Chapter 5

Two women speak the glories of His qualities - (மான் அமரும்)

திருச்சாழல்
Two women speak the glories of His qualities - (மான் அமரும்)
In this section, two women discuss the simplicity and greatness of the Lord through a series of questions and answers. The term "சாழல்" (Sālal) refers to a game played by women and can also mean "friend." In the first two lines, one woman speaks of the Lord's accessibility and simplicity in a somewhat teasing manner. The other woman describes and experiences + Read more
எம்பெருமானின் எளிமையையும் சிறப்பையும் இரு பெண்கள் வினா விடைகளாகக் கூறல். சாழல் என்னுஞ் சொல் மகளிர் விளையாட்டு என்று பொருள்படும் அச்சொல்லுக்கு தோழி என்றும் பொருள் உண்டு. முன் இரண்டு அடிகளால் ஒருத்தி பகவானின் சவுலப்ய குணத்தைச் சொல்லி ஏசிப் பேசுகிறாள். பின் இரண்டடிகளால் மற்றொருத்தி பகவானின் பரந்துவத்தைக் கூறி அநுபவிக்கிறாள். இவ்வாறு அமைந்தது இப்பகுதி இதை உரையாடல் பாசுரம் என்னலாம்.
Verses: 1992 to 2001
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 11.5.1

1992 மானமருமென்னோக்கி வைதேவியின்துணையா *
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தான்காணேடீ! *
கானமரும்கல்லதர்ப்போய்க் காடுறைந்தபொன்னடிக்கள் *
வானவர்தம் சென்னிமலர்கண்டாய்சாழலே! (2)
1992 ## மான் அமரும் மென் நோக்கி * வைதேவி இன் துணையா *
கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்தான் காண் ஏடீ! **
கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்த பொன் அடிக்கள் *
வானவர் தம் சென்னி மலர் * கண்டாய் சாழலே
1992 ## māṉ amarum mĕṉ nokki * vaitevi iṉ tuṇaiyā *
kāṉ amarum kal atar poyk * kāṭu uṟaintāṉ kāṇ eṭī!- **
kāṉ amarum kal atar poyk * kāṭu uṟainta pŏṉ aṭikkal̤ *
vāṉavar-tam cĕṉṉi malar * kaṇṭāy cāzhale

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1992. O friend, see, he went on a path filled with stones and lived in the forest with his wife Vaidehi with soft doe like eyes. . The gods from the sky bowed with their heads adorned with garlands and worshiped the golden feet of Rāma when he walked in the forest. Say sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழீ!; மான் அமரும் மான் போன்ற; மென் மென்மையான; நோக்கி பார்வையையுடைய; வைதேவி வைதேகியை; இன் இனிய; துணையா துணையாகக் கொண்டு; கான் அமரும் காடுகள் நிறைந்த; கல் அதர் போய் கல் வழியே போய்; காடு நீரும் நிழலுமற்ற காடுகளிலே; உறைந்தான் வசித்தான்; காண் என்று ஒருத்தி இகழ்ந்து பேச; சாழலே! தோழீ! மற்றொருத்தி; கான் அமரும் காடுகள் நிறைந்த; கல் அதர் போய் கல் வழியே போய்; காடு உறைந்த காடுகளில் ஸஞ்சரித்த; பொன் அடிக்கள் பொன் அடிகள்; வானவர் தம் தேவர்களின்; சென்னி திருமுடியில் அணியத்தக்க; மலர் பூக்கள் என்ற; கண்டாய் மேன்மையை அறிந்து கொள்

PT 11.5.2

1993 தந்தைதளைகழலத் தோன்றிப்போய் * ஆய்ப்பாடி
நந்தன்குலமதலையாய் வளர்ந்தான்காணேடீ! *
நந்தன்குலமதலையாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண் * எந்தைபெருமான்காண் சாழலே!
1993 தந்தை தளை கழலத் * தோன்றிப் போய் * ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் * வளர்ந்தான் காண் ஏடீ! **
நந்தன் குல மதலையாய் * வளர்ந்தான் நான்முகற்குத் *
தந்தை காண் எந்தை * பெருமான் காண் சாழலே
1993 tantai tal̤ai kazhalat * toṉṟip poy * āyppāṭi
nantaṉ kula matalaiyāy * val̤arntāṉ kāṇ eṭī!- **
nantaṉ kula matalaiyāy * val̤arntāṉ nāṉmukaṟkut *
tantai kāṇ ĕntai * pĕrumāṉ kāṇ cāzhale

