TVT 93

இருள்கண்டு அஞ்சுகின்ற தலைவி தன் தோழியரையும் செவிலியரையும் வெறுத்தல்

2570 காலைவெய்யோற்கு முன்னோட்டுக்கொடுத்தகங்குற் குறும்பர் *
மாலைவெய்யோன்பட வையகம்பாவுவர் * அன்னகண்டும்
காலைநன்ஞானத்துறைபடிந்தாடிக்கண்போதுசெய்து
மாலைநன்னாவில்கொள்ளார் * நினையார் அவன்மைப்படியே.
2570 kālai vĕyyoṟku muṉ oṭṭukkŏṭutta * kaṅkul kuṟumpar *
mālai vĕyyoṉ paṭa * vaiyakam pāvuvar ** aṉṉa kaṇṭum
kālai nal ñāṉat tuṟai paṭintu āṭi kaṇ potu cĕytu *
mālai nal nāvil kŏl̤l̤ār * niṉaiyār avaṉ maip paṭiye93

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2570. She says, “In the morning when the hot sun arrives the wicked darkness runs away and then comes back to spread in the evening. The wise sages who worship the lord closing their eyes and meditating do not need to recite his praise or think of his dark form. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காலை காலையில்; வெய்யோற்கு முன் சூரியனுக்கு பயந்து முன்னமே; ஓட்டுக்கொடுத்த ஓடிப்போன; கங்குல் குறும்பர் இரவரசான சிற்றரசர்கள்; மாலை மாலையில்; வெய்யோன் பட சூரியன் என்ற அரசன் அஸ்தமிக்க; வையகம் பாவுவர் பூலோகத்தில் பரவுவார்கள்; அன்ன அப்படிப்பட்ட காலகதியை; கண்டும் பார்த்திருந்தும்; காலை காலை நேரம் பக்திக்கு ஏற்றதாகையால்; நல் ஞான நல்ல ஞானமாகிய; துறை படிந்து ஆடி தீர்த்தத்தில் படிந்து மூழ்கி; கண் பக்தி பரவசத்தாலே; போது செய்து கண்களை மூடிக்கொண்டு; மாலை நன் நாவில் திருமாலை நல்ல நாவினால்; கொள்ளார் அவன் நாமங்களைக் கூவி வணங்காதவர்; அவன் மைப் படியே அவன் திருமேனியின் அழகைபற்றி; நினையார் நினைக்கமாட்டார்கள்
kālai during dawn; veyyŏṛku for sūriyan (sun); mun earlier itself; ŏttukkoduththa one who ran away; kangul called as night; kuṛumbar mischievous person; mālai during dusk; veyyŏn sūriyan; pada as he sets; vaiyagam on earth; paravuvar will spread; anna at that type of change in time; kaṇdum even after seeing; kālai during sunrise; nal (related to bhagavān) being distinguished; gyānam knowledge; thuṛai on the banks; padindhu fitting well; ādi taking a bath; kaṇ (sensory organs such as) eye; pŏdhu seydhu blossoming well (such that they do not engage with worldly matters); mālai sarvĕṣvaran who is bewildered (with his followers); nal eminent (in being devoted to praising sarvĕṣvaran); nāvil tongue; kol̤l̤ār those who do not accept; avan that sarvĕṣvaran’s; mai being black like pigment; padi divine form; ninaiyār will not keep in their hearts