PT 1.8.6

நரசிம்மனே வேங்கடத்தில் நிற்பவன்

1023 எண்திசைகளும்ஏழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து *
பண்டுஒராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்குஇடர் தீர்த்தவன் *
ஒண்திறலவுணனுரத்துகிர்வைத்தவன் ஒள்ளெயிற்றொடு *
திண்திறலரியாயவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
PT.1.8.6
1023 ĕṇ ticaikal̤um ezh ulakamum vāṅkip * pŏṉ vayiṟṟil pĕytu *
paṇṭu or āl ilaip pal̤l̤i kŏṇṭavaṉ * pāl matikku iṭar tīrttavaṉ **
ŏṇ tiṟal avuṇaṉ urattu ukir vaittavaṉ * ŏl̤ ĕyiṟṟŏṭu *
tiṇ tiṟal ariyāyavaṉ * tiruveṅkaṭam aṭai nĕñcame-6

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1023. Long ago during the great deluge, He gathered all eight directions and the seven worlds, and placed them within his radiant stomach, resting calmly on a single banyan leaf. He removed the blemish that once struck the moon. With shining teeth and unmatched strength as Narasimha, the fierce and mighty form, He tore into the chest of Hiraṇya with his sharp nails. That Lord now resides in Thiruvēṅkaṭam. O mind, go and reach that sacred hill!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எண் திசைகளும் எட்டுத் திக்குகளையும்; ஏழ் உலகமும் வாங்கி ஏழு உலகங்களையும்; பண்டு ப்ரளயகாலத்தில்; பொன் தனது அழகிய; வயிற்றில் பெய்து வயிற்றிலே வைத்து; ஓர் ஆல் இலை ஓர் ஆல் இலையில்; பள்ளி கொண்டவன் சயனித்தவனும்; பால் மதிக்கு வெளுத்த சந்திரனின்; இடர் துக்கத்தை; தீர்த்தவன் போக்கினவனும்; ஒள் எயிற்றொடு பிரகாசமான பற்களோடு; ஒண் திறல் மஹா பலசாலியான; திண் திறல் வலிவுடைய; அரியாயவன் நரசிம்ம மூர்த்தியாய்; அவுணன் இரணியனுடைய; உரத்து உகிர் மார்பிலே நகங்களை; வைத்தவன் வைத்து அழுத்தினவன் இருக்குமிடம்; திருவேங்கடம் திருவேங்கடம்; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
eṇ dhisaigal̤um eight directions; ĕzhu ulagamum seven worlds; paṇdu during mahāpral̤ayam (great deluge); vāngi consumed; pon praiseworthy; vayiṝil in (his) divine stomach; peydhu placed; ŏr āl ilai on a banyan leaf; pal̤l̤i koṇdavan being the one who was mercifully resting; pāl (shining) like milk; madhikku occurred for the moon; idar decay; thīrththavan one who eliminated; oṇ thiṛal very strong; avuṇan hiraṇya, the demon, his; uraththu in the chest; ugir vaiththavan being the one who placed the divine nail and tore; ol̤ radiant; eyiṝodu with teeth; thiṇ firm; thiṛal having strength; ariyāy avan eternal abode of the one who appeared in the form of narasimha; thiruvĕngadam thirumalā; adai nenjamĕ ŏh mind! ṛeach there.