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1993. O friend, see! After he was born he released his father Vasudeva from the chains that bound his ankles and Nandan, the cowherd chief, took him as a baby to his village of Gokulam where he was raised as Nandan’s son. He is our dear lord, the father of Nānmuhan, sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழீ!; தந்தை தந்தையாகிய வஸுதேவருடைய; தளை கால்விலங்கு; கழல கழன்று விழும்படியாக; தோன்றி அவதரித்து; போய் அங்கிருந்து பெயர்ந்து போய்; ஆய்ப்பாடி திருவாய்ப்பாடியில்; நந்தன் நந்தகோபனின்; குல குலக் கொழுந்தாய்; மதலையாய் குழந்தையாய்; வளர்ந்தான் காண் வளர்ந்தான்; சாழலே! தோழீ! மற்றொருத்தி; நந்தன் நந்தகோபனின்; குல மதலையாய் குல குழந்தையாய்; வளர்ந்தான் வளர்ந்தவன்; நான்முகற்கு நான் முகனுக்கு; தந்தை காண் தந்தை ஆவான்; எந்தை என் தந்தையான; பெருமான் காண் பெருமான்

PT 11.5.3

1994 ஆழ்கடல்சூழ்வையகத்தார் ஏசப்போய் * ஆய்ப்பாடித்
தாழ்குழலார்வைத்த தயிருண்டான்காணேடீ! *
தாழ்குழலார்வைத்த தயிருண்டபொன்வயிறு * இவ்
வேழுலகுமுண்டும் இடமுடைத்தால்சாழலே!
1994 ஆழ் கடல் சூழ் வையகத்தார் * ஏசப் போய் * ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த * தயிர் உண்டான் காண் ஏடீ **
தாழ் குழலார் வைத்த * தயிர் உண்ட பொன் வயிறு * இவ்
ஏழ் உலகும் உண்டும் * இடம் உடைத்தால் சாழலே
1994 āzh kaṭal cūzh vaiyakattār * ecap poy * āyppāṭit
tāzh kuzhalār vaitta * tayir uṇṭāṉ kāṇ eṭī **
tāzh kuzhalār vaitta * tayir uṇṭa pŏṉ vayiṟu * iv
ezh ulakum uṇṭum * iṭam uṭaittāl cāzhale

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1994. O friend, see! He was raised as a cowherd among people who did not know he was the lord. He ate happily all the fragrant butter that the long-haired cowherd women of the village in Gokulam churned and kept. His golden stomach that swallowed all the seven worlds surrounded by the deep ocean had still more room to eat the butter from the uri. Sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; ஆழ் கடல் சூழ் ஆழ்ந்தகடலால் சூழப்பட்ட; வையகத்தார் பூமியிலுள்ளவர்கள் எல்லாரும்; ஏச ஏசும்படி; ஆய்ப்பாடி போய் திருவாய்ப் பாடி போய்; தாழ் தாழ்ந்த; குழலார் கூந்தலையுடைய பெண்கள்; வைத்த சேமித்து வைத்திருந்த; தயிர் தயிரை; உண்டான் உட்கொண்டவன்; காண் அன்றோ இவன்; சாழலே! தோழியே!; தாழ் தாழ்ந்த; குழலார் கூந்தலையுடைய பெண்கள்; வைத்த சேமித்து வைத்திருந்த; தயிர் தயிரை; உண்ட உட்கொண்ட; பொன் வயிறு பொன் வயிற்றில்; இவ் ஏழ் உலகும் இவ்வுலகங்கள் ஏழையும்; உண்டும் உண்டபின்னும்; இடம் இடமிருக்கும்; உடைத்தால் இது என்ன ஆச்சரியம்

