PT 1.8.7

எல்லாம் ஆனவன் தங்குமிடம் வேங்கடம்

1024 பாரும்நீர்எரிகாற்றினோடு ஆகாசமும்இவையாயினான் *
பேரும்ஆயிரம்பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம் *
காரும்வார்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தர *
சேரும்வார்பொழில்சூழ்எழில்திருவேங்கடம் அடைநெஞ்சமே!
PT.1.8.7
1024 pārum nīr ĕri kāṟṟiṉoṭu * ākācamum ivai āyiṉāṉ *
perum āyiram peca niṉṟa * piṟappili pĕrukum iṭam **
kārum vār paṉi nīl̤ vicumpiṭaic * corum mā mukil toytara *
cerum vār pŏzhil cūzh ĕzhil * tiruveṅkaṭam aṭai nĕñcame-7

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1024. He is the five great elements—earth, water, fire, air, and space. He stands beyond birth and death, and is praised through a thousand divine names. His dwelling is Thiruvēṅkaṭam, which is surrounded by tall, lush groves and where in the vast sky, dark clouds gather and pour down mist and rain. O mind, go and reach that sacred hill!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாரும் நீர் எரி பூமி ஜலம் அக்னி; காற்றினோடு ஆகாசமும் வாயு ஆகாசம்; இவை இவை அனைத்தும் தானேனாய்; ஆயினான் இருப்பவனும்; பேரும் ஆயிரம் ஆயிரம் நாமங்களையும்; பேச நின்ற கூறி வணங்கும்; பிறப்பிலி பிறத்தல் இறத்தல் இல்லாதவனும்; பெருகும் இடம் எம்பெருமான் வளருகிற இடமானதும்; நீள் விசும்பிடை பெரிய ஆகாசத்தின் இடையில்; காரும் வார் பனி மழை நீரும் மிக்க பனித்துளியும்; சோரும் பெய்யும்; மா முகில் காள மேகங்கள்; தோய்தர வந்து படியும்படியாக; சேரும் வார் பொருத்தமான உயரவோங்கியிருக்கிற; பொழில் சூழ் எழில் சோலைகளாலே சூழ்ந்த; திருவேங்கடம் திருவேங்கடத்தை; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
pārum earth; nīr water; eri fire; kāṝinŏdu with air; āgāyamum ether; ivai these five elements; āyinān one who remains as; āyiram pĕrum thousand divine names; pĕsa to recite and surrender; ninṛa being the one who is eternally residing; piṛappili sarvĕṣvaran who is without a birth; perugum growing; idam abode is; kārum clouds; vār pani lot of mist; nīl̤ visumbu idai in the great sky; sŏrum to pour; māmugil huge clouds; thŏy thara to rest; sĕru matching; vār lengthy; pozhil by garden; sūzh being surrounded; ezhil beautiful; thiruvĕngadam thirumalā; adai nenjamĕ ŏh mind! ṛeach there.