PT 3.10.4

இரணியனைப் பிளந்தவன் வாழும் இடம் இது

1241 ஓடாதவாளரியின்உருவமதுகொண்டு அன்று
உலப்பில்மிகுபெருவரத்தஇரணியனைப்பற்றி *
வாடாதவள்ளுகிரால்பிளந்து, அவன்தன்மகனுக்கு
அருள்செய்தான்வாழும்இடம், மல்லிகை செங்கழுநீர் *
சேடேறுமலர்ச்செருந்திசெழுங்கமுகம்பாளை
செண்பகங்கள்மணநாறும்வண்பொழிலினூடே *
ஆடேறுவயலாலைப்புகைகமழு நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
PT.3.10.4
1241 oṭāta āl̤ ariyiṉ uruvam-atu kŏṇṭu * aṉṟu
ulappil miku pĕru varatta iraṇiyaṉaip paṟṟi *
vāṭāta val̤ ukirāl pil̤antu avaṉ-taṉ makaṉukku *
arul̤cĕytāṉ vāzhum iṭam-mallikai cĕṅkazhunīr **
ceṭu eṟu malarc cĕrunti cĕzhuṅ kamukam pāl̤ai *
cĕṇpakaṅkal̤ maṇam nāṟum vaṇ pŏzhiliṉ ūṭe *
āṭu eṟu vayal ālaip pukai kamazhum nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-4

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1241. The highest lord who took the form of a strong lion that never retreats, went to Hiranyan who had received many boons, split open his chest with his sharp claws and gave his grace to his son Prahaladan stays in the Arimeyavinnagaram temple in Thirunāngur where jasmine, red kazuneer flowers and cherundi bloom in the fields and spread their fragrance and kamuku trees, pālai trees and shenbaga flowers all perfume the beautiful groves and the smoke from sugar-cane presses spreads everywhere. O heart, let us go and worship him in that temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு ஒரு சமயம்; ஓடாத ஆள் அரியின் முதுகுக் காட்டி ஓடாத; உருவம் அது கொண்டு நரசிம்மமாகத் தோன்றி; உலப்பில் மிகு பெரு வரத்த அனேக வரங்களைப் பெற்ற; இரணியனைப் பற்றி இரணியனைப் பிடித்து அவனை; வாடாத வள் வளையாத வலிய; உகிரால் பிளந்து நகங்களால் பிளந்து; அவன் தன் அவன் பிள்ளை; மகனுக்கு பிரகலாதனுக்கு; அருள்செய்தான் அருள்செய்தவன்; வாழும் இடம் வாழும் இடம்; மல்லிகை மல்லிகை பூவும்; செங்கழுநீர் செங்கழுநீர் பூக்களும்; சேடு ஏறு மலர் திரளாகப் பூத்த; செருந்தி புன்னைகளும்; செழுங் கமுகம் அழகிய பாக்கு; பாளை பாளைகளும்; மணம் நாறும் மணம் கமழும்; செண்பகங்கள் செண்பகங்களும்; வண் பொழிலின் அழகிய சோலைகளின்; ஊடே நடுவே; ஆடு ஏறு கரும்பு ஆலைகளுக்காக ஏறின; வயல் வயலில்; ஆலை புகை கமழும் ஆலைப் புகை கமழும்; நாங்கூர் திருநாங்கூரின்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
anṛu When prahlādhan was compelled; ŏdādha not stepping back; adhu such strong; āl̤ariyin uruvam koṇdu assuming the form of narasimha; ulappu il countless; migu peru varaththa having very great boons; iraṇiyanai hiraṇyan; paṝi grabbed; vādādha unbending; val̤ sharp; ugirāl with nails; pil̤andhu to make his chest split into two; avan than maganukku for ṣrī prahlādhāzhwān, who is his son; arul̤ seydhān lord who showed his mercy; vāzhum idam the abode where he is residing; malligai jasmine; sengazhunīr water-lily; sĕdu ĕṛu malar having well blossomed flowers; serundhi sura punnai; sezhu beautiful; kamugam pāl̤ai areca spathes; senbagangal̤ sheṇbaga flowers; maṇam nāṛum fragrance is smelling; vaṇ pozhilin ūdĕ amidst the beautiful garden; ādu ĕṛu vayal in the fields, where sugarcane are to be processed; ālaip pugai kamazhum the smoke from the factory is smelling; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.