Your browser does not support the audio element.
audio
1520 தூவாயபுள்ளூர்ந்துவந்து துறைவேழம் *
மூவாமைநல்கி முதலைதுணித்தானை *
தேவாதிதேவனைச் செங்கமலக்கண்ணானை *
நாவாயுளானை நறையூரில்கண்டேனே.
1856 கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க * ஓர்
கொம்புகொண்ட குரைகழல்கூத்தனை *
கொம்புலாம்பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் *
நம்பனைச்சென்றுகாண்டும் நாவாயுளே.
3750 அறுக்கும்வினையாயின ஆகத்தவனை *
நிறுத்தும்மனத்துஒன்றிய சிந்தையினார்க்கு *
வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
குறுக்கும்வகையுண்டுகொலோ? கொடியேற்கே. (2)
3751 கொடியேரிடைக் கோகனகத்தவள்கேள்வன் *
வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன் *
நெடியானுறைசோலைகள்சூழ் திருநாவாய் *
அடியேனணுகப்பெறுநாள் எவைகொலொ?
3752 எவைகொல்அணுகப்பெறுநாள்? என்றுஎப்போதும் *
கவையில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன் *
நவையில்திருநாரணன்சேர் திருநாவாய் *
அவையுள்புகலாவது ஓர்நாளறியேனே.
3753 நாளேலறியேன் எனக்குள்ளன * நானும்
மீளாவடிமைப்பணி செய்யப்புகுந்தேன் *
நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா!
3754 மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் *
கண்ணாளன் உலகத்துயிர்தேவர்கட்கெல்லாம் *
விண்ணாளன்விரும்பியுறையும் திருநாவாய் *
கண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே?
3755 கண்டேகளிக்கின்றது இங்குஎன்றுகொல்? கண்கள் *
தொண்டேயுனக்காய்ஒழிந்தேன் துரிசின்றி *
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
கொண்டேயுறைகின்ற எங்கோவலர்கோவே!
3756 கோவாகியமாவலியை நிலங்கொண்டாய்! *
தேவாசுரம்செற்றவனே! திருமாலே! *
நாவாயுறைகின்ற என்நாரண நம்பீ! *
ஆவா! அடியான் இவனென்று அருளாயே.
3757 அருளாதொழிவாய் அருள்செய்து * அடியேனைப்
பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்ப்புகவைப்பாய் *
மருளேயின்றி உன்னைஎன்னெஞ்சத்திருத்தும் *
தெருளேதரு தென்திருநாவாயென்தேவே!
3758 தேவர்முனிவர்க்குஎன்றும்காண்டற்கரியன் *
மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி *
தேவன்விரும்பியுறையும் திருநாவாய் *
யாவரணுகப்பெறுவார்? இனியந்தோ!
3759 அந்தோ! அணுகப்பெறுநாள்என்று எப்போதும் *
சிந்தைகலங்கித் திருமாலென்றழைப்பன் *
கொந்தார்மலர்ச்சோலைகள்சுழ் திருநாவாய் *
வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா!
3760 வண்ணம்மணிமாட நல்நாவாயுள்ளானை *
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன் *
பண்ணர்தமிழ் ஆயிரத்துஇப்பத்தும்வல்லார் *
மண்ணாண்டு மணங்கமழ்வர் மல்லிகையே. (2)