Chapter 8

Āzhvār is astonished to see as Lord displays His peculiar form - (மாயா வாமனனே!)

எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்
Deciding to wipe away all of Āzhvār’s worries, Bhagavān was waiting for the right moment to intervene. Even though Āzhvār was aware of Bhagavān’s thought process, “ I am literally at death’s doorstep but He doesn’t allow my life force to separate from my body” says a surprised Āzhvār. In order to jolt Āzhvār even more, Bhagavān makes him aware that His nature is unfathomable to anyone, exhibits His unusual form. Āzhvār is stunned upon seeing Bhagavān, as elaborated in these hymns.
ஆழ்வாரின் வருத்தத்தைத் தீர்க்க எண்ணிய பகவான், அதற்கொரு நேரத்தை எதிர்பார்த்திருந்தான். இது ஆழ்வாருக்குத் தெரியுமாயினும், “உயிர் போகவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருந்தும் போகவொட்டாமல் வைத்திருக்கிறானே” என்று நினைத்து வியந்தார். ஆழ்வாரை மேலும் வியக்கச் செய்யத்தன் விசித்திர விபூதித்துவத்தைப் பகவான் காட்டுகிறான். அது கண்ட ஆழ்வார் வியப்புறுகிறார் இத்திருவாய்மொழியில்.
Verses: 3530 to 3540
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: பாலை யாழ்
Recital benefits: will be always His dear devotees
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.8.1

3530 மாயா! வாமனனே! மதுசூதா! நீயருளாய் *
தீயாய்நீராய்நிலனாய் விசும்பாய்க்காலாய் *
தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் *
நீயாய்நீநின்றவாறு இவையென்னநியாயங்களே! (2)
3530 ## மாயா வாமனனே! * மதுசூதா நீ அருளாய் *
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் * விசும்பு ஆய்க் கால் ஆய் **
தாய் ஆய்த் தந்தை ஆய் * மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய் *
நீ ஆய் நீ நின்றவாறு * இவை என்ன நியாயங்களே (1)
3530 ## māyā vāmaṉaṉe! * matucūtā nī arul̤āy *
tī āy nīr āy nilaṉ āy * vicumpu āyk kāl āy **
tāy āyt tantai āy * makkal̤ āy maṟṟum āy muṟṟum āy *
nī āy nī niṉṟavāṟu * ivai ĕṉṉa niyāyaṅkal̤e (1)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My dear devotee, I am indeed the slayer of demons like Madhu and Kaiṭabha. I am the embodiment of the five elements, the creator of all beings, their sustainer, and their ultimate destination. My presence pervades everything that can be named and even that which transcends words. My form is beyond comprehension, yet I dwell within all things, everywhere.

Explanatory Notes

Many indeed are the wonders performed by the Lord. As Vāmana, the Midget, He went to Mahābali, as soon as He emerged, compelled his attention, got the donation of land of three strides, expanded Himself and spanned the entire universe; He crushed to death, the demons Madhu and Kaitabha under His thigh; He is at once fire and water, father and mother and their progeny as + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயா! வாமனனே! மாயவனே! வாமனனே!; மதுசூதா! மதுசூதனனே!; நீ உன் தன்மையை நீயே; அருளாய் அருளிச் செய்ய வேண்டும்; தீ ஆய் நீர் ஆய் தீ ஆய் நீர் ஆய்; நிலன் ஆய் நிலன் ஆய்; விசும்பு ஆய் கால் ஆய் ஆகாசமாய் காற்றாய்; தாய் ஆய் தந்தை ஆய் தாயாய் தந்தையாய்; மக்கள் ஆய் மக்களாய்; மற்றுமாய் மற்றுமுள்ள பொருள்களாய்; முற்றுமாய் சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய்; நீயாய் நீ உன் உருவமாய்; நீ நின்றவாறு நீ நிற்கும் இந்த தன்மைகள்; இவை என்ன இவை என்ன தன்மைகள்? என்பதை; நியாயங்களே! நீயே அருளிச்செய்ய வேண்டும்
madhusūdhā ŏh one who destroys (like you destroyed madhu to eliminate the doubts of those who doubted your variegated abilities)!; yourself; arul̤āy should kindly explain the way you have your variegated wealth;; thī nīr nilan visumbu kāl five great elements which are the cause for the spherical universe; thāy thandhai makkal̤ maṝum mother, father, children et al (who are all residents in the universe and are unique in their own ways); muṝum all entities which are connected to mother, father, children et al; āy having them as prakāram (form) to have them at your full disposal; nīyāy being the one with distinguished form; you; ninṛa remaining; ivai āṛu this manner; enna what; niyāyangal̤ are under [what] principles?; am distinguished; kal̤ having honey