PT 11.5.4

1995 அறியாதார்க்கு ஆனாயனாகிப்போய் * ஆய்ப்பாடி
உறியார்நறுவெண்ணெய் உண்டுகந்தான்காணேடீ! *
உறியார்நறுவெண்ணெய் உண்டுகந்தபொன்வயிறுக்கு *
எறிநீருலகனைத்தும் எய்தாதால்சாழலே!
1995 அறியாதார்க்கு * ஆன் ஆயன் ஆகிப் போய் * ஆய்ப்பாடி
உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்தான் காண் ஏடீ! **
உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு *
எறி நீர் உலகு அனைத்தும் * எய்தாதால் சாழலே
1995 aṟiyātārkku * āṉ āyaṉ ākip poy * āyppāṭi
uṟi ār naṟu vĕṇṇĕy * uṇṭu ukantāṉ kāṇ eṭī!- **
uṟi ār naṟu vĕṇṇĕy * uṇṭu ukanta pŏṉ vayiṟṟukku *
ĕṟi nīr ulaku aṉaittum * ĕytātāl cāzhale

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1995. O friend, see! He was raised as a cowherd among the innocent cowherds of the village in Gokulam and ate and relished the fragrant butter that was kept in the uri, but his stomach was still not full and he swallowed all the worlds surrounded by the oceans with rolling waves. Sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; அறியாதார்க்கு ஒன்றும் அறியாதவர்களுக்குள்; ஆன் ஆயன் ஆகி ஆயர்குல கண்ணனாய்; ஆய்ப்பாடி போய் திருவாய்ப்பாடி போய்; உறி ஆர் உறிகளில் இருந்த; நறு மணம் மிக்க; வெண்ணெய் வெண்ணெயை; உண்டு உண்டு; உகந்தான் காண் உகந்தான்; சாழலே! தோழியே!; உறி ஆர் உறிகளில் இருந்த; நறு மணம் மிக்க; வெண்ணெய் வெண்ணெயை; உண்டு உகந்த உண்டு உகந்த; பொன் வயிற்றுக்கு பொன் வயிற்றுக்கு; எறி நீர் கடல் சூழ்ந்த; உலகு அனைத்தும் உலகங்களெல்லாம்; எய்தாதால் போதாது என்ன ஆச்சரியம்

PT 11.5.5

1996 வண்ணக்கருங்குழல் ஆய்ச்சியால்மொத்துண்டு *
கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டான்காணேடீ! *
கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டானாகிலும் *
எண்ணற்கரியன் இமையோர்க்கும்சாழலே!
1996 வண்ணக் கருங் குழல் * ஆய்ச்சியால் மொத்துண்டு *
கண்ணிக் குறுங் கயிற்றால் * கட்டுண்டான் காண் ஏடீ **
கண்ணிக் குறுங் கயிற்றால் * கட்டுண்டான் ஆகிலும் *
எண்ணற்கு அரியன் * இமையோர்க்கும் சாழலே 5
1996 vaṇṇak karuṅ kuzhal * āycciyāl mŏttuṇṭu *
kaṇṇik kuṟuṅ kayiṟṟāl * kaṭṭuṇṭāṉ kāṇ eṭī- **
kaṇṇik kuṟuṅ kayiṟṟāl * kaṭṭuṇṭāṉ ākilum *
ĕṇṇaṟku ariyaṉ * imaiyorkkum cāzhale-5

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1996. O friend, see! The beautiful dark-haired cowherd women hit him with a churning stick and tied him up with a small rope, but though he was tied up, even the gods of the sky could not know who he is. Sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; வண்ண அழகிய; கருங் குழல் கருத்த கூந்தலையுடைய; ஆய்ச்சியால் யசோதையால்; மொத்துண்டு அடிபட்டு; கண்ணி முடிச்சுகளையுடைய; குறுங் கயிற்றால் குறுங் கயிற்றால்; கட்டு கட்டுப்பட்டு; உண்டான் காண் கிடந்தானே; சாழலே! தோழியே!; கண்ணி முடிச்சுகளையுடைய; குறுங் கயிற்றால் குறுங் கயிற்றால்; கட்டு உண்டான் கட்டுப்பட்டு; ஆகிலும் கிடந்தானேயாகிலும்; இமையோர்க்கும் தேவர்களாலும் பிரமனாலும்; எண்ணற்கு அறிய முடியாதவன்; அரியன் அப்படிப்பட்ட மேன்மையுடையவனன்றோ!

