Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-3-7-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறைமாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-
இந்த ஆச்சர்யத்தை அனுபவித்து பின்னையும் ஏவம் வித சேஷ்டிதங்களைச் செய்து அருளினவன் தன்னைஅவன் இருக்கிற திரு நாட்டிலே சென்று காண வேணும் என்று ஆசைப்படா நின்றது –அதுவோ அதி தூரமாய் இரா நின்றது -என் நெஞ்சைக் கொண்டு என் செய்கேன்