TVM 7.8.2

3531 அங்கண்மலர்த்தண்துழாய்முடி அச்சுதனே! அருளாய் *
திங்களும்ஞாயிறுமாய்ச் செழும்பல்சுடராயிருளாய் *
பொங்குபொழிமழையாய்ப் புகழாய்ப்பழியாய்ப் பின்னும்நீ *
வெங்கண்வெங்கூற்றமுமாம் இவையென்னவிசித்திரமே!
3531 அம் கள் மலர்த் தண் துழாய் முடி * அச்சுதனே அருளாய் *
திங்களும் ஞாயிறும் ஆய்ச் * செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய் **
பொங்கு பொழி மழை ஆய்ப் * புகழ் ஆய்ப் பழி ஆய்ப் பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் * இவை என்ன விசித்திரமே (2)
3531 am kal̤ malart taṇ tuzhāy muṭi * accutaṉe arul̤āy *
tiṅkal̤um ñāyiṟum āyc * cĕzhum pal cuṭar āy irul̤ āy **
pŏṅku pŏzhi mazhai āyp * pukazh āyp pazhi āyp piṉṉum nī
vĕm kaṇ vĕm kūṟṟamum ām * ivai ĕṉṉa vicittirame (2)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Achuta, adorned with a cool tuḷacī garland on Your beautiful locks! Please enlighten me about the marvel that You embody. You are the radiant Sun, the soothing Moon, and the sparkling stars in the vast sky. You are also the encompassing darkness, the pouring rains, the fame that illuminates, and the infamy that shadows. Furthermore, You are the relentless Death with its piercing gaze.

Explanatory Notes

(i) Towards the end of the last song, the Āzhvār contemplated the Lord’s exquisite personal Form. That has led him on to the description of the tuḷacī-bedecked locks of the Lord in this song.

(ii) The Sun generates enervating heat while the Moon spreads its radiance, cool and refreshing; the stars and planets affect people both ways, for good and bad; darkness, the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் கள் மலர் தேன் பெருகும் மலர்களையுடைய; தண் துழாய் குளிர்ந்த துளசி மாலையை; முடி அச்சுதனே! முடியில் அணிந்த அச்சுதனே!; அருளாய் நீ அருள் புரிய வேண்டும்; திங்களும் சந்திரனும்; ஞாயிறும் ஆய் சூரியனுமாய்; செழும் பல் அழகிய பல வகையான; சுடர் ஆய் நக்ஷத்திரங்களுமாய்; இருளாய் இருளாய்; பொங்கு பொழி மிகுதியாய் பொழியும்; மழையாய் மழையாய்; புகழாய் பழியாய் புகழாய் பழியாய்; பின்னும் நீ மேலும் நீ; வெம் கண் க்ரூரமான கண்களையுடையவனாய்; வெம் கூற்றமும் கொடிய யமனுமாய்; ஆம் இவை என்ன இருக்கும் இவைகள் என்ன; விசித்திரமே! ஆச்சர்யம் என்பதை அருளிச்செய்வாய்
malar having flower; thaṇ invigorating; thuzhāy decorated with thiruththuzhāy (thul̤asi); mudi having hair; achchudhanĕ ŏh achyutha who does not fail (due to complete lordship acquired after accomplishing the desired task); arul̤āy you should mercifully explain!; thingal̤um moon; gyāyiṛumāy being sun; sezhum distinguished; pal many; sudarāy luminous objects such as planets, stars; irul̤āy darkness (in which, creatures cannot see the objects); pongu in abundance (for the growth of such creatures); pozhi pouring; mazhaiyāy being rain; pugazhāy glories (which were earned by the crop etc which grew abundantly due to the rain [and were shared to others]); pazhiyāy blame (due to inapt recipient etc); pinnum further; vem kaṇ being with cruel eyes (to destroy them); vem with cruelty; kūṝamumām being death personified; ivai these aspects; enna vichithram how variegated?; chiththiram in many ways; thĕr chariot

TVM 7.8.3

3532 சித்திரத்தேர்வலவா! திருச்சக்கரத்தாய்! அருளாய் *
எத்தனையோருகமும் அவையாய அவற்றுள்ளியலும் *
ஒத்தவொண்பல்பொருள்கள் உலப்பில்லனவாய்வியவாய் *
வித்தகத்தாய்நிற்றிநீ இவையென்னவிடமங்களே!
3532 சித்திரத் தேர் வலவா * திருச் சக்கரத்தாய் அருளாய் *
எத்தனை ஓர் உகமும் * அவை ஆய் அவற்றுள் இயலும் **
ஒத்த ஒண் பல் பொருள்கள் * உலப்பு இல்லன ஆய் வியவு ஆய் *
வித்தகத்தாய் நிற்றி நீ * இவை என்ன விடமங்களே (3)
3532 cittirat ter valavā * tiruc cakkarattāy arul̤āy *
ĕttaṉai or ukamum * avai āy avaṟṟul̤ iyalum **
ŏtta ŏṇ pal pŏrul̤kal̤ * ulappu illaṉa āy viyavu āy *
vittakattāy niṟṟi nī * ivai ĕṉṉa viṭamaṅkal̤e (3)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Let me unveil the marvelous wonder You are, oh, great Charioteer. You hold the cycle of Yugas, controlling the vast and varied phenomena of the universe with Your discus.