PT 11.5.6

1997 கன்றப்பறைகறங்கக் கண்டவர்தம்கண்களிப்ப *
மன்றில்மரக்கால்கூத்து ஆடினான்காணேடீ! *
மன்றில்மரக்கால்கூத்து ஆடினானாகிலும் *
என்றும்அரியன் இமையோர்க்கும்சாழலே!
1997 கன்றப் பறை கறங்கக் * கண்டவர் தம் கண் களிப்ப *
மன்றில் மரக்கால் * கூத்து ஆடினான் காண் ஏடீ! **
மன்றில் மரக்கால் * கூத்து ஆடினான் ஆகிலும் *
என்றும் அரியன் * இமையோர்க்கும் சாழலே 6
1997 kaṉṟap paṟai kaṟaṅkak * kaṇṭavar-tam kaṇ kal̤ippa *
maṉṟil marakkāl * kūttu āṭiṉāṉ kāṇ eṭī!- **
maṉṟil marakkāl * kūttu āṭiṉāṉ ākilum *
ĕṉṟum ariyaṉ * imaiyorkkum cāzhale-6

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1997. O friend, see! He danced the marakkāl kuuthu in the mandram as the drums beat and his devotees saw his enthusiastic dance. Yet though he danced the marakkāl kuuthu in the mandram, he is hard for the gods to know. Sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; கன்ற கேட்பவர் மனம் கன்றிபோகும்படி; பறை கறங்க பறைகள் ஒலிக்கவும்; கண்டவர் தம் பார்த்தவர்களின்; கண் களிப்ப கண்கள் களிக்கவும்; மன்றில் நாற்சந்திகளிலே; மரக்கால் மரத்தைக் காலிலேகட்டி ஆடுவதான; கூத்து காண் ஒரு கூத்து ஆடினானே; சாழலே! தோழியே!; மன்றில் நாற்சந்திகளிலே; மரக்கால் கூத்து மரக்கால் கூத்து; ஆடினான் ஆகிலும் ஆடினான் ஆகிலும்; இமையோர்க்கும் தேவர்களுக்கும்; என்றும் என்றைக்கும் அறிந்து கொள்ள; அரியன் இயலாத பரம் பொருள் அன்றோ!

PT 11.5.7

1998 கோதைவேல்ஐவர்க்காய் மண்ணகலம்கூறிடுவான் *
தூதனாய், மன்னவனால் சொல்லுண்டான்காணேடீ! *
தூதனாய், மன்னவனால் சொல்லுண்டானாகிலும் *
ஓதநீர்வையகம் முன்னுண்டுஉமிழ்ந்தான்சாழலே!
1998 கோதை வேல் ஐவர்க்கு ஆய் * மண் அகலம் கூறு இடுவான் *
தூதன் ஆய் மன்னவனால் * சொல்லுண்டான் காண் ஏடீ! **
தூதன் ஆய் மன்னவனால் * சொல்லுண்டான் ஆகிலும் *
ஓத நீர் வையகம் * முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே 7
1998 kotai vel aivarkku āy * maṇ akalam kūṟu iṭuvāṉ *
tūtaṉ āy maṉṉavaṉāl * cŏlluṇṭāṉ kāṇ eṭī!- **
tūtaṉ āy maṉṉavaṉāl * cŏlluṇṭāṉ ākilum *
ota nīr vaiyakam * muṉ uṇṭu umizhntāṉ cāzhale-7

