Your browser does not support the audio element.
audio
1992 மானமருமென்னோக்கி வைதேவியின்துணையா *
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தான்காணேடீ! *
கானமரும்கல்லதர்ப்போய்க் காடுறைந்தபொன்னடிக்கள் *
வானவர்தம் சென்னிமலர்கண்டாய்சாழலே! (2)
1993 தந்தைதளைகழலத் தோன்றிப்போய் * ஆய்ப்பாடி
நந்தன்குலமதலையாய் வளர்ந்தான்காணேடீ! *
நந்தன்குலமதலையாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண் * எந்தைபெருமான்காண் சாழலே!
1994 ஆழ்கடல்சூழ்வையகத்தார் ஏசப்போய் * ஆய்ப்பாடித்
தாழ்குழலார்வைத்த தயிருண்டான்காணேடீ! *
தாழ்குழலார்வைத்த தயிருண்டபொன்வயிறு * இவ்
வேழுலகுமுண்டும் இடமுடைத்தால்சாழலே!
1995 அறியாதார்க்கு ஆனாயனாகிப்போய் * ஆய்ப்பாடி
உறியார்நறுவெண்ணெய் உண்டுகந்தான்காணேடீ! *
உறியார்நறுவெண்ணெய் உண்டுகந்தபொன்வயிறுக்கு *
எறிநீருலகனைத்தும் எய்தாதால்சாழலே!
1996 வண்ணக்கருங்குழல் ஆய்ச்சியால்மொத்துண்டு *
கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டான்காணேடீ! *
கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டானாகிலும் *
எண்ணற்கரியன் இமையோர்க்கும்சாழலே!
1997 கன்றப்பறைகறங்கக் கண்டவர்தம்கண்களிப்ப *
மன்றில்மரக்கால்கூத்து ஆடினான்காணேடீ! *
மன்றில்மரக்கால்கூத்து ஆடினானாகிலும் *
என்றும்அரியன் இமையோர்க்கும்சாழலே!
1998 கோதைவேல்ஐவர்க்காய் மண்ணகலம்கூறிடுவான் *
தூதனாய், மன்னவனால் சொல்லுண்டான்காணேடீ! *
தூதனாய், மன்னவனால் சொல்லுண்டானாகிலும் *
ஓதநீர்வையகம் முன்னுண்டுஉமிழ்ந்தான்சாழலே!
1999 பார்மன்னர்மங்கப் படைதொட்டுவெஞ்சமத்து *
தேர்மன்னர்க்காய் அன்றுதேரூர்ந்தான்காணேடீ! *
தேர்மன்னர்க்காய் அன்றுதேரூர்ந்தானாகிலும் *
தார்மன்னர் தங்கள் தலைமேலான்சாழலே!
2000 கண்டார் இரங்கக் கழியக்குறளுருவாய் *
வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தான்காணேடீ! *
வண்தாரான்வேள்வியில் மண்ணிரந்தானாகிலும் *
விண்டேழுலகுக்கும் மிக்கான்காண்சாழலே!
2001 கள்ளத்தால்மாவலியை மூவடிமண்கொண்டளந்தான் *
வெள்ளத்தான்வேங்கடத்தான் என்பரால்காணேடீ! *
வெள்ளத்தான்வேங்கடத்தானேலும் * கலிகன்றி
உள்ளத்தினுள்ளே உளன்கண்டாய்சாழலே! (2)