Chapter 3

Engrossed in the all-pervading nature of the Lord, Āzhvār expounds on His auspicious qualities - (ஓர் ஆயிரமாய்)

எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்
“What qualification do we have to even ask and receive even one boon from emperumān? The welfare (yOgakshEmanGgaL) of all things pervading in this world is by His grace alone!” says a realized Āzhvār who expounds on His great qualities in these hymns.
“எம்பெருமானிடம் ஒன்று வேண்டுவதற்கும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது? உலகிலுள்ள எல்லாப் பொருள்களினுடைய யோகக்ஷேமங்களும் அவனுடையதாகவன்றோ இருக்கின்றன!” என்று நன்கு உணர்ந்த ஆழ்வார், நாராயணன் என்று சொல்லுக்கு எல்லையான அவனுடைய சீல குணத்தை ஈண்டுப் பாடுகிறார்.

ஒன்பதாம் பத்து -மூன்றாம் திருவாய் + Read more
Verses: 3695 to 3705
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will surely reach Vaikuntam
  • TVM 9.3.1
    3695 ## ஓர் ஆயிரமாய் * உலகு ஏழ் அளிக்கும் *
    பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் **
    கார் ஆயின * காள நல் மேனியினன் *
    நாரயணன் * நங்கள் பிரான் அவனே (1)
  • TVM 9.3.2
    3696 அவனே அகல் ஞாலம் * படைத்து இடந்தான் *
    அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் * அளந்தான் **
    அவனே அவனும் * அவனும் அவனும் *
    அவனே மற்று எல்லாமும் * அறிந்தனமே (2)
  • TVM 9.3.3
    3697 அறிந்தன வேத * அரும் பொருள் நூல்கள் *
    அறிந்தன கொள்க * அரும் பொருள் ஆதல் **
    அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி *
    அறிந்தனர் * நோய்கள் அறுக்கும் மருந்தே (3)
  • TVM 9.3.4
    3698 மருந்தே நங்கள் * போக மகிழ்ச்சிக்கு என்று *
    பெரும் தேவர் குழாங்கள் * பிதற்றும் பிரான் **
    கரும் தேவன் எம்மான் * கண்ணன் விண் உலகம் *
    தரும் தேவனைச் * சோரேல் கண்டாய் மனமே (4)
  • TVM 9.3.5
    3699 மனமே உன்னை * வல்வினையேன் இரந்து *
    கனமே சொல்லினேன் * இது சோரேல் கண்டாய்! **
    புனம் மேவிய * பூந் தண் துழாய் அலங்கல் *
    இனம் ஏதும் இலானை * அடைவதுமே (5)
  • TVM 9.3.6
    3700 அடைவதும் அணி ஆர் * மலர் மங்கைதோள் *
    மிடைவதும் * அசுரர்க்கு வெம் போர்களே **
    கடைவதும் * கடலுள் அமுதம் * என் மனம்
    உடைவதும் * அவற்கே ஒருங்காகவே (6)
  • TVM 9.3.7
    3701 ஆகம் சேர் * நரசிங்கம் அது ஆகி * ஓர்
    ஆகம் வள் உகிரால் * பிளந்தான் உறை **
    மாக வைகுந்தம் * காண்பதற்கு * என் மனம்
    ஏகம் எண்ணும் * இராப்பகல் இன்றியே (7)
  • TVM 9.3.8
    3702 இன்றிப் போக * இருவினையும் கெடுத்து *
    ஒன்றி யாக்கை புகாமை * உய்யக்கொள்வான் **
    நின்ற வேங்கடம் * நீள் நிலத்து உள்ளது
    சென்று தேவர்கள் * கைதொழுவார்களே (8)
  • TVM 9.3.9
    3703 தொழுது மா மலர் * நீர் சுடர் தூபம் கொண்டு *
    எழுதும் என்னும் இது * மிகை ஆதலின் **
    பழுது இல் தொல் புகழ்ப் * பாம்பு அணைப் பள்ளியாய் *
    தழுவுமாறு அறியேன் * உன தாள்களே (9)
  • TVM 9.3.10
    3704 தாள தாமரையான் * உனது உந்தியான் *
    வாள் கொள் நீள் மழு ஆளி * உன் ஆகத்தான் **
    ஆளராய்த் தொழுவாரும் * அமரர்கள் *
    நாளும் என் புகழ்கோ * உன சீலமே? (10)
  • TVM 9.3.11
    3705 ## சீலம் எல்லை இலான் * அடிமேல் அணி *
    கோலம் நீள் * குருகூர்ச் சடகோபன் ** சொல்
    மாலை ஆயிரத்துள் * இவை பத்தினின்
    பாலர் * வைகுந்தம் ஏறுதல் பான்மையே (11)