TVT 5

வாடைக்கு நலிந்த தலைவியின் நிறமாற்றம் கண்டு தோழி இரங்கல்

2482 பனிப்பியல்வாக உடையதண்வாடை * இக்காலமிவ்வூர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்தெரிவீசும் * அந்தண்ணந் துழாய்ப்
பனிப்புயல்சோரும்தடங்கண்ணிமாமைத் திறத்துக்கொலாம்?
பனிப்புயல்வண்ணண் * செங்கோலொருநான்று தடாவியதே.
2482 paṉippu iyalvāka * uṭaiya taṇ vāṭai * ik kālam iv ūrp
paṉippu iyalpu ĕllām tavirntu ĕri vicum ** am taṇṇam tuzhāyp
paṉip puyal corum taṭaṅ kaṇṇi māmait tiṟattukkŏlām *
paṉip puyal vaṇṇaṉ * cĕṅkol ŏrunāṉṟu taṭāviyate5

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2482. Her friend says, “The blowing of the cool wind is like fire, it doesn’t seem to know it is the cool season. Does he send it to make wide-eyed girls become pale? Does the cloud-colored Kannan make a rule for the wind to blow so cold?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பனிப்பு இயல்வாக குளிர்ச்சியே இயல்பாக உள்ள; உடைய தண் வாடை குளிர்ந்த வாடை காற்று; இக் காலம் இவ் ஊர் இந்த ஊரில் இப்போது மட்டும்; பனிப்பு இயல்வு குளிரச் செய்வதை; எல்லாம் தவிர்ந்து எல்லாம் தவிர்ந்து இவள் மீது; எரிவீசும் வெப்பத்தை வீசுகின்றதோ; அம் தண்ணம் துழாய் அழகிய குளிர்ந்த துளசி; பனிப் புயல் மழைத்துளியுடைய மேகம் போல்; சோரும் நீர் சொரிவதானது; பனிப் புயல் காளமேகம் போன்ற; வண்ணன் நிறமுடைய; செங்கோல் கண்ணனின் கட்டளையோ; ஒரு நான்று இந்த ஒரு காலத்தில் மட்டும்; தடாவியதே மாறியது; தடங் கண்ணி பெரிய கண்களையுடைய இவளது; மாமை மேனி நிறத்தை; திறத்துக்கொலாம் அழிப்பதற்காக செய்தவை போலும்
panippu creating chillness; iyalvāga udaiya having as its nature; thaṇ being cool; vādai northerly wind; ikkālam at the present time; ivvūril in this place; panippu making it cold; iyalvellām all its basic nature; thavirndhu leaving aside; eri vīsum started to emit fire; am beautiful; thaṇṇam having coolness; thuzhāy for the sake of divine thul̤asi; pani cold; puyal tears, like a rainfall; sŏrum shedding; thadam expansive; kaṇṇi this girl with eyes; māmai thiṛaththukkolām for the sake of beauty; pani cool; puyal like a cloud; vaṇṇan sarvĕṣvaran, who has such a complexion; sengŏl order; oru nānṛu today; thadāviyadhu became bent