PT 1.8.5

மனமே! வேங்கடம் சேர்ந்து துயரம் நீங்கு

1022 வண்கையான் அவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்று, மாணியாய் *
மண்கையால்இரந்தான் மராமரமேழும்எய்தவலத்தினான் *
எண்கையான்இமயத்துள்ளான் இருஞ்சோலைமேவிய எம்பிரான் *
திண்கைம்மாதுயர்தீர்த்தவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
PT.1.8.5
1022 vaṇ kaiyāṉ avuṇarkku nāyakaṉ * vel̤viyil cĕṉṟu māṇiyāy *
maṇ kaiyāl irantāṉ * marāmaram ezhum ĕyta valattiṉāṉ **
ĕṇ kaiyāṉ imayattu ul̤l̤āṉ * iruñcolai meviya ĕm pirāṉ *
tiṇ kai mā tuyar tīrttavaṉ * tiruveṅkaṭam aṭai nĕñcame-5

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1022. He, whose hands give without limit, once approached the yajña of Mahābali, chief of the asuras, disguised as a young ascetic, and begged with His own hands. He is the one who, as Rāma, shot through seven mighty sāla trees in one stroke, with strength beyond measure. He has eight divine arms, dwells in the snowy Himālayas, and resides in Thirumālirunjōlai in the south. It was He who removed the sorrow of the elephant king Gajēndra, caught in the grip of a strong crocodile. That same Lord dwells now in Thiruvēṅkaṭam. O mind, go and reach that sacred place.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண் விசேஷமாக தானம் செய்யும்; கையான் கையையுடையவனாய்; அவுணர்க்கு அசுரர்கட்குத்; நாயகன் தலைவனான மகாபலியின்; வேள்வியில் யாக பூமியை; மாணியாய் பிரம்மசாரி வேஷத்துடன்; சென்று அடைந்து; மண் கையால் தன் கையால்; இரந்தான் பூமியை யாசித்தவனும்; மராமரம் ஏழும் ஏழு சால மரங்களையும்; எய்த துளைபடுத்தின; வலத்தினான் வலிமையுடையவனும்; எண் கையான் அஷ்ட புஜங்களையுடையவனும்; இமயத்து இமயமலையில்; உள்ளான் இருப்பவனும்; இருஞ்சோலை திருமாலிருஞ் சோலையில்; மேவிய இருக்கும் எம்பிரான்; திண் திடமான முதலையின் கையில் அகப்பட்ட; கை மா துதிக்கையையுடைய கஜேந்திரனது; துயர் துயர்; தீர்த்தவன் தீர்த்தவன் இருக்குமிடம்; திருவேங்கடம் திருவேங்கடம்; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
vaṇ kaiyān being the one with a generous hand; avuṇarkku for the demons; nāyagan mahābali, the leader, his; vĕl̤viyil in the sacrificial arena; māṇiyāy being a celibate boy; senṛu went; maṇ earth; kaiyāl with his hand; irandhān being the one who begged; marāmaram ĕzhum the seven ebony trees; eydha (in rāmāvathāram) shot them down; valaththinān being the strong one; eṇ kaiyān being the one with many divine hands; imayaththu ul̤l̤ān being the one who is mercifully residing in himavān (in thiruppiridhi in the himalayas); irunjŏlai in thirumālirunjŏlai which is known as southern thirumalā; mĕviya one who is eternally residing; em pirān being the lord of all; thiṇ strong; kai having trunk; ṣrī gajĕndhrāzhwān-s; thuyar sorrow; thīrththavan sarvĕṣvaran who eliminated, is present in; thiruvĕngadam thirumalā; adai nenjamĕ ŏh mind! ṛeach there.