TVT 98

தலைவனது அருமையை நினைந்து கவல்கின்ற தலைவிக்கு தோழி கூறல்

2575 துஞ்சாமுனிவரும் அல்லாதவரும்தொடரநின்ற *
எஞ்சாப்பிறவியிடர்கடிவான் * இமையோர்தமக்கும்
தஞ்சார்விலாததனிப்பெருமூர்த்திதன்மாயம் செவ்வே
நெஞ்சால்நினைப்பரிதால் * வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே.
2575 tuñcā muṉivarum * allātavarum tŏṭara niṉṟa *
ĕñcāp piṟavi iṭar kaṭivāṉ ** imaiyor tamakkum
taṉ cārvu ilāta taṉip pĕru mūrtti taṉ māyam cĕvve *
nĕñcāl niṉaippu aritāl * vĕṇṇĕy ūṇ ĕṉṉum īṉac cŏlle98

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2575. Her friend says, “All the gods in the sky and the sages and others who do not sleep worship our matchless, omnipotent god. He will remove their future births. How can anyone understand how one so divine could steal butter and eat it? Is it his magic?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எஞ்சாப் பிறவி குறைவற்ற பிறவி; இடர் துன்பங்களை; கடிவான் போக்கி அருளுபவனும்; துஞ்சா உறக்கமில்லாத; முனிவரும் முனிவர்களுக்கும்; அல்லாதவரும் தேவர்கள் முதலிய மற்றோருக்கும்; தொடர நின்ற பின் பற்றி வழிபடுவோருக்கும்; தன் சார்வு இலாத ஓர் ஒப்பற்ற; தனி சிறந்த ஸ்வரூபத்தையுடைய; பெருமூர்த்தி எம்பெருமான்; வெண்ணெய் வெண்ணெயை களவு செய்து; ஊண் என்னும் உண்டான் என்னும்; ஈனச் சொல்லே ஈனச் சொல்லுக்கு; மாயம் ஆளான ஆச்சர்யத்தை; இமையோர் தமக்கும் தேவர்களுக்கும்; தன் செவ்வே நன்றாக; நெஞ்சால் நினைப்பு மனதால் நினைக்கவே; அரிதால் அரிதாயிருக்கும்
enjā without contraction; piṛavi happened in samsāram; idar sorrow; kadivān to remove; thunjā not having contraction; munivarum eminent sages such as sanaka et al; allādhavarum others such as brahmā et al; thudara to follow; ninṛa one who remained mercifully; than for himself; sārvu ilādha one who does not have (another entity) as protection; thani being unique; peru without any limitation; mūrththi than sarvĕṣvaran, who has such a nature, his; veṇṇey butter; ūṇ ate (by stealing); ennum sol word such as this; māyam only amaśement; imaiyŏr thamakkum even for nithyasūris who do not have any contraction in their knowledge; sevvĕ very well; nenjāl through mind; ninaippu aridhu will be impossible to think of