Explanatory Notes

The thing mentioned last in the preceding song was ‘dissolution’. Speaking about dissolution, the Āzhvār would seem to have been reminded about the riddance by Lord Kṛṣṇa, of the entire mass of unwholesome burden on Mother Earth, through the annihilation of the armies in the great battle at Kurukṣetra. It is well known to every Student of Mahā-Bhārata that Lord Kṛṣṇā was + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சித்திரத் தேர் விசித்திரமாகத் தேரை; வலவா! நடத்த வல்லவனே!; திருச் சக்கரத்தாய் சக்கரத்தைக் கையில் உடையவனே!; அருளாய் நீயருளிச் செய்ய வேண்டும்; எத்தனை ஓர் க்ருத-த்ரேதா-த்வாபர-கலி; உகமும் யுகங்களாய்; அவையாய் அவற்றை நியமிப்பவனாய்; அவற்றுள் இயலும் அவற்றுள் நடப்பதாய்; ஒத்த ஒண் ஒத்த பொருள்களிலும்; பல் பொருள்கள் வேறுபட்டவைகளிலும் இருக்கிறாய்; உலப்பு கணக்கற்ற சித் - அசித் பதார்த்தங்களின் அழிவு; இல்லனவாய் இல்லாதவனாய்; வியவு ஆய் அவற்றின் வேறுபாடுகளை நியமிப்பவனாய்; வித்தகத்தாய் ஆச்சரியப்படத்தக்க தன்மையோடே; நிற்றி நீ நீ நிற்கின்றாய்; இவை என்ன இவை என்ன; விடமங்களே! விஷமங்கள் நீ அருளிச்செய்யவேண்டும்
valavā one who can conduct; thiruchchakkaraththāy similarly, oh one who is having the weapon, divine chakra, which can transform day into night!; arul̤āy you should mercifully explain;; eththanai having variations [in yugas] such as krutha, thrĕthā, dhvāpara and kali; ŏr distinguished to be incomparable with one another; ugamum being the controller of yugas; avaiyāy being the time; avaṝul̤ in it; iyalum occurring; oththa being the same in being the embodiment of knowledge; oṇ having distinguished aspects such as being self-illuminating, being knowledgeable etc; pal having distinguished natures as said in -ĕkŏ bahūnām-; ulappillana innumerable; porul̤gal̤ chith (sentient) and achith (insentient) entities; āy having them as your form; viyavu for the differences (in them such as dhĕva, manushya forms which conceal the equality of the souls); āy being the controller; viththagaththāl being amaśing due to being unaffected by their defects as said in -namaksnigdhāni bhūthāni #; nī niṝi you remain;; ivai enna vidamangal̤ what kind of uniqueness is this?; kal̤ honey; avizh sprouting

TVM 7.8.4

3533 கள்ளவிழ்தாமரைக்கண்கண்ணனே! எனக்கொன்றருளாய் *
உள்ளதுமில்லதுமாய்உலப்பில்லனவாய்வியவாய் *
வெள்ளத்தடங்கடலுள் விடநாகணைமேல்மருவி *
உள்ளப்பல்யோகுசெய்தி இவையென்னவுபாயங்களே!
3533 கள் அவிழ் தாமரைக்கண் * கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் *
உள்ளதும் இல்லதும் ஆய் * உலப்பு இல்லன ஆய் வியவு ஆய் **
வெள்ளத் தடம் கடலுள் * விட நாகு அணைமேல் மருவி *
உள்ளப் பல் யோகு செய்தி * இவை என்ன உபாயங்களே! (4)
3533 kal̤ avizh tāmaraikkaṇ * kaṇṇaṉe ĕṉakku ŏṉṟu arul̤āy *
ul̤l̤atum illatum āy * ulappu illaṉa āy viyavu āy **
vĕl̤l̤at taṭam kaṭalul̤ * viṭa nāku aṇaimel maruvi *
ul̤l̤ap pal yoku cĕyti * ivai ĕṉṉa upāyaṅkal̤e! (4)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My dear devotee, your question delves into the profound mysteries of existence. As the Supreme Master, I oversee both the unchanging essence of individuals, existing in various gradations, and the ever-changing phenomena that populate the vast universe. Resting upon my serpent bed in the Milk Ocean, I contemplate the grand tapestry of creation. My plans, if they can be called such, unfold according to the divine order, guiding the cosmos towards its ultimate purpose.

Explanatory Notes

(i) The Āzhvār seems to question the Lord whether even He has to indulge in this kind of contemplation, despite His omni- science and omnipotence and seeks clarification from Him as to what precisely He means to hit upon, as a result of such deep thinking in a state of Yoga-nidhrā (the highest form of activity).

(ii) The sentient beings (the Jīvas) do not change at + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள் அவிழ் தேனோடு மலரும்; தாமரைக்கண் தாமரை போன்ற கண்களையுடைய; கண்ணனே! கண்ணனே!; எனக்கு அடியேனுக்கு; ஒன்று அருளாய் ஒன்று அருளிச்செய்ய வேண்டும்; உள்ளதும் உலகிலுள்ள அழியாத சித்தாகவும்; இல்லதுமாய் அழியும் அசித்தாகவும்; உலப்பு இல்லனவாய் கணக்கற்ற சேதன அசேதன; வியவாய் பொருள்களை நியமிப்பவனாயும்; வெள்ளத் தடம் கடலுள் பாற்கடல் வெள்ளத்திலே; விட நாகணை மேல் விஷங்கொண்ட ஆதிசேஷன் மேல்; மருவி சயனித்து; உள்ளப் பல் யோகு உலகத்தைக் காப்பாற்ற பல; உபாயங்களே உபாயங்களை; செய்தி சிந்திப்பவனாய் இருக்கும் நீ; இவை இவை என்ன என்பதை; என்ன எனக்குக் கூறி அருள வேண்டும்
athāmarai like fresh lotus flower; kaṇ having divine eyes; kaṇṇanĕ ŏh krishṇa!; enakku for me; onṛu one; arul̤āy you should mercifully tell;; ul̤l̤adhum being eternal (due to being nithyam) [chith (sentient beings)]; illadhumāy being transient (due to having forms which keep changing) [achith (insentient objects)]; ulappillanavāy being innumerable; viyavāy having entities which have differences, as your prakāra (form); vel̤l̤am fully; thadam having space; kadal ul̤ in milk ocean; vidam spitting out poison (being invincible by enemies); nāgaṇai mĕl on the mattress called thiruvananthāzhwān; maruvi fitting well; ul̤l̤am in your divine heart; pal many types; yŏgu thoughts for protection; seydhi contemplating;; ivai these; enna what; upāyangal̤ means!; ennai me (who is totally subservient to you, who is fully protected by you); pāsangal̤ inapt aspects

TVM 7.8.5

3534 பாசங்கள்நீக்கி என்னைஉனக்கேயுறக்கொண்டிட்டு * நீ
வாசமலர்த்தண்துழாய்முடி மாயவனே! அருளாய் *
காயமும்சீவனுமாய்க் கழிவாய்ப்பிறப்பாய், பின்னும்நீ *
மாயங்கள்செய்துவைத்தி இவையென்னமயக்குகளே!
3534 பாசங்கள் நீக்கி * என்னை உனக்கே அறக் கொண்டிட்டு * நீ
வாச மலர்த் தண் துழாய் முடி * மாயவனே அருளாய் **
காயமும் சீவனும் ஆய்க் * கழிவு ஆய்ப் பிறப்பு ஆய் பின்னும் நீ *
மாயங்கள் செய்து வைத்தி * இவை என்ன மயக்குக்களே (5)
3534 pācaṅkal̤ nīkki * ĕṉṉai uṉakke aṟak kŏṇṭiṭṭu * nī
vāca malart taṇ tuzhāy muṭi * māyavaṉe arul̤āy **
kāyamum cīvaṉum āyk * kazhivu āyp piṟappu āy piṉṉum nī *
māyaṅkal̤ cĕytu vaitti * ivai ĕṉṉa mayakkukkal̤e (5)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My wondrous Lord, adorned with fragrant tuḷaci on Your locks so fine! You liberated me from all unwholesome bonds and made me Your devotee. You govern the bodies that confine and the souls that dwell within them, overseeing their growth and decline. Yet, You have chosen to keep me in this mortal frame. I am curious to know what allure You find in this perishable form, please enlighten me.

Explanatory Notes

This is the key-song, providing the preamble for this decad. The Saint asks the Lord to elucidate the riddle of His keeping him, in this material body, in mundane surroundings, even after weaning him away from the worldly things and engendering in him inordinate God-love, brooking no further delay in its consummation. With all this special equipment provided unto him by + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாச மலர் மணம் மிக்க மலர்களையுடைய; தண் துழாய்முடி குளிர்ந்த துளசி மாலை அணிந்த; மாயவனே! மாயவனே!; நீ என்னை நீ என்னை உலக விஷயங்களில்; பாசங்கள் நீக்கி பாசங்களை நீக்கி; உனக்கே அற என்னை உனக்கே அடிமை; கொண்டிட்டு ஆக்கிக் கொள்ள வேண்டும்; காயமும் உடலாக இருக்கும் நீயே; சீவனு மாய் ஆத்மாவுமாகவும் உள்ளாய்; பிறப்பாய் பிறப்பு; கழிவாய் இறப்பு இரண்டுக்கும் காரணமானவன் நீ; பின்னும் நீ மேலும் நீ அவித்யா அஞ்ஞானம் போன்ற; மாயங்கள் மாயங்களை; செய்து வைத்தி செய்து வைத்தாய்; இவை என்ன இவை என்ன; மயக்குகளே மயக்கங்கள் என்பதை; அருளாய் அருளிச் செய்ய வேண்டும்
nīkki eliminating; unakkĕ aṛa to exist exclusively for your sake; koṇdittu accepting; vāsam having great fragrance manifesting total subservience; malar having flower; thaṇ thuzhāy decorated with fresh thiruththuzhāy (thul̤asi); mudi having hair; māyavanĕ ŏh amaśingly enjoyable one!; you (who are protector and the enjoyable one); kāyamum the body which binds; sīvanum bound soul; kazhivu piṛappu the death and birth (which occur to these); āy while at your disposal; pinnum further; (nī you); māyangal̤ deceptions such as avidhyā (ignorance), karma (puṇya/pāpa), vāsanā (impressions), ruchi (taste); seydhu created; vaiththi and placed;; ivai these; enna mayakkukkal̤ what kind of bewildering acts!; arul̤āy mercifully explain; mayakkā ŏh one who mesmeriśed mahābali #s heart by your form, walk and speech vāmananĕ- ŏh vāmana!; madhiyām vaṇṇam to grant knowledge (after eliminating my confusions)

TVM 7.8.6

3535 மயக்கா! வாமனனே! மதியாம்வண்ணமொன்றருளாய் *
அயர்ப்பாய்த்தேற்றமுமாய் அழலாய்க்குளிராய்வியவாய் *
வியப்பாய்வென்றிகளாய் வினையாய்ப்பயனாய், பின்னும்நீ *
துயக்காய்நீநின்றவாறு இவையென்னதுயரங்களே!
3535 மயக்கா வாமனனே! * மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் *
அயர்ப்பு ஆய்த் தேற்றமும் ஆய் * அழல் ஆய்க் குளிர் ஆய் வியவு ஆய் **
வியப்பு ஆய் வென்றிகள் ஆய் * வினை ஆய்ப் பயன் ஆய் பின்னும் நீ *
துயக்கு ஆய் நீ நின்றவாறு * இவை என்ன துயரங்களே (6)
3535 mayakkā vāmaṉaṉe! * mati ām vaṇṇam ŏṉṟu arul̤āy *
ayarppu āyt teṟṟamum āy * azhal āyk kul̤ir āy viyavu āy **
viyappu āy vĕṉṟikal̤ āy * viṉai āyp payaṉ āy piṉṉum nī *
tuyakku āy nī niṉṟavāṟu * ivai ĕṉṉa tuyaraṅkal̤e (6)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Vāmaṉa, of captivating allure, please grant me understanding. It seems that the individuals ensnared in the whirlpool of diverse experiences—heat and cold, wonder and the wondrous, confusion and clarity, victory and defeat, good and bad deeds, and their repercussions—are all ordained by You. However, the immense sorrows inflicted upon Your subjects by such playful activities of Yours remain perplexing.

Explanatory Notes

The Saint enquires of the Lord whether He would keep even His votaries, unto Him solely devoted, bewildered like the demoniac Mahābali. May be, it is all part of His līlā (Sport) but what a lot of distress it brings on His subjects!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மயக்கா! மயக்குகின்றவனே!; வாமனனே! வாமனனே!; மதி ஆம் எனக்குக் கலக்கம் தீர்ந்து; வண்ணம் அறிவு உண்டாம்படி; ஒன்று அருளாய் அருளிச் செய்ய வேண்டும்; அயர்ப்பாய் மறதியாகி நீயே; தேற்றமுமாய் தெளிவாகி; அழலாய் வெப்பமாகி; குளிராய் நீயே குளிர்ச்சியாகி; வியவாய் ஆச்சர்யமாகி; வியப்பாய் ஆச்சர்யப்படும் பொருளாகி; வென்றிகளாய் வெற்றிகளாகி; வினையாய் பாப புண்ய கர்மங்களாகி; பயனாய் அவற்றின் பலன்களும் நீயே ஆகி; பின்னும் நீ மேலும் நீ உன் அடியார்களுக்கு; துயக்காய் துயரம் உண்டாகும்படி; நீ நின்றவாறு நீ நிற்கும் விதம்; இவை என்ன இவை எங்களுக்கு; துயரங்களே! துயரங்களாக இருக்கின்றனவே!
onṛu one thing; arul̤āy mercifully explain;; ayarppu forgetfulness; thĕṝamum clarity; āy having at your disposal; azhal heat; kul̤ir coolness; āy having at your disposal; viyavu amaśement; viyappu objects which cause amaśement; āy having at your disposal; venṛigal̤ victorious abilities in this world; āy having at your disposal; vinai deeds in the form of puṇya (virtues) and pāpa (vices); payan their respective results; āy having at your disposal; pinnum further; thuyakku the bewilderment of chĕthanas in these aspects; āy having at your disposal; (nī you); ninṛa in this manner, being the enjoyer of such aspects; āṛu means; enna what; thuyarangal̤ kind of sufferings!; thuyarangal̤ sorrows as per karma; seyyyum while doing that

TVM 7.8.7

3536 துயரங்கள்செய்யுங்கண்ணா! சுடர்நீண்முடியாய்! அருளாய் *
துயரஞ்செய்மானங்களாய் மதனாகியுகவைகளாய் *
துயரஞ்செய்காமங்களாய்த் துலையாய்நிலையாய்நடையாய் *
துயரங்கள்செய்துவைத்தி இவையென்ன சுண்டாயங்களே!
3536 துயரங்கள் செய்யும் கண்ணா * சுடர் நீள் முடியாய் அருளாய் *
துயரம் செய் மானங்கள் ஆய் * மதன் ஆகி உகவைகள் ஆய் **
துயரம் செய் காமங்கள் ஆய்த் * துலை ஆய் நிலை ஆய் நடை ஆய் *
துயரங்கள் செய்து வைத்தி * இவை என்ன சுண்டாயங்களே (7)
3536 tuyaraṅkal̤ cĕyyum kaṇṇā * cuṭar nīl̤ muṭiyāy arul̤āy *
tuyaram cĕy māṉaṅkal̤ āy * mataṉ āki ukavaikal̤ āy **
tuyaram cĕy kāmaṅkal̤ āyt * tulai āy nilai āy naṭai āy *
tuyaraṅkal̤ cĕytu vaitti * ivai ĕṉṉa cuṇṭāyaṅkal̤e (7)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Kaṇṇā, with Your radiant crown, You subject me to great distress, presenting numerous temptations and unwholesome desires, leading to misery for all beings, both stationary and mobile. I wonder why You engage in such troublesome play.

Explanatory Notes

(i) The Lord, proclaimed by the upaniṣads as an inexhaustible fountain of bliss, is addressed by the Saint, in this song, as the Inflictor of miseries. The fact of the matter is that, on visualising the Lord sporting the resplendent crown, the Saint’s longing for communion with Him has been intensified and he feels miserable. This is but the language of the Saints, in + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துயரங்கள் செய்யும் துயரங்களைச் செய்யும்; கண்ணா! கண்ணனே!; சுடர் நீள் ஒளி உடைய நீண்ட; முடியாய்! முடி உடையவனே!; துயரம் செய் துக்கத்தை உண்டாக்கும்; மானங்களாய் பலவகைப்பட்ட துரபிமானங்களாய்; மதன் ஆகி செருக்குமாய்; உகவைகளாய் மகிழ்ச்சிகளாகியும்; துயரம் செய் துக்கங்களை விளைக்கிற; காமங்களாய் காமங்களாய்; துலையாய் அவைகளின் அளவாகியும்; நிலையாய் நிற்பவையாகியும்; நடையாய் நடப்பவையாகியும்; துயரங்கள் இப்படிச் சேதனர்களுக்கு துயரத்தை; செய்து வைத்தி செய்து வைத்தாய்; இவை என்ன இவை என்ன; சுண்டாயங்களே! சுயநலக் காரியங்கள்!; அருளாய் அருளிச் செய்ய வேண்டும்
kaṇṇā in his incarnation; sudar nīl̤ mudiyāy oh one who conducts without differentiation in your supreme state!; thuyaram sey being the cause of sorrow; mānangal̤āy pride caused by being born in high family heritage etc; madhanāgi (as said in -ĕthĕmadhā:-) arrogance which is caused by pride etc; ugavaigal̤āy pleasures derived from those arrogance etc; thuyaram sorrows such as affection [towards such pleasures]; sey causing; kāmangal̤āy lust in the form of thirst for such pleasures; thulaiyāy the evolution which cause variations in such objects; nilaiyāy nadaiyāy their existence and movements; thuyarangal̤ sorrows; seydhu created; vaiththi and placed;; ivai these; enna suṇdāyangal̤ what kind of selfish acts which lead to sorrow to others?; arul̤āy mercifully explain; enna suṇdāyangal̤āl with what selfish, sportive activities; enganĕ in what manner

TVM 7.8.8

3537 என்னசுண்டாயங்களால் நின்றிட்டாய்? என்னையாளுங்கண்ணா! *
இன்னதோர்தன்மையையென்று உன்னையாவர்க்குந்தேற்றரியை *
முன்னியமூவுலகுமவையாய் அவற்றைப்படைத்து *
பின்னும்உள்ளாய்! புறத்தாய்! இவையென்ன இயற்கைகளே!
3537 என்ன சுண்டாயங்களால் * நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா? *
இன்னது ஓர் தன்மையை என்று * உன்னை யாவர்க்கும் தேற்றரியை **
முன்னிய மூவுலகும் * அவை ஆய் அவற்றைப் படைத்து *
பின்னும் உள்ளாய் புறத்தாய்! * இவை என்ன இயற்கைகளே (8)
3537 ĕṉṉa cuṇṭāyaṅkal̤āl * niṉṟiṭṭāy ĕṉṉai āl̤um kaṇṇā? *
iṉṉatu or taṉmaiyai ĕṉṟu * uṉṉai yāvarkkum teṟṟariyai **
muṉṉiya mūvulakum * avai āy avaṟṟaip paṭaittu *
piṉṉum ul̤l̤āy puṟattāy! * ivai ĕṉṉa iyaṟkaikal̤e (8)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Kaṇṇā, my Master, Your playfulness is beyond comprehension. You create and control the three worlds, pervading them inside and out with your immense power.

Explanatory Notes

(i) The Lord’s sports are many and inscrutable. Even the wisest and the most exalted can hardly plumb the depths of His mysteries, His disposition and dispensation.

(ii) The Vedas proclaim that the Lord’s immanence is full and complete, in and out, even inside the minutest object of sub-atomic size, which, of course, baffles intellectual comprehension.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை ஆளும் என்னை ஆளும்; கண்ணா கண்ணனே!; என்ன என்ன; சுண்டாயங்களால் விளையாட்டுக்களை உடையவனாக; நின்றிட்டாய் நிற்கிறாய்; இன்னது ஓர் தன்மையை இன்ன தன்மை உடையவன் நீ; என்று உன்னை என்று உன்னை; யாவர்க்கும் ஓருவர்க்கும் நிர்ணயித்துக் காட்ட; தேற்றரியை முடியாதவனாய் நிற்கிறாய்; முன்னிய நித்தியமான; மூவுலகும் மூவுலகங்களுக்கும்; அவையாய் நிர்வாஹகனாய்; அவற்றைப்படைத்து அவற்றைப் படைத்தும்; பின்னும் உள்ளாய்! அவற்றின் உள்ளும்; புறத்தாய்! புறமும் வியாபித்திருக்கிறாய்; இவை என்ன இவை என்ன; இயற்கைகளே! ஸ்வபாங்களாயிருக்கின்றன!
ninṛittāy you remain; en kaṇṇā oh krishṇa who is obedient towards me!; innadhuŏr this; thanmaiyai having particular nature; enṛu as; unnai you who are inconceivable; yāvarkkum even for the most intelligent persons; thĕṝa to determine; ariyai and difficult to know;; munniya being without a beginning and continuously flowing; mū ulagum three types of worlds such as kruthaka, akruthaka and kruthākruthaka; avaiyāy being antharyāmi for them; avaṝai those; padaiththu create; pinnum further; ul̤ pervading inside as antharyāmi; puṛam pervading outside as the support; āy you are having;; ivai these; enna what; iyaṛkaigal̤ nature of acts?; ennai me; āl̤um enslaving

TVM 7.8.9

3538 என்னவியற்கைகளால் எங்ஙனேநின்றிட்டாய்? என்கண்ணா! *
துன்னுகரசரணம்முதலாக எல்லாவுறுப்பும் *
உன்னுசுவையொளி ஊறொலிநாற்றம்முற்றும்நீயே *
உன்னையுணரவுறில் உலப்பில்லைநுணுக்கங்களே!
3538 என்ன இயற்கைகளால் * எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா? *
துன்னு கரசரணம் முதலாக * எல்லா உறுப்பும் **
உன்னு சுவை ஒளி * ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே *
உன்னை உணரவுறில் * உலப்பு இல்லை நுணுக்கங்களே (9)
3538 ĕṉṉa iyaṟkaikal̤āl * ĕṅṅaṉe niṉṟiṭṭāy ĕṉ kaṇṇā? *
tuṉṉu karacaraṇam mutalāka * ĕllā uṟuppum **
uṉṉu cuvai ŏl̤i * ūṟu ŏli nāṟṟam muṟṟum nīye *
uṉṉai uṇaravuṟil * ulappu illai nuṇukkaṅkal̤e (9)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Indeed, dear devotee, the intricacies of my being are endless. I control the senses—the avenues through which you experience the world: taste, sight, sound, touch, and smell. Each sense offers its own unique perception, and I oversee them all with boundless care and wisdom.

Explanatory Notes

The intricate glory of the Lord with its innumerable facets defies description and baffles scrutiny. The deeds performed by the vast multitude of His subjects, with the help of the bodies and limbs dowered on them by Lord, the senses five and their subtle bases, the elements from which they emanate, all these are directed and controlled by the Lord, standing within all things and beings; There is no end to such intricacies.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் கண்ணா என் கண்ணனே!; என்ன இயற்கைகளால் எவ்வகைத் தன்மைகளில்; எங்ஙனே நின்றிட் டாய் எவ்விதம் நீ நிற்கிறாய்; துன்னு செறிந்திருக்கும்; கரசரணம் கர்மேந்திரியங்கள் ஞானேந்திரியங்கள்; முதலாக எல்லா முதலான எல்லா; உறுப்பும் உறுப்புக்களும் நீயே; உன்னு விரும்பத்தக்க; சுவை ஒளி ஊறு ரஸம் ரூபம் ஸ்பர்சம்; ஒலி நாற்றம் சப்தம் கந்தம்; முற்றும் நீயே இவை அனைத்தும் நீயே; உன்னை உன்னை; உணரவுறில் அறிய நினைத்தால்; நுணுக்கங்களே நுணுக்கங்களுக்கு; உலப்பு இல்லை எல்லை இல்லாதவனாக இருக்கிறாய்
kaṇṇā ŏh krishṇa!; enna iyaṛkaigal̤āl īn which manner; ninṛittāy you mercifully remain?; thunnu well seated (in the body); kara saraṇam mudhalāga karmĕndhriya and gyānĕndhria such as hands, feet etc; ellā uṛuppum all organs; unnu to have the mind deeply engage with; suvai ol̤i ūṛu oli nāṝam rasa (taste), rūpa (form), sparṣa (touch), ṣabdha (sound) and gandha (smell); muṝum all pleasures; nīyĕ to be you only; unnai you (who are the antharyāmi of them); uṇara uṛil if we set out to prove; nuṇukkangal̤ subtle aspects; ulappu boundary; illai not present.; idhanil than this; piṛidhu other

TVM 7.8.10

3539 இல்லைநுணுக்கங்களே இதனிற்பிறிதென்னும்வண்ணம் *
தொல்லைநன்னூலில்சொன்ன உருவும்அருவும்நீயே *
அல்லித்துழாயலங்கல் அணிமார்ப! என்னச்சுதனே! *
வல்லதோர்வண்ணம்சொன்னால் அதுவேஉனக்காம் வண்ணமே.
3539 இல்லை நுணுக்கங்களே * இதனில் பிறிது என்னும் வண்ணம் *
தொல்லை நல் நூலில் சொன்ன * உருவும் அருவும் நீயே **
அல்லித் துழாய் அலங்கல் * அணி மார்ப என் அச்சுதனே *
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் * அதுவே உனக்கு ஆம் வண்ணமே (10)
3539 illai nuṇukkaṅkal̤e * itaṉil piṟitu ĕṉṉum vaṇṇam *
tŏllai nal nūlil cŏṉṉa * uruvum aruvum nīye **
allit tuzhāy alaṅkal * aṇi mārpa ĕṉ accutaṉe *
vallatu or vaṇṇam cŏṉṉāl * atuve uṉakku ām vaṇṇame (10)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Indeed, dear devotee, I exist in all forms—both sentient and non-sentient, subtle and gross. The ancient Vedas, filled with wisdom, speak of my omnipresence, encompassing all that is known and unknown. Yet, for my devotees, I am simply what they perceive and contemplate me to be, their understanding shaping their devotion.

