TVT 6

தலைவியின் அழகு கண்டு வியந்த தலைவன் கூற்று

2483 தடாவியவம்பும் முரிந்தசிலைகளும்போகவிட்டு *
கடாயினகொண்டொல்கும் வல்லியீதேனும் * அசுரர் மங்கக்
கடாவியவேகப்பறவையின்பாகன்மதனசெங்கோல்
நடாவியகூற்றங்கண்டீர் * உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே.
2483 taṭāviya ampum * murinta cilaikal̤um pokaviṭṭu *
kaṭāyiṉa kŏṇṭu ŏlkum valli ītu eṉum ** acurar maṅkak
kaṭāviya vekap paṟavaiyiṉ pākaṉ mataṉa cĕṅkol *
naṭāviya kūṟṟam kaṇṭīr * uyir kāmiṉkal̤ ñālattul̤l̤e6

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2483. He says, “This beautiful vine-like girl with sharp eyes like arrows and eyebrows like bent bows shot her arrow-look at me, her target. She is like the god who rides on Garudā, fought and conquered the Asurans, and is like Yama himself, and she is like his son Kama the god of love. Her love will take away your life. Protect yourselves. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடாயின தகுதியான; தடாவிய விசாலமான; அம்பும் வளைந்த பாணம் போன்ற கண்களையும்; முரிந்த வளைந்த; சிலைகளும் வில் போன்ற புருவங்களையும்; போகவிட்டு கொண்டு உள்ளே அடக்கிக் கொண்டு; ஒல்கும் ஒடுங்குகிற; வல்லி எனும் கொடி போன்ற பெண் வடிவமாயினும்; அசுரர் மங்க அசுரர்கள் அழியும்படி; கடாவிய நடத்தப்பட்ட; வேகப் பறவையின் வேகத்தையுடைய கருடனுக்கு இனியனான; பாகன் பாகனான எம்பெருமானின் மகன்; மதன மன்மதனின்; செங்கோல் நடாவிய கட்டளையை நடத்துகிற; கூற்றம் யமனாயிருக்கும்; ஞாலத்துள்ளே! இந்த உலகத்தில் இருக்க; கண்டீர் நினைத்தீர்களாகில்; ஈது இந்த அழகிய வடிவத்தை! பார்த்தவர்களே!; உயிர் உங்கள் உயிரை; காமின்கள் காத்துக் கொள்ளுங்கள்
kadāyina being apt; thadāviya being expansive; ambum (eyes which are like) arrows; murindha curved; silaigal̤um (eyebrows which are like) bows; pŏgavittukkoṇdu controlling (inside); olgum hiding; valliyidhĕnum even if she were like a creeper; asurar demonic entities; manga to be annihilated; kadāviya one who is conducted; vĕgam having agility; paṛavai to garuthmān (garuda); in being sweet; pāgan one who controls, the sarvĕṣvaran; madhanan manmatha’s; sengŏl order; nadāviya one who conducts; kūṝam kaṇdīr beware, the death; gyālaththul̤ in the bhūlŏkam (samsāram); ūyir your vital airs; kāmingal̤ protect