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1998. O friend, see! When the Kauravās disgraced Draupadi, the Pāndavās’ wife, he went as a messenger to the Kauravās and asked them to give land to the Pāndavās, but Duriyodhana disgraced him in the assembly. Yet even though he was disgraced in that way, he swallowed all the worlds surrounded by the sounding ocean and spat them out. Sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; கோதை பூமாலையையும்; வேல் வேலையும் உடைய; ஐவர்க்கு ஆய் பஞ்ச பாண்டவர்களுக்காக; மண் அகலம் பூமிப் பரப்பை; கூறு இடுவான் பங்கிட்டுக் கொடுக்க; தூதன் ஆய் தூதுசென்றவனாய்; மன்னவனால் துரியோதனனால்; சொல்லுண்டான் காண் பழிக்கப்பட்டான் அன்றோ!; சாழலே! தோழியே!; தூதன் ஆய் தூதுசென்றவனாய்; மன்னவனால் துரியோதனனால்; சொல்லுண்டான் ஆகிலும் பழிக்கப்பட்டாலும்; ஓத நீர் கடல் சூழ்ந்த; வையகம் உலகத்தையெல்லாம்; முன் பிரளயகாலத்தில்; உண்டு வயிற்றில் வைத்து காத்து; உமிழ்ந்தான் வெளிப்படுத்தினவன் அன்றோ!

PT 11.5.8

1999 பார்மன்னர்மங்கப் படைதொட்டுவெஞ்சமத்து *
தேர்மன்னர்க்காய் அன்றுதேரூர்ந்தான்காணேடீ! *
தேர்மன்னர்க்காய் அன்றுதேரூர்ந்தானாகிலும் *
தார்மன்னர் தங்கள் தலைமேலான்சாழலே!
1999 பார் மன்னர் மங்கப் * படைதொட்டு வெம் சமத்து *
தேர் மன்னற்கு ஆய் * அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ! **
தேர் மன்னற்கு ஆய் * அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் *
தார் மன்னர் தங்கள் * தலைமேலான் சாழலே 8
1999 pār maṉṉar maṅkap * paṭaitŏṭṭu vĕm camattu *
ter maṉṉaṟku āy * aṉṟu ter ūrntāṉ kāṇ eṭī!- **
ter maṉṉaṟku āy * aṉṟu ter ūrntāṉ ākilum *
tār maṉṉar-taṅkal̤ * talaimelāṉ cāzhale-8

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1999. O friends, see. He drove the chariot of the Pāndavās in the terrible Bhārathā war and destroyed their enemies, the Kauravās. Yet even though he drove the chariot for the Pāndavās all kings, adorned with garlands, worship him bowing their heads. Sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; அன்று பாரதப் போரிலே; பார் பூமியிலுள்ள; மன்னர் அரசர்கள் யாவரும்; மங்க மாளும்படி; வெம் சமத்து யுத்த பூமியில்; படைதொட்டு பிரதிஜ்ஞைக்கு மாறாக ஆயுதமெடுத்து; தேர் மன்னர்க்கு ஆய் அர்ஜுனனுக்கு துணையாய்; தேர் ஊர்ந்தான் காண் தேர் ஓட்டினானே!; சாழலே! தோழியே!; அன்று பாரதப் போரிலே; தேர் மன்னர்க்கு ஆய் அர்ஜுனனுக்கு துணையாய்; தேர் தேர்; ஊர்ந்தான்ஆகிலும் ஓட்டினவனே ஆனாலும்; தார் வெற்றி மாலையுடைய; மன்னர் தங்கள் அரசர்களுக்கெல்லாம்; தலைமேலான் தலைமேல் வீற்றிருப்பவன் அன்றோ!

PT 11.5.9

2000 கண்டார் இரங்கக் கழியக்குறளுருவாய் *
வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தான்காணேடீ! *
வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தானாகிலும் *
விண்டேழுலகுக்கும் மிக்கான்காண்சாழலே!
2000 கண்டார் இரங்கக் * கழியக் குறள் உரு ஆய் *
வண் தாரான் வேள்வியில் * மண் இரந்தான் காண் ஏடீ **
வண் தாரான் வேள்வியில் * மண் இரந்தான் ஆகிலும் *
விண்டு ஏழ் உலகுக்கும் * மிக்கான் காண் சாழலே 9
2000 kaṇṭār iraṅkak * kazhiyak kuṟal̤ uru āy *
vaṇ tārāṉ vel̤viyil * maṇ irantāṉ kāṇ eṭī **
vaṇ tārāṉ vel̤viyil * maṇ irantāṉ ākilum *
viṇṭu ezh ulakukkum * mikkāṉ kāṇ cāzhale-9

