TVT 7

கார் காலம் வந்ததே என்று தலைவி மயங்கல்

2484 ஞாலம்பனிப்பச்செறித்து * நன்னீரிட்டுக்கால்சிதைந்து
நீலவல்லேறுபொராநின்றவானமிது * திருமால்
கோலஞ்சுமந்துபிரிந்தார்கொடுமைகுழறுதண்பூங்
காலங்கொலோ? அறியேன் * வினையாட்டியேன் காண்கின்றவே.
2484 ñālam paṉippac cĕṟuttu * nal nīr iṭṭu kāl citaintu *
nīla val eṟu pŏrāniṉṟa vāṉam itu ** tirumāl
kolam cumantu pirintār kŏṭumai kuzhaṟu * taṇ pūṅ
kālam kŏlo? aṟiyeṉ * viṉaiyāṭṭiyeṉ kāṇkiṉṟave7

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2484. She says, “The wind blows, the rain pours down and the clouds look like bulls fighting together. The earth is cool and the sky has the dark color of Thirumāl. Is this the rainy season that comes to make lovers suffer in separation? I don’t know. I have done bad karmā. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீல வல் ஏறு கரிய வலிய எருதுகள்; ஞாலம் பனிப்ப பூமி நடுங்கும்படி; செறுத்து கோபித்துக் கொண்டு; நல் நீர் இட்டு மத ஜலத்தைப் பெருக்கிக்கொண்டு; கால் சிதைந்து கால்களைப் கீறிக் கொண்டு; பொரா நின்ற சண்டை போடுகின்ற; வானம் இது ஆகாசமாகும் இது; திருமால் எம்பெருமானின்; கோலம் சுமந்து வடிவத்தையுடைய; பிரிந்தார் பிரிந்து போன நாயகனின்; கொடுமை குழறு கொடுமையைக் கூறும்; தண் பூங் குளிர்ந்த அழகிய; காலம்கொலோ? கார் காலம் தானோ?; வினையாட்டியேன் தீவினையுடைய நான்; காண்கின்றவே! காண்பவற்றை; அறியேன் இன்னதென்று அறியவில்லையே
idhu this; neelam darkening; val very strong; ĕṛu bulls; gyālam earth; panippa to tremble; seṛuththu becoming angry; nal nīr the exulting water; ittu copiously increasing; kāl sidhaindhu clawing with their feet; poṛā ninṛa fighting; vānam sky; vinaiyāttiyĕn ī, with lot of sins; kāṇginṛa seeing; idhu this; thirumāl̤ consort of ṣrī (mahālakshmi); kŏlam decoration; sumandhu to bear; pirindhār those who separated; kodumai the cruelty (of their sorrow); kuzhaṛum saying incoherently; thaṇ cool; beautiful; kālangolŏ is it the (rainy) season; aṛiyĕn ī am not sure