MUT 35

கண்ணனையே கண்டு தொழுவோம்

2316 காண்காணென விரும்பும்கண்கள் * கதிரிலகு
பூண்தாரகலத்தான் பொன்மேனி * - பாண்கண்
தொழில்பாடி வண்டறையும்தொங்கலான் * செம்பொன்
கழல்பாடியாம்தொழுதும்கை.
2316 kāṇ kāṇ ĕṉa * virumpum kaṇkal̤ * katir ilaku
pūṇ tār * akalattāṉ pŏṉ meṉi ** - pāṇkaṇ
tŏzhil pāṭi * vaṇṭu aṟaiyum tŏṅkalāṉ * cĕmpŏṉ
kazhal pāṭi yām tŏzhutum kai -35

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2316. My eyes say, “I want to see him, I want to see him!” Folding our hands, we melodiously sing his praises and worship the shining golden feet of the god resting on the ocean whose golden body is adorned with rich shining ornaments and a thulasi garland swarming with bees that sing.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்கள் என் கண்கள்; கதிர் ஒளியுள்ள; இலகு பூண் ஆபரணங்களையும்; தார் மாலைகளையும்; அகலத்தான் அணிந்துள்ள பெருமானின்; பொன் பொன் போன்ற; மேனி திருமேனியை; காண் காண வேண்டும்; என விரும்பும் என்று ஆசைப்படும்; வண்டு வண்டுகள்; அறையும் ரீங்கரிக்கும்; தொங்கலான் மாலைகளையுடைய; தொழில் பெருமானின் சேஷ்டிதங்களை; பாண் பண்ணில்; கண் பாடி அமைத்துப் பாடி; செம் பொன் சிவந்த பொன் போன்ற; கழல் திருவடிகளை; யாம் பாடி கை நாம் கைகளைக் கூப்பிப் பாடி; தொழுதும் தொழுது வணங்குவோம்
kaṇgal̤ my eyes; kadhir ilagu being radiant; pūṇ divine ornaments; thār garlands; agalaththān emperumān who is having [the aforementioned] on his divine chest; pon mĕni golden hued divine form; kāṇ kāṇ ena virumbum will keep desiring repeatedly, to see; vaṇdu beetles; aṛaiyum humming; thongalān emperumān who is donning those garlands; thozhil activities; pān kaṇ pādi singing to a nice tune; sem pon kazhal reddish divine feet; yām we; kai with hands; pādi thozhudum will worship, singing