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2000. O friend, see! He went to the sacrifice of Mahābali, the king adorned with cool garlands, and begged for three feet of land, making those who saw him feel pity. Yet even though he begged for those three feet of land, he is the highest lord of the seven worlds. Sāzhale!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; கண்டார் பார்த்தவர்களின்; இரங்க மனமிரங்கும்படி; கழிய மிகவும்; குறள் உருவாய் குள்ளவடிவு உடையவனாய்; வண் வள்ளல் தனத்தோடு; தாரான் தோள் மாலையணிந்த மகாபலியின்; வேள்வியில் யாகத்தில் சென்று; மண் மூன்றடி மண்; இரந்தான் காண் யாசித்தானன்றோ!; சாழலே! தோழியே!; வண் வள்ளல்தனத்தோடு; தாரான் தோள் மாலையணிந்த மகாபலியின்; வேள்வியில் யாகத்தில் சென்று; மண் மூன்றடி மண்; இரந்தான் ஆகிலும் யாசித்தான் ஆகிலும்; விண்டு விஷ்ணுவாய் விபுவாய்; ஏழ் உலகுக்கும் ஏழ் உலகுக்கும்; மிக்கான் காண் மேம்பட்டவன் விஞ்சினவன் காண்!

PT 11.5.10

2001 கள்ளத்தால்மாவலியை மூவடிமண்கொண்டளந்தான் *
வெள்ளத்தான்வேங்கடத்தான் என்பரால்காணேடீ! *
வெள்ளத்தான்வேங்கடத்தானேலும் * கலிகன்றி
உள்ளத்தினுள்ளே உளன்கண்டாய்சாழலே! (2)
2001 ## கள்ளத்தால் மாவலியை * மூவடி மண் கொண்டு அளந்தான் *
வெள்ளத்தான் வேங்கடத்தான் * என்பரால் காண் ஏடீ! **
வெள்ளத்தான் * வேங்கடத்தானேலும் * கலிகன்றி
உள்ளத்தின் உள்ளே * உளன் கண்டாய் சாழலே 10
2001 ## kal̤l̤attāl māvaliyai * mūvaṭi maṇ kŏṇṭu al̤antāṉ *
vĕl̤l̤attāṉ veṅkaṭattāṉ * ĕṉparāl kāṇ eṭī!- **
vĕl̤l̤attāṉ * veṅkaṭattāṉelum * kalikaṉṟi
ul̤l̤attiṉ ul̤l̤e * ul̤aṉ kaṇṭāy cāzhale-10

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2001. O friend, see! He went as a dwarf to king Mahabali’s sacrifice, asked for three feet of land, tricked the king, grew tall and measured the world and the sky with his two feet. Even though he is the god of Thiruvellam and Thiruvenkatam, he is in the heart of the poet Kaliyan. Sāzhale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஏடீ! தோழியே!; கள்ளத்தால் கள்ளத்தனத்தால்; மாவலியை மகாபலியிடத்தில்; மூவடி மண் கொண்டு மூவடி மண் பெற்று; அளந்தான் உலகங்கள் அனைத்தையும் அளந்தான்; வெள்ளத்தான் திருப்பாற்கடலிலே உள்ளான்; வேங்கடத்தான் திருமலையிலே உள்ளான்; என்பரால் காண் என்று சொல்லுகிறார்களன்றோ!; சாழலே! தோழியே!; வெள்ளத்தான் திருப்பாற்கடலிலே உள்ளான்; வேங்கடத்தான் திருமலையிலே உள்ளான்; ஆலும் ஆகிலும்; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; உள்ளத்தின் உள்ளத்தின்; உள்ளே உளன் உள்ளேயும் உள்ளான்; கண்டாய் காண்க