Chapter 2

Parānkusa Nāyaki having a love quarrel with the Lord for coming late - (மின் இடை)

தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்
Unable to bear the separation from emperumAn, Āzhvār sends various birds as messengers. Realizing Āzhvār’s yearning, emperumAn wishes to run and grace Āzhvār with His presence just like how He had rescued the elephant held by the jaws of the crocodile. Cognizant of emperumān’s decision, “perumānE! There is nothing for you to do here; go someplace where + Read more
எம்பெருமானின் பிரிவாற்றமாட்டாமல் ஆழ்வார் புள்ளினங்களைத் தூது விட்டார். ஆழ்வாரின் துன்பத்தை அறிந்த எம்பெருமான், முதலை வாய்ப்பட்ட யானைக்கு அருள வந்தாற்போல் ஓடிவந்து காட்சி தர எண்ணினான். அப்போது ஆழ்வார், “பெருமானே! இங்கு உமக்குச் செய்யவேண்டுவது ஒன்றுமில்லை; காரியம் உள்ள இடத்திற்குச் + Read more
Verses: 3354 to 3364
Grammar: Āsiriyaththuṟai / ஆசிரியத்துறை
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will have no troubles in their lives
  • TVM 6.2.1
    3354 ## மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் * முன்பு நான் அது அஞ்சுவன் *
    மன் உடை இலங்கை * அரண் காய்ந்த மாயவனே **
    உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் * இனி அதுகொண்டு செய்வது என்? *
    என்னுடைய பந்தும் கழலும் * தந்து போகு நம்பீ (1)
  • TVM 6.2.2
    3355 போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும் * செவ்வாய் முறுவலும் *
    ஆகுலங்கள் செய்ய * அழிதற்கே நோற்றோமே யாம்? **
    தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் * செவி ஓசை வைத்து எழ *
    ஆகள் போகவிட்டுக் * குழல் ஊது போயிருந்தே (2)
  • TVM 6.2.3
    3356 போயிருந்து நின் புள்ளுவம் * அறியாதவர்க்கு உரை நம்பீ * நின் செய்ய
    வாய் இருங் கனியும் கண்களும் * விபரீதம் இந் நாள் **
    வேய் இரும் தடம் தோளினார் * இத் திருவருள் பெறுவார் எவர்கொல் *
    மா இரும் கடலைக் கடைந்த * பெருமானாலே? (3)
  • TVM 6.2.4
    3357 ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு * அன்று நீ கிடந்தாய் * உன் மாயங்கள்
    மேலை வானவரும் அறியார் * இனி எம் பரமே? **
    வேலின் நேர் தடம் கண்ணினார் * விளையாடு சூழலைச் சூழவே நின்று *
    காலி மேய்க்க வல்லாய்! * எம்மை நீ கழறேலே (4)
  • TVM 6.2.5
    3358 கழறேல் நம்பீ ! * உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் * திண் சக்கர
    நிழறு தொல் படையாய் * உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் **
    மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க * எம்
    குழறு பூவையொடும் * கிளியோடும் குழகேலே (5)
  • TVM 6.2.6
    3359 குழகி எங்கள் குழமணன்கொண்டு * கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை *
    பழகி யாம் இருப்போம் * பரமே இத் திரு அருள்கள்? **
    அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும் * தேவிமை ஈதகுவார் பலர் உளர் *
    கழகம் ஏறேல் நம்பீ * உனக்கும் இளைதே கன்மமே (6)
  • TVM 6.2.7
    3360 கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது * கடல் ஞாலம் உண்டிட்ட *
    நின்மலா நெடியாய்! * உனக்கேலும் பிழை பிழையே **
    வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி * அது கேட்கில் என் ஐம்மார் *
    தன்ம பாவம் என்னார் * ஒரு நான்று தடி பிணக்கே (7)
  • TVM 6.2.8
    3361 பிணக்கி யாவையும் யாவரும் * பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் *
    கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் * கதிர் ஞான மூர்த்தியினாய்
    இணக்கி எம்மை எம் தோழிமார் ** விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை *
    உணக்கி நீ வளைத்தால் * என் சொல்லார் உகவாதவரே? (8)
  • TVM 6.2.9
    3362 உகவையால் நெஞ்சம் உள் உருகி * உன் தாமரைத் தடம் கண் விழிகளின் *
    அக வலைப் படுப்பான் * அழித்தாய் உன் திருவடியால் **
    தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் * யாம் அடு சிறு சோறும் கண்டு * நின்
    முக ஒளி திகழ * முறுவல் செய்து நின்றிலையே (9)
  • TVM 6.2.10
    3363 நின்று இலங்கு முடியினாய்! * இருபத்தோர் கால் அரசு களைகட்ட *
    வென்றி நீள் மழுவா! * வியன் ஞாலம் முன் படைத்தாய்! **
    இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய * கருமாணிக்கச் சுடர் *
    நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் * ஆய்ச்சியோமே (10)
  • TVM 6.2.11
    3364 ## ஆய்ச்சி ஆகிய அன்னையால் * அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
    கூத்த அப்பன் தன்னை * குருகூர்ச் சடகோபன் **
    ஏத்திய தமிழ் மாலை * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும் *
    நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு * இல்லை நல்குரவே (11)