idam the abode where he resides desirously; thadam ār filled with ponds; sĕṇ idam kol̤ tall to reach up to the sky; malar having flowers; kamalam lotus; sĕl kayalgal̤ vāl̤ai sĕl, kayal and vāl̤ai fish; sem nelodum with red paddy; aduththu ariya as they are gathered and harvested; udhirndha fell from them; sezhu beautiful; muththam pearls; vāl̤ sharp like sword; nedu wide; kaṇ having eyes; kadaisiyargal̤ farming women; vārum collect; aṇi beautiful; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.