Explanatory Notes

Both in the unmanifest (subtle) state and the manifest (gross) state, the Lord is in conjunction with the formless individual souls and the shapely non-sentient things. This is revealed by the Vedas, hoary and authentic. He is also visualised by the Saint, in His unique Form, bedecked with flowers and bejewelled, wielding conch and discus. Even the wisest sages and the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இதனில் பிறிது இதனைக் காட்டிலும் வேறு; நுணுக்கங்களே இல்லை நுணுக்கங்களே இல்லை; என்னும் வண்ணம் என்னும் வண்ணம்; தொல்லை தொன்மையான; நல் நூலில் சொன்ன வேதத்தில் சொன்ன; உருவும் வடிவமுள்ள அசித்தாகவும்; அருவும் அருவமான சித்தாகவும்; நீயே நீயே இருக்கிறாய்; அல்லித் துழாய் துளசி மாலை; அலங்கல் அணி மார்ப! அணிந்த மார்பை உடையவனே!; என் அச்சுதனே! என் அச்சுதனே!; வல்லது சொற்களின் வலிமையால்; ஓர் வண்ணம் உன் வடிவத்தைக் கூற இயலாது; சொன்னால் எந்த அளவில் உன் வடிவம் கூறப்படுகிறதோ; அதுவே உனக்கு அதற்குள்ளே நீ அமைந்து; ஆம் வண்ணமே காட்சி தருவதும் உன் அருளே ஆகும்
nuṇukkangal̤ subtler; illai not present; ennum vaṇṇam to say; thollai being anādhi (beginningless); nal having qualities such as apaurushĕyathvam (not authored by any one) etc; nūlil in vĕdha ṣāsthram; sonna mentioned by the term -thamas- (primordial matter); uruvum achith (insentient objects); aruvum chith (sentient beings); nīyĕ you became them [i.e. their antharyāmi] as mentioned in -sadhĕva-; alli having flower string; thuzhāy alangal thiruththuzhāy (thul̤asi) garland; aṇi having as decoration; thirumārba having the divine chest; en my; achchudhanĕ oh one who is having divine form, and who never lets your devotees fail!; valladhŏr vaṇṇam the great way; sonnāl even if said by vĕdham etc; unakku for you; adhuvĕ vaṇṇam the manner; ām it is (you remain obedient towards your devotes); ām apt; vaṇṇam mode

TVM 7.8.11

3540 ஆம்வண்ணமின்னதொன்றென்று அறிவதரியவரியை *
ஆம்வண்ணத்தால் குருகூர்ச்சடகோபனறிந்துரைத்த *
ஆம்வண்ணவொண்தமிழ்கள் இவையாயிரத்துள் இப்பத்தும் *
ஆம்வண்ணத்தாலுரைப்பார் அமைந்தார் தமக்கென்றைக்குமே. (2)
3540 ## ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று * அறிவது அரிய அரியை *
ஆம் வண்ணத்தால் * குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த **
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
ஆம் வண்ணத்தால் உரைப்பார் * அமைந்தார் தமக்கு என்றைக்குமே (11)
3540 ## ām vaṇṇam iṉṉatu ŏṉṟu ĕṉṟu * aṟivatu ariya ariyai *
ām vaṇṇattāl * kurukūrc caṭakopaṉ aṟintu uraitta **
ām vaṇṇa ŏṇ tamizhkal̤ * ivai āyirattul̤ ip pattum *
ām vaṇṇattāl uraippār * amaintār tamakku ĕṉṟaikkume (11)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Those who earnestly chant these ten songs from the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, revealing the Lord's profound essence, will forever bask in unending divine bliss.

Explanatory Notes

(i) The Scriptural texts contain many apparent discrepancies, one text seeming to contradict or be at variance with another and only the devout, blessed by the Lord Himself with clarity of vision and understanding, as in the case of Saint Nāmmāḻvār, can reconcile these apparent discrepancies and get at the Spiritual truths, in their correct perspective, shorn of all doubts, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆம் வண்ணம் இன்ன ஸ்வபாவமுடையவன்; இன்னது ஒன்று என்று இவ்வண்ணம் உடையவன் என்று; அறிவது அரிய ஒருவராலும் அறிய முடியாத; அரியை எம்பெருமானைக் குறித்து; ஆம் வண்ணத்தால் உள்ளபடியறிந்து; அறிந்து உரைத்த அருளிச் செய்த; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; ஆம் வண்ண தகுதியான சந்தஸ்ஸையுடைய; ஒண் தமிழ்கள் பொருந்திய ஓசையை உடைய அழகிய; இவை ஆயிரத்துள் தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; ஆம் வண்ணத்தால் இயன்றளவு; உரைப்பார் சொல்ல வல்லவர்கள்; தமக்கு என்றைக்குமே தாங்கள் என்றைக்கும்; அமைந்தார் எம்பெருமான் அநுபவத்துக்கு ஏற்றவர்கள் ஆவர்
innadhu onṛu of this particular type; enṛu aṛivadhu to know; ariya one who is difficult; ariyai sarvĕṣvara; kurugūrch chatakŏpan āzhvār who was granted unblemished knowledge and devotion; ām vaṇṇaththāl truly; aṛindhu knew; uraiththa mercifully spoke (matching ṣrīvaikuṇtam-s greatness); vaṇṇam poetic meter; ām having; oṇ having goodness of being pursued by everyone; thamizhgal̤ in thamizh; ivai āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; ām vaṇṇaththāl to their ability; uraippār those who can recite; thamakku for them; enṛaikkum for eternal experience; amaindhār prepared.; enṛaikkum ācknowledging first time so that it (such acknowledgement) is eternal; pŏgiya conducting