O Kaṇṇa! It is Impossible to Know You Completely.
கண்ணா! நின்னை முற்ற முடிய அறியமுடியாது
3538 என்னவியற்கைகளால் எங்ஙனேநின்றிட்டாய்? என்கண்ணா! *
துன்னுகரசரணம்முதலாக எல்லாவுறுப்பும் *
உன்னுசுவையொளி ஊறொலிநாற்றம்முற்றும்நீயே *
உன்னையுணரவுறில் உலப்பில்லைநுணுக்